Election2024- sanitation | மோடி அரசு -சுகாதாரம்

எண்: 15

மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள்

சுகாதாரம்

சொன்னது

அரசாங்கத்தின் முக்கிய கூற்றுக்களில் ஒன்று, அதன் திட்டம் – அதாவது, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) – பராமரிப்பு செலவுகள் காரணமாக பல லட்சக்கணக்கானவர்களை ஏழைகளாக மாறுவதிலிருந்து காப்பாற்றியுள்ளது.

தற்போது ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் – சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவனவாக உள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஏழில் இருந்து 21 ஆக உயர்ந்துள்ளது.

2025 வாக்கில், ‘காசநோய் தோற்கும், நாடு வெல்லும்’ என்பதே நமது முழக்கமாகும்.

2047 ஆம் ஆண்டுக்குள், தேசிய சிக்கிள் செல் ஒழிப்பு இயக்கம் இந்த நோயை ஒழிக்கும்.

உண்மை நடப்பு

ஆண்டுதோறும் பி.எம்-ஜே.ஏ.ஒய்.க்கு ரூ. 6,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டாலும், அதில் பெரும்பாலானவை தனியார் மருத்துவமனைகளுக்கே செல்கின்றன.

அவை அட்டைதாரர்களுக்கு இலவச கவனிப்பை வழங்கவில்லை. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் மருத்துவக் காப்பீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கணிப்பு. எனினும் கிட்டத்தட்ட எந்த குடும்பமும் முழுத் தொகையையும் பெறவில்லை. உண்மையில், சுகாதாரச் செலவுகள் தாங்க முடியாததாகிவிட்டதை ஏழைக் குடும்பங்கள் கண்டுள்ளன. இந்த அட்டை பெரும்பாலான இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றவில்லை. இந்த திட்டத்திற்கான முழுப் பெருமையையும் மத்திய அரசு கோரினாலும், பெரும்பாலான மாநிலங்கள் ஏற்கனவே காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருந்தன. மேலும் மத்திய அரசு செலவுகளில் ஒரு பகுதியை மட்டுமே செலுத்த ஒப்புக்கொண்டது. மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் செலுத்துகின்றன.

கடந்த 70 ஆண்டுகளில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சுமார் 1.46 லட்சம் துணை சுகாதார நிலையங்களையும், 26,000 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நிறுவியுள்ளன. இதில் பெரும்பாலான நிதி மாநிலங்களிலிருந்து வருகிறது. இவற்றின் பெயர்களை மாற்றி புது வண்ணம் பூசிய மோடி அரசு, 1.6 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது. ஒரே ஒரு புதிய வசதி கூட மத்திய அரசால் உருவாக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இந்த பெயர்சூட்டும் நடைமுறைக்கு ஒத்துழைக்க மறுக்கும் மாநிலங்களுக்கு இந்த சேவைகளுக்காக எப்போதும் கிடைக்கக்கூடிய மத்திய நிதி கூட மறுக்கப்படுகிறது. இதேபோல், முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் அவுஷாதி கேந்திரங்கள், பிரதான் மந்திரி-பாரதிய ஜனௌஷாதி பரியோஜனா (PM-BJP)(!) என்று மறுபெயரிடப்பட்டுள்ளன.

உண்மையில், மோடி அரசாங்கம் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவியது. ஆனால் அவற்றில் பல வரையறுக்கப்பட்ட சேவைகளுடன் செயல்படுகின்றன.

இதேபோல் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. மாநில மருத்துவக் கல்லூரிகளை படிப்படியாக வலுப்படுத்துவதற்கு பதிலாக, மத்திய அரசால் மேலும் மேலும் நிர்வகிக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

மருத்துவக் கல்லூரி மற்றும் முதுநிலை கல்விக்கான இடங்களின் பெரும்பகுதி தனியார் துறையில் அதிகரித்துள்ளது, அங்கு கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

மிகக் குறைந்த பட்டதாரிகள் மட்டுமே பொதுச் சேவையில் பெறமுடியும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கேற்ப பொதுத்துறையில் பதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இறுதி முடிவு என்னவென்றால், நோயாளிகளுக்கு கட்டுப்படியாகும் மருத்துவ வசதி கிடைக்காது.

2025 க்குள் காசநோய் ஒழிக்கப்படுவதன் கள நிலைமை என்னவென்றால், அரசாங்கத்தின் சொந்த கணக்கெடுப்பின்படியே, 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் நோயின் தெளிவான அறிகுறிகளைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் சிகிச்சையின் வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை.

தேசிய சிக்கிள் செல் ஒழிப்பு இயக்கத்தின் கூற்றுக்களைப் பொருத்தவரை, தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். மேலும் தப்பிப்பிழைத்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சிகிச்சையை அணுகுவதற்கான வாய்ப்பு இல்லை.

தேசிய நலவாழ்வு இயக்கம்

மத்திய அரசு வழங்கும் நிதிகள் உண்மையான வரையறைகளில் பார்க்கும்போது இப்போது தேக்கமடைந்துள்ளன. எனவே முன்னதாக செலுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் சேவைகளின் அதிகரிக்கும் செலவுகளைக் கூட அவை ஈடுகட்டவில்லை. தேசிய சுகாதாரக் கொள்கையின்படி, மத்திய அரசின் சுகாதார செலவினங்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீதமாகவும், மத்திய அரசு பட்ஜெட்டில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவும் உள்ளன. இதற்குள்ளாகவே, தனியார் துறைக்கு கணிசமான நிதி பரிமாற்றம் நடைபெறுகிறது. அதாவது கண்ணுக்குத் தெரியாத வகையில் தனியார்மயமாக்கல்.

தனியார்மயமாக்கலையும் அரசு தீவிரமாக முயற்சித்து வந்துள்ளது. தேசிய சுகாதார ஆணையம் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் பிற அரசு வசதிகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எவ்வாறு அவுட்சோர்ஸ் செய்யலாம் என்பதற்கான மாதிரி ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது. மேலும் அவ்வாறு செய்ய மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார சேவையை தனியார்மயமாக்குவதையும் ஊக்குவித்து வருகிறது.

நம்பகமான ஆதாரங்களின் பற்றாக்குறை வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட போதிலும், உலகளாவிய பட்டினி குறியீட்டில் ஊட்டச்சத்து நிலையில் இந்தியாவின் தரவரிசை 125 நாடுகளில் 111 வது இடத்திற்கு சரிந்தது என்பது அறியப்படுகிறது.

உயரக் குறைவு அல்லது வளர்ச்சி குன்றுதல் என அனைத்து குறியீடுகளும் தேக்கமடைந்துள்ளன அல்லது மோசமடைந்துள்ளன. GHI குறியீடு முந்தைய 8 ஆண்டுகளில் 12 மடங்கிற்கும் அதிகமாக ஒப்பிடும்போது சமீபத்திய 8 ஆண்டுகளில் 0.5 புள்ளிகள் மட்டுமே மேம்பட்டுள்ளது (இந்து அக். 12, 2023).

2017-18 முதல் சராசரி ஆயுட்காலம் தேக்கமடைந்துள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டில் தொற்றுநோய் காரணமாக அது மேலும் குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி, கோவிட் 19 காரணமாக, இந்தியாவில் 47 லட்சம் இறப்புகள் வழக்கமான இறப்பை விட அதிகம். இது உலகின் மிக உயர்ந்த இறப்பு விகிதங்களில் ஒன்றாகும்.

சுகாதார விளைவுகள் பற்றிய தகவல்களின் அனைத்து முக்கியமான அறிவியல் ஆதாரங்களையும் அரசாங்கம் மறைத்துவிட்டது; அல்லது நியாயமற்ற முறையில் தாமதப்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய வழக்கமான சிவில் பதிவு அமைப்பு தரவு மற்றும் மாதிரி பதிவு அமைப்பு தரவு கூட 2020 ஆம் ஆண்டிற்கான தரவுகளுக்குப் பிறகு வெளியிடப்படவில்லை.
சி.ஆர்.எஸ் அடிப்படையிலான இறப்பு குறித்த காலமுறை அறிக்கை கடைசியாக 2014ஆம் ஆண்டுக்குக் கிடைத்தது. நோயுற்ற தன்மை மற்றும் பராமரிப்பு செலவு குறித்த தேசிய மாதிரி கணக்கெடுப்பு சுற்றுகள் 2018 க்குப் பிறகு கிடைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட என்.எஸ்.எஸ் 75வது சுற்று பராமரிப்பு செலவில் பெரும் அதிகரிப்பைக் காட்டியது. சுகாதார தகவல்களின் மற்றொரு முக்கியமான ஆதாரம் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆகும். இது கடைசியாக 2019-21 இல் செய்யப்பட்டது. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து விளைவுகள், நமது எதிர்பார்ப்புகள் மற்றும் உரிமைகோரல்களுக்குக் கீழே இருப்பதைக் காட்டியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மருந்துத் தொழில் 46 பில்லியன் டாலரிலிருந்து 130 பில்லியன் டாலர் வரை விரிவடைந்துள்ளது. மருத்துவமனைத் தொழில் 2017இல் 62 பில்லியன் டாலரில் இருந்து 2023 132 பில்லியன் டாலராக வளர்ந்தது. டிஜிட்டல் ஹெல்த்கேர் சந்தை நான்கு மடங்காக உயர்ந்து 485 பில்லியன் டாலராக உயர்ந்தது.

2023 வாக்கில், வேறு எந்தத் துறையையும் விட மருந்துத் துறையில் அதிக பணக்காரர்கள் (133) இருந்தனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், – அவற்றில் பல, நெறிமுறையற்ற நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளன – தேர்தல் பத்திரங்களை அதிக அளவில் வாங்குவோரில் ஒன்றாக உள்ளன என்பது நம் கவனத்தைக் கவரும் செய்தியாகும்.

கூட்டாட்சி முறையின் மீதான தாக்குதல்கள் பொது சுகாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கும். மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி சுருங்கி வரும் நிலையில், சுகாதாரத் துறையின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

தேசிய மருத்துவ ஆணையங்கள் சட்டம், தேசிய சுகாதார ஊழியர்கள் சட்டம் மற்றும் தேசிய செவிலியர் ஆணைய சட்டம் என மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கைக்கான மையப்படுத்தப்பட்ட தேசிய தேர்வுகளை திணிப்பதற்கும், இப்போது நிர்வாக ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் மூலம், ஊழல் என்று அழைக்கப்பட்டதை சட்டப்பூர்வமாக்குவதற்கும் இப்போது வெளியேறும் தேர்வுகளை மையப்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் வற்புறுத்தலுக்குப் பிறகும், ஆசிரியர்கள் மற்றும் வருகைப்பதிவு குறித்த தகவல்கள் கூட பொதுக் களத்தில் வைக்கப்படவில்லை.

பொது சுகாதாரம் மற்றும் பெண்கள், ஆதிவாசிகள், தலித்துகள் ஆகிய பிரிவினரின் சுகாதாரம் குறித்த பாஜக அரசுகள் மேற்கொண்டுவரும் கொள்கைகளின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் இலவச சுகாதார வசதி!

பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவோம்!

பாஜகவை தோற்கடிப்போம்!

 

Communist Party of India (Marxist)

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *