"பதினாறு வயதினிலே (16 Vayathinile) விடலை As second parents, teachers have a great responsibility to develop the self-confidence of teenagers | பெண் குழந்தைகள் படும் பாடு - https://bookday.in/

“பதினாறு வயதினிலே” – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்:

நூல் : “பதினாறு வயதினிலே”
(பதிவு பருவ வலிகளும்- வழிகளும்)

நூலாசிரியர்: ரமாதேவி ரத்தினசாமி

விலை: ரூபாய் 25/-

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்பு எண்: O4424332424

 

“பறக்கட்டும் பறக்கட்டும் நம் பட்டாம்பூச்சிகள்”

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது மனிதனுடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவர்களுக்கும் வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலை கட்டமாகும்.

பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு வந்துள்ளது.

அண்மை காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு இப்போதுள்ள உணவுப் பழக்கம் தான் காரணம்.

உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 11 வயது முதல் 19 வயது வரை என வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவம் என்பது நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் தங்களது குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று பல பெற்றோர்களுக்கு இது தெரிவதில்லை.

விடலைப் பருவம் என்றவுடன் பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணம் தான் தோன்றுகிறது. இதனால் தங்களது குழந்தைகளை சமாளிக்க முடியாது விரக்தி அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அது போன்று வீட்டில் மட்டுமல்ல பள்ளிகளும் அறிவுரை கூறும் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் அறிவுரையை அள்ளி வீசுவார்கள்.

இதனால் வளரிளம் குழந்தைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக பெண் குழந்தைகள் படும் பாடு மிகவும் கொடுமையானது. பூப்பெய்தியவுடன் அவர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் மிக அதிகம். இதனால் பெண் குழந்தைகள் கடும் உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.

உடல் சார்ந்த குழப்பத்தில் இருக்கும் வளரிளம் பருவத்தினரிடையே ஆரோக்கியமே அழகு என்ற கருத்தை ஆழமாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் பதிய
வைக்க வேண்டும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஹார்மோன்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதோடு உடல் குறித்த அறிவியல் உண்மைகளைத் தெரிவிக்க வேண்டும். அறிவியல் ஆசிரியர்கள் இனப்பெருக்கம் குறித்து பாடம் நடத்தும் போது தெளிவான விளக்கங்களை எளிமையாக கூறி புரிய வைக்க வேண்டும்.

குறிப்பாக நல்ல தொடுகை (Good Touch) கெட்ட தொடுகை (Bad Touch) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

அது போன்று ஆண் குழந்தைகளைப் போலவே பெண் குழந்தைகளுக்கும் முழுமையான அவர்களது விருப்பமான கல்வியை வழங்க வேண்டும். குழந்தைகள் கேள்வி கேட்பதை அனுமதிக்க வேண்டும். கேள்வி கேட்பதன் மூலம் குழந்தையின் ஆராய்ச்சி மனப்பான்மை வளரும். நினைவாற்றலும் பெருகும்.

இளம் வயதில் இயற்கையாக ஏற்படும் இன கவர்ச்சியை ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகவும் அதிர்ச்சியோடு அணுகுவது அவசியம் அவர்களை அவர்களுக்கு ஏற்படும் தவறான எண்ணங்களை மாற்றி ஆண் பெண் இருவருக்குமான நட்பை உருவாக்க வேண்டும். அவர்களது கல்விக்கும் உடற்பயிற்சிக்கும் இத்தருணத்தில் வழி காட்டுவது மிகவும் அவசியம். குறிப்பாக ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

வளரிளம் பருவத்தினருக்கு அன்பு சூழ் உலகு வீட்டிலும் அறிவுசூல் உலகு பள்ளியிலும் ஏற்படுத்தித் தந்தால் நம் குழந்தைகள் பட்டாம்பூச்சி போன்று எளிமையாக பறந்து செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.

நூலாசிரியர் இந்நூலை அவருக்கே உரிய ஆசிரியர் அனுபவத்தில் எளிமையாகவும் பல்வேறு தகவல்களையும் அருமையாக பதிவு செய்துள்ளார்.

பெற்றோரும் குழந்தைகளும் ஆசிரியர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

 

நூல் அறிமுகம் எழுதியவர்:

MJ. பிரபாகர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. Varadarajan

    படிக்கத்தூண்டிடும் புத்தக அறிமுகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *