13 லிருந்து 19 வரை - நூல் அறிமுகம் - புக்ஸ் ஃபார் சில்ரன் - என்.மாதவன் |13 lirunthu 19 varai Children's Book review - Bharathi Puthakalayam - https://bookday.in/

13 லிருந்து 19 வரை – நூல் அறிமுகம்

13 லிருந்து 19 வரை – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் :

நூல் : 13 லிருந்து 19 வரை

ஆசிரியர் : என்.மாதவன்

விலை : ரூ.₹ 60/- 

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/

விற்பனை : 24332924

புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
                                     bharathiputhakalayam@gmail.com

குழந்தை மைய எழுத்தாளர் வாழும் கல்வியாளர் திரு மாதவன் அவர்களின் உளவியல் சார்ந்த புத்தகம்.

பள்ளி மாணவர்களின் பிரச்சனைகளை ஆசிரியரே ஏதாவது ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதற்குரிய காரணங்களை உளவியல் ரீதியாக ஆராய்ந்து எப்படி அதற்குரிய முடிவு எடுப்பது என்பது விளக்கியுள்ளார்.

மாணவர்களின் ஒவ்வொரு செயல்களையும் மாணவர்களை மையமாக வைத்து மாணவர்கள் மனதின் வழியாக ஆராய்வதே ஒரு ஆசிரியரின் வெற்றி எனப்புலப்படுத்தி உள்ளார்.

எல்லோரும் நல்லவராகவே பிறக்கின்றனர், மனிதனே மனிதனைக் கெட்டவனாக்கின்றான் என்று சமூக மற்றும் அரசியல் அறிஞர் ரூசோ தம் நூலில் முதல் வாக்கியமாகக் கூறுவார்.

ஒவ்வொரு செயலிற்கும் ஒரு பின்னணி இருக்கும். அதனை அறிவது ஆசிரியரது கடமை.

உள்ளத்தின் இயல்புகளை அறிவதே உளவியல் மாணவர்களின் மனதின் இயல்புகளை அறிவதே கல்வியியல்.

வீட்டுப் பாடம் செய்யாதிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். சோம்பல் காரணமாகச் செய்யவில்லை என்று முடிவெடுத்துத் தண்டிப்பது முறையல்ல.

எந்த ஒரு நிகழ்வும் நடக்கும் போதும் காரணங்களை ஒரு வழிப்பாதையாக யோசிக்க கூடாது.

12 கட்டுரைகளில் நிகழ்வுகளை கூறி அதற்குரிய காரணங்களை பல விதங்களில் ஆராய்ந்துள்ளார்

13 முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களை சக நண்பன் என்ற முறையில் அணுகினால் அவனை எளிதில் ஆசிரியர் வயப்படுத்தி நல்வழிப்படுத்தலாம்.

படிப்பதற்கு மிகவும் ஏற்ற அழகான எளிய நடையில் எழுதுவதில் மாதவன் ஐயா மிகவும் சிறந்தவர்.

எந்த ஒரு ஆசிரியரின் வகுப்பறை இருவழிப் பாதையாக உள்ளதோ அந்த வகுப்பறையே மகிழ்வான வகுப்பறையாக அமையும்.

இயந்திர மையக்கற்றல் உருவாகி வரும் இன்றைய சூழ்நிலையில் நமக்கு மாணவர்கள் மையக் கற்றல் முறையை நினைவுபடுத்துகிறார்.

நூல் அறிமுகம் எழுதியவர்:

வ.பெரியசாமி
புத்தக ஆர்வலன்
பட்டதாரி ஆசிரியர் கணிதம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *