தமிழக மூத்த கல்வியாளர் திரு.ச.சீ.இராசகோபாலன் அவர்கள் எழுதிய ‘தமிழக பள்ளிக் கல்வி’ – கல்விச் சிந்தனைகள் என்னும் நூலில் பல்வேறு சமயங்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாகும்.
நூலின் உள்ளே பதினைந்து கட்டுரைகள்.மிகச் சிறிய நூல் தான் எனினும் ஒவ்வொரு கட்டுரையும் பேசுகின்ற கருப்பொருள்கள் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தையும்,புதியதொரு பார்வையும் பதிய வைத்துள்ளன.
கல்வி ஒரு அடிப்படை உரிமை தொடங்கி, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த எடுத்துக்கொண்ட சிரத்தையும்,காட்ஸ் ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் கல்வியும் அதனால் நிகழக் கூடிய மிகப்பெரிய ஆபத்தின் விளைவுகளையும் கூறுகின்றார்.
PTA எனப்படும் Parents Teachers Association (பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள்) உருவான வரலாற்றையும் பிற்காலத்தில் இச்சங்கம் உருவான நோக்கத்தை மறந்து வேறு பாதையில் பயணித்ததை பற்றியும் சுட்டுகின்றார்.
கல்வித்துறையில் சில நிர்வாக மாற்றங்களை முன்வைக்கிறார்.மேலும் தேர்வு, மற்றும் தொழிற்கல்வியில் புதுமையான மாற்றங்களையும்,காலத்திற்கேற்றார் போல் புதிய புதிய உத்திகளையும் கையாள வேண்டும் என்கிறார்.
தான் மேற்கொண்ட ரஷ்யா பயணத்தின் போது அங்கு அவர்கள் கல்விக்கு தருகின்ற முக்கியத்துவம் குறித்தும் அங்கு கையாளுகின்ற உத்திகளை குறித்தும் ரஷ்யாவில் கல்வி முறை என்னும் கட்டுரையில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
நூலின் உள்ளே பல கட்டுரைகள் இருப்பினும் சிலவற்றை மட்டுமே இங்கு பதிவு செய்துள்ளேன்.
கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்,அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள இந்நூலை கட்டாயமாக படிக்கலாம்.
நூல் : தமிழக பள்ளிக் கல்வி.
ஆசிரியர் : ச.சீ.இராசகோபாலன்.
பக்கங்கள் : 64.
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன். பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.40/-
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/thamizhaga-palli-kalvi-3361/