2012 முதல் ஆண்டு முதல் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிக்கு 12 வகையான விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார்கள். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

விருதுக்கு தேர்வானோர் விவரம்:
இந்த ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – அ.வெண்ணிலா (கங்காபுரம்), இரா.முத்து நாகு (சுளூந்தீ) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
பாரதியார் கவிதை விருது – கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது – டாக்டர் பழனி (நாலடியார்).
அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது – வி. டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்), முத்துதாண்டவர் தமிழிசை விருது – டி. கே. எஸ். கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்), பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு), முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது – சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்), சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மா.பூங்குன்றன் (தென்மொழி).
தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது – மணிமேகலை மன்றம், ராஜபாளையம், அருணாசலக் கவிராயர் விருது – திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது – பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).
விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அடுத்த விருதுகளை எப்போது பரிசீலினை செய்கின்றீர்கள் எனது படைப்பை ஏற்ப்பீர்களா
அடுத்த விருது எப்பொழுது?என்னுடைய தமிழ்! பிள்ளைத்தமிழ்!! நூலை அனுப்ப வேண்டும்.
என்னுடைய email address
[email protected]
*தமிழ்! பிள்ளைத் தமிழ்!!*
இது தமிழ் மொழியைத் தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகக் குழந்தையாகப் பாவித்து மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.
கண்ணே மணியே என்று வழக்கமாகப் பாடப்பெறும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய 10 பருவங்கள் இந்நூலில் வித்தியாசமான முறையில் உள்ளது.!
இந்த 10 பருவம் போகப் புதிதாக இக்காலதிற்கேற்ப கணினி, செம்மொழி என்ற 2 புதுப் பருவங்கள் சேர்க்கப்பெற்றுள்ளது.
செம்மொழிப் பருவம் பட்டாபிஷேகம் போல வர்ணிக்கப் பெற்றுள்ளது.
12 பருவங்களும், தமிழ் உயிரெழுத்துகள் 12ஐ நினைவூட்டுவதாக அமைந்து அவ்வுயிரெழுத்தே அந்த 10 பாடல்களின் முதல் எழுத்தாக ஆரம்பிக்கும்படி புதுமையாக உள்ளது.
இந்த நூல் எந்த சாதி, சமய, மத, இன வேறுபாடின்றி தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் போற்றுகிறது.10 பருவங்களிலும் ஆங்காங்கே தமிழகத்தில் உள்ள10 விதமான மலைகள் , நீர்நிலைகள் கட்டில்கள்,தொட்டில்களில் தமிழைச் சீராட்டி, 10விதமான பறவைகள் மலர்கள் கனிகளாக வர்ணித்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. வி.திருவள்ளுவன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு.இராம.கதிரேசன், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவர் திரு.இரவி, அழகப்பாப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் திரு.மா.கண்ணப்பன், திருவாடானை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் திரு.பழனியப்பன் போன்றவர்களின் அணிந்துரை, வாழ்த்துரை, வாழ்த்து மடல் மற்றும் மதிப்புரையோடும் மணிவாசகர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பெற்று காரைக்குடி கம்பன் திருவிழாவில் தமிழறிஞர் சோம.லெ. அவர்கள் புதல்வர் சோமசுந்தரம் அவர்களால் 17.03.2022 அன்று வெளியிடப்பெற்றது.
இந்நூலை எழுதிய ஆசிரியர் – மெ. சண்முகம் B.Sc., B.Ed., (ஓடாப்புலி நிவாஸ் ‘2020’, 94. மெ. மெ. வீதி, காரைக்குடி, 630001, சிவகங்கை மாவட்டம். அலைபேசி – 9976402342, 8248748170)
நூலை இணையத்தில் இலவசமாகப் படிக்க https://drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk