சு.பொ.அகத்தியலிங்கம்
இந்தப் புத்தகத்தில் இஸ்லாமிய உலகம் ஆயிரம் ஆண் டுகளுக்கு மேலாக ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்பதை விளக்க முயன்றுள்ளேன் . ” – என முன்னு ரையில் அல்ல 407 வது பக்கத்தில் நூலோட்டத்தில் நூலாசிரியர் கூறியுள்ள வரிகள் முற்றிலும் சரியானது .
“நான் இஸ்லாம் குறித்தும் அதன் மூலம் அதன் வரலாறு , அதன் கலாச்சாரம் , அதன் செல்வங்கள், அதன் பிரிவுகள் குறித்து எழுத விரும்புகிறேன் . அது ஏன் சீர்திருத்தத்துக்கு உள்ளாகவில்லை ? அது ஏன் இவ்வளவு பேரச்சத்திற்கு ஆட்பட்டுள்ளது ? குரானை அர்த் தப்படுத்தல் மத அறிஞர்களின் அதிகாரமாக இருக்க வேண்டுமா ? இன்று இஸ்லாமிய அரசியல் எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? இஸ்லாமிய உலகில் இந்தச் சூழல் மேலெழுவதற்கு இட்டுச்சென்ற நடைமுறைகள் யாவை ? இந்தப் போக்கை பின்னிழுக்கவோ மீறிச் செல்லவோ இயலுமா ? சில விஷயங்கள் இஸ்லாமிய உலகிற்குள்ளும் வெளியிலும் விவாதத்தை உருவாக்குமென்ற நம்பிக்கையில் ஆரா யப்பட்டுள்ளது. ” இவ்வாறு முன்னுரையில் மொழிந்திருப்பதற்கு இந் நூல் நியாயம் வழங்கி இருக்கிறது .
ஐந்து பாகங்கள் 26 அத்தியாயங்கள் 528 பக்கங்கள் என அளவில் மட்டுமல்ல; உள்ளடக்கத்திலும் மிகவும் கனமான நூல் . இதைப் படித்துச் செரிப்பது அவ்வளவு சுலபமானதுமல்ல . இஸ்லாமின் தோற்றம் , அது எதிர்கொண்ட இடையூறுகள் , சிலுவைப்போர்கள், அதன் தத்துவப் பின்னணி,ஆட்சியதிகாரப்போட்டி என அனைத்த யும் முதல் நூறு பக்கங்களில் விமர்சனப் பூர்வமாக சுண்டக்காய்ச்சிய பாலாக நூலாசிரியர் தந்துள்ளார் . ஏற்கெனவே இவ்வரலாற்றுச் செய்தி களை பருந்துப்பார்வையாகவேனும் அறிந்து வைத்திருந்தால் மட் டுமே இப்பக்கங்களை கூர்மையாக உள்வாங்க இயலும். .
அதே சமயம் இந்த அடித்தளத்தைப் புரியாமல் இன்றைய இஸ்லாமிய உலகச் சிக் கல்களை புரிந்து கொள்வதும் சிரமம் .“ இஸ்ரேல் ,பாகிஸ்தான் இரண்டிலுமே அவற்றை உருவாக்கிய தந்தைகள் ஒப்புக்கொள்ளும் அரசியலிலிருந்து தொலைவிலிருந்த னர். கடவுட் கொள்கையில் அவ்வளவாக நம்பிக்கையற்றவராக அறி யப்பட்ட ஜின்னா தமது மதத்தில் பல தடைகளை மீறியவர் . இஸ்ரே லின் பென்குரியனும் மோசே டயானும் தம்மை நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். எனினும் இந்த இரு நாடுகளையும் உருவாக்கியதில் அடிப்படைவாதிகளின் விருப்பத்திற்கெதிராக மதம் மையமான இலக்காகிப் போனது . ஜமாத் – இ – இஸ்லாமியும் அதன் யூதப்பங்காளிகளும் இந்த நாடுகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்தனர் . ” – இந்த பத்தியை மீண்டும் ஒருமுறை படியுங்கள் உள் ளீடாக இருந்த நுட்பமான முரண்பாடுகள் புரியும் . அதனை இந் நூலில் சில அத்தியாயங்களில் அலசி உரசிக் காட்டியுள்ளார் .
ஓட்டோமான் பேரரசு எனப்படும் துருக்கிப் பிராந்திய அரசின் நெடிய வரலாறும், துருக்கியில் கமாலும், எகிப்தில் நாசரும், இந் தோனேசியாவில் சுகர்னோவும், ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லாவும், இன்னும் சிலரும் வரலாற்றில் வகித்த முற்போக்குப் பாத்திரங்களும் இஸ்லாம் எப்போதுமே மதவெறிகொண்ட பயங்கரவாதிகளின் உலக மாக இருந்திடவில்லை என்பதை நினைவூட்டுகிறது .
இரண்டு உலகப்போர்கள் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்ப டித் தன்னை உலகப் போலீஸ்காரனாக சுயநியமனம் செய்துகொண்டது; பெட்ரோலுக்காக இஸ்லாமிய நாடுகளின் உள்விவகாரங்களில் எப்படிப் புகுந்து விளையாடியது ; ஜிகாத்தையும் ஆட்சியதிகாரத்தை யும் எப்படி பொம்மலாட்டம்போல் ஆட்டுவிக்கிறது ; கம்யூனிச எதிர்ப்பு என்கிற பனிப்போர் காலகட்டத்தில் இஸ்லாமிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாட மதவுணர்வை எப்படி முடுக்கி விட் டது ; சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும் – அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11 நிகழ்வுக்கு பிந்தைய காலகட் டத்திலும் அமெரிக்கா போடும் பயங்கரவாத எதிர்ப்பு வேடம் எத்தகையது – அதன் தத்துவ அடிப்படை என்ன? இப்படி ஒரு பரந்த சித்திரத்தை இந்நூல் நமக்குக் காட்டுகிறது .
இங்கு இந்துத்துவ வெறியர்கள் முஸ்லிம் மதத்தில் எதிர்ப்புகுரலே இல்லை ; இருந்தால் அழிக்கப்பட்டு விடும் என வரலாற்றை அறியா மல் உளறித்திரிகின்றனர் . “அன்வர் ஷேக் வழக்கு ” என்கிற 15 வது அத்தி யாயத்தை கண்டிப்பாக படிக்கவேண்டும் .கடந்த நூற்றாண்டில் மட்டுமே நஜீம் `ஹிக்மத் , பெயிஸ் அஹமது பெயிஸ் , அப்துல் ரகு மான் முனிஃப் , மகமுத் டார்விஷ் , ஃபாசில் இஸ்கந்தர் , நக்வி மக்போஸ், நிஸார் கப்பானி , பிரமோதய ஆனந்த டோயர் , ஜிப்ரில் டியோப் மம் பேடி, மற்றும் பலர் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இருந்துள்ளனர் ” என்கிறார் நூலாசிரியர் . இந்நூலாசிரியர் தாரிக் அலியே கூடதன்னை ஒர் நாத்திகர் என பெருமையோடும் அறிவுப்பூர்வமாகவும் பிரகடனப் படுத்திக் கொண்டவர். இடதுசாரிச் சிந்தனையாளர்.
இந்நூலை வரலாற்று நூலாக பொதுவில் வகைப்படுத்தலாம் ; எனினும் கூர்மையான தத்துவ விமர்சனமும் அரசியல் விமர்சனமும் ஊடும் பாவுமாய் இழையோடியுள்ளது . வரலாற்றைப் புரட்டிய பல கவிதைகள் , நாவல்கள் , சினிமாக்கள் என பல அரிய படைப்புகளை பொருத் தமான இடத்தில் கையாண்டு இந்நூலுக்கு உயிர்த்துடிப்பை வழங் கியுள்ளார் . இஸ்லாமிய உலகு குறித்த ஒரு அரிய நாவலெழுதும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தேடி சேகரித்த அறிவை இந்நூலில் தந்துள்ளார். இஸ்லாமிய உலகில் மார்க்சியம் உருவாக்கிய தாக்கங்களும் ; கம்யூனிஸ்டுகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளும் உரிய அங்கீகா ரம் பெற்றுள்ளதுடன் ; அதன் சரிவுகளும் தோல்விகளும் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது .
மத அடிப்படைவாதம் ஒற்றை இரவில் ஒசாமா பின்லேடன் என்கிற ஒற்றை மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும்; அந்த ஒசாமா பின்லேடனே அமெரிக்க ஏகாதிபத்திய உருவாக்கமே என்பதையும்; தூண்டிவிடப்பட்ட ஜிகாத்தின் பின்னே ஏகாதிபத்திய நலனும் பெட்ரோல் எண்ணெய்க்கிணறுகளின் மீதான பேராசையுமே உள்ளதையும் இந்நூல் நிறுவுகிறது .
அதே சமயம் “ ஒரு இளம் முஸ்லிமுக்கு கடிதம் ” என்கிற 22 வது அத்தியாயம் விடுக்கும் செய்தி மிக முக்கியமானது; இந்நூலின் குவி மையம் அதுதான்; “மதவாதம் எழுச்சி பெற்றதற்கு ஒரு பகுதி காரணம் புதிய தாராளவாதத்தின் உலகளாவிய கட்சிக்கு வேறு மாற்றுக் கண்டுபிடிக்க முடியாததால்தான் . இங்கு இஸ்லாமிய அரசுகளும் தமது நாட்டை உலகமயம் ஊடுருவ அனுமதிக்கும் வரை சமூக அரசியல் அரங்கில் தமக்கு வேண்டியதைச் செய்துகொள்ள அனு மதிக்கப்படும் என்பதை நீ காணலாம் . அமெரிக்கப் பேரரசு முன்பு இஸ்லாத்தை உபயோகித்தது . மீண்டும் அதைச் செய்ய முடியும். இங்குதான் சவால் இருக்கிறது.
அடிப்படைவாதிகளின் பைத் தியக்காரத்தனமான ஆசாரத்தன்மையையும் , பிற்போக்குத் தனத் தையும் அடித்துச் செல்லக்கூடிய ஒரு இஸ்லாமிய சீர்திருத்தம் தேவை. ஆனால் அதற்கும் மேலாக , இன்று இஸ்லாமிய உலகிற்கு மேற்கு அளிப்பதாகச் சொல்வதற்கும் மேலாக , முற்போக்கான புதிய யோசனைகளுக்கு இஸ்லாமிய உலகைத் திறந்துவிடுவது தேவை . இதற்கு ஆட்சியையும் மசூதியையும் உறுதியாகப் பிரிப்பது தேவைப்படும் ; மதகுருக்களை ஒழிப்பது தேவைப்படும்; இஸ் லாமியக் கலாச்சாரம் முழுமைக்கும் சொந்தமான புத்தகங்களை அர்த்தப்படுத்த முஸ்லிம் அறிவுஜீவிகள் தங்களுக்குள்ள உரி மையை நிலைநாட்டுதல் தேவைப்படுகிறது; சுதந்திரமாகவும், பகுத்தறிவுடனும் கற்பனை வளத்தோடும் சிந்திக்கிற உரிமை தேவைப்படுகிறது ; இந்த திசையில் நாம் செல்லாவிட்டால், நமது பழைய போர்களை மீண்டும் சந்திக்க நேரிடும் . புதிய மனிதாபி மானமிக்க செல்வம் மிக்க எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு மாறாக நிகழ்காலத்திலிருந்து பழையகாலத்துக்கு எப்படிச் செல்வ தென சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் .
இது ஏற்க முடி யாத பார்வை ” இப்படி நூலாசிரியர் எச்சரிப்பதும் வேண்டுவதும் இந்நூலின் முத்தாய்ப்பாகும்.கடினமான இந்நூலை கடிது முயன்று மொழியாக்கம் செய்த கி. ரமேஷூக்கும் வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் பாராட்டு களைத் தெரிவிக்காமல் இருக்க முடியாது . எனினும் இந்நூலின் கடினத்தன்மைக்கு மூலத்தின் அடர்த்திதாம் காரணமா , மொழி யாக்கமும் பங்கு வகிக்கிறதா என்பதை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வல்லுநர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும். மெசபொடோமியா என்பது ஈராக்கை மையமாகக் கொண்டது; ஒட்டோமான் பேரரசு துருக்கியை மையமாகக் கொண்டது என்பன போன்ற பழைய வரலாற்றுச் செய்திகளை புரிய ஏதுவாக ஒரு அருஞ்சொல் விளக்கப் பட்டியலை முன்பகுதி யிலேயே தொகுத்து வழங்கி இருக்கலாம் .
அது போல நூலினை சரியாக புரிந்து கொள்ள ஏதுவாக தமிழ் – ஆங்கில சொற்களஞ்சி யம் ஒன்றை பின் இணைப்பாக வழங்கி இருக்கலாம் . அந்தந்த காலகட்ட உலக வரை படம் தேவை . மெசபொடோமிய காலம், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலம் , இன்றைய உலகம் எனப் பிரித்து இணைப்பாகத் தருவது அவசியம்.இப் போதுகூட இவற்றை அச்சிட்டு மீதமுள்ள நூலுக்கு இணைப்பா கத் தருவது மிகமிக அவசியம் . ஏனெனில் இந்நூல் இடதுசாரி ஊழியர்கள் அவசியம் படித்து உள்வாங்கவேண்டிய நூலாகும்.
அடிப்படை வாதங்களின் மோதல்சிலுவைப்போர் ,ஜிகாத் ,நவீனத்துவம்
ஆசிரியர் : தாரிக் அலி ,தமிழில் : கி.ரமேஷ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 7 , இளங்கோ சாலை , தேனாம் பேட்டை ,சென்னை – 600 018.பக் : 528 , விலை : ரூ. 350 .