Election2024- Modi- Agricultural workers | மோடி அரசு -விவசாயத் தொழிலாளர்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “விவசாயத் தொழிலாளர்கள்”

பரப்புரை எண்: 6

மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள்

விவசாயத் தொழிலாளர்கள்

சொன்னது

கிராமப்புற மக்களின் வருவாய் அதிகரித்துள்ளத

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறத் தொழிலாளர்கள் இப்போது சமூகப் பாதுகாப்பினை அனுபவித்து வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஆதார வளங்களில் சமமான பங்கினைப் பெறுகின்றனர்.

உணவை விளைவிப்பவர்கள் அன்ன தாதாக்கள் ; அதிகாரம் பெற்றவர்கள்.

விவசாய தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் சமூகப்பாதுகாப்பு

உண்மை நடப்பு

பாஜக தலைமையிலான மத்திய அரசால் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் விவசாய நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, கிராமப்புற இந்தியாவில் மாபெரும் வேலையின்மை உருவாகியுள்ளது.

உழைப்பினை இடப்பெயர்ச்சி செய்யும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், விவசாய துறையில் உடலுழைப்பு தேவை மிகக் குறைந்த அளவிற்கே தேவைப்படுகிறது. முக்கிய விவசாய மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களுக்கான ஊதியங்கள் 2013-14 முதல் 2018-19 வரையில் ஆண்டுக்கு 3 சதவீதம் குறைந்து கொண்டே வந்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைத்தது மற்றும் மானியங்கள் குறைப்பு, பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி அமலாக்கம் ஆகியவை கிராமப்புற ஊதிய வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள். அகில இந்திய அளவில் முக்கிய கிராமப்புற தொழில்களுக்கான ஊதிய விகிதங்களின் வளர்ச்சியில் கூர்மையான சரிவு ஊரடங்கு காலத்திலிருந்து காணப்பட்டது. எனினும் இந்தச் சரிவு கொரோனா தொற்றுப் பரவலுக்கு முன்பே 2019 ஜூனில் தொடங்கியிருந்தது.

நிதி அமைச்சகம் அதன் 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2022 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்ந்த பணவீக்கம் காரணமாக உண்மையான கிராமப்புற ஊதியங்களில் (அதாவது பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட கிராமப்புற ஊதியங்கள்) எதிர்மறையான வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

பாஜக ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள் தொழிலாளர்கள் தேசிய சராசரியை விட மிகக் குறைவான தினசரி ஊதியத்தைப் பெறுகின்றனர் என்று சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. குஜராத்தில் விவசாயத் தொழிலாளர்கள் தினக்கூலியாக ரூ. 241.90 பெறுகின்றனர். இது தேசிய சராசரியான ரூ. 345.70-ஐ விட நூறு ரூபாய் குறைவு. மத்தியப் பிரதேசத்தில் மிகக் குறைந்த தினசரி ஊதியம் ரூ. 221. 90 ஆகும். அதேநேரத்தில், கேரளாவில் தொழிலாளர்களுக்கு மிக உயர்ந்த தினசரி ஊதியம் உள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ. 764.30 மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 852.50 ஆகும்.

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் அதன் மதிப்பை நிரூபித்த போதிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை ஒழித்துக் கட்டத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு அடுத்தடுத்த மத்திய பட்ஜெட்டுகளில் இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. மொத்த பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. 2013-14 நிதியாண்டின்போது மொத்த பட்ஜெட்டில் இத்திட்டத்தின் பங்கு 1.98 சதவீதமாக இருந்தது. இது 2023-24ஆம் ஆண்டிற்கான மொத்த பட்ஜெட்டில் 1.33 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள், ஆர்வலர்களின் கூட்டமைப்பான லிப்டெக் இந்தியா வழங்கிய தரவுகளின்படி இத்திட்டத்தில் செயல்பட்டு வந்த 7.6 கோடி வேலை அட்டைகள் கடந்த 21 மாதங்களில் கணினி மூலமான தரவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் (2023-24) திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் எவ்வித அதிகரிப்பும் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ. 86,000 கோடியும், நடப்பாண்டில் இதுவரை இத்திட்டத்திற்கு ரூ. 88,309.72 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்விளைவாக, 100 நாட்கள் வேலை உத்தரவாதம் இருந்தபோதிலும் வழங்கப்பட்ட சராசரி வேலை நாட்கள் 2020-21 (51.52 நாட்கள்) தொற்று நோய்ப் பரவல் நிலவிய ஆண்டைத் தவிர ஒரு போதும் 50 நாட்களைத் தாண்டவில்லை. கடந்த ஆண்டு சராசரி வேலைநாட்கள் 47 நாட்கள் மட்டுமே. இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் 2021-22ஆம் ஆண்டில் 208 சதவீதமாகவும், 2022-23ஆம் ஆண்டில் 216.57 சதவீதமாகவும் உள்ளது. இது ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு எதிரானது. கொடுப்பனவுகள் தாமதமாகும்போது உண்மை ஊதியம் குறைவதைக் காண நேர்கிறது.

மோடி அரசின் நவீன தாராளமய அணுகுமுறை இத்திட்டம் தேவையற்றது என்று கருதுவது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இது ஒரு தடையாக உள்ளது என்றும் கருதுகிறது.

சமூக நல அரசு என்ற கருத்தாக்கமே அந்நிய மற்றும் இந்திய மூலதனத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதது. விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும் அளவிற்கு நெருக்கடி கடுமையாக உள்ளது. இது அவர்கள் வாழும் மன அழுத்த நிலைமைகளைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு தேசிய குற்றப் பதிவு அலுவலகத்தின் அறிக்கையின்படி 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 2014 முதல் இதுவரை 40,685 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் கொள்கைகள் இந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள பரிதாபகரமான வகையில் தவறிவிட்டன.

நிலமற்ற தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகளின் பிற பிரிவினர் பல ஆண்டுகளாக கிடைக்கும் எனக் காத்திருக்கும் மிக முக்கியமான, வளமான நிலங்கள் இப்போது பாஜக அரசால் கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் கணக்கெடுப்புகளின் தரவு 2018-19ஆம் ஆண்டில் சுமார் 41 சதவீத கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஒரு சிலரின் கைகளில் நிலம் குவிந்திருப்பது இந்தியாவின் கிராமங்களில் இன்னும் அன்றாட நடைமுறையாகவே உள்ளது.

மேலும் 2018-19ஆம் ஆண்டிற்கான தரவுகள் கிராமப்புறக் குடும்பங்களில் முதல் 20 சதவீதத்தினர் மொத்த நிலங்களில் 76 சதவீதத்தை தங்கள் வசம் வைத்துள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அரசு பல்வேறு நோக்கங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துகிறது. இதன் முதன்மை பயனாளிகள் கார்ப்பரேட்டுகளே.

இது சிறு, குறு விவசாயிகளை இடம்பெயரச் செய்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் கூட தாங்கள் பயிரிட்ட சிறு துண்டு நிலங்களை இழந்து வருகின்றனர்.

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்காக விவசாயிகளுக்கு மிகக் குறைந்த அளவிற்கே இழப்பீடு கிடைக்கிறது. ஆனால் விவசாயத் தொழிலாளர்களோ இந்த நிலத்தில் எந்தவகையிலும் இழப்பீடு இல்லாமல் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.

பாஜக அரசைப் பொறுத்தவரையில், அன்ன தாதாக்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது விவசாயத் தொழிலாளர்களை உள்ளடக்கியதல்ல. பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை. மேலும் அவர்கள் அரசிடம் இருந்து எவ்வித உதவியையும் பெறவில்லை.

பயிர் காப்பீட்டு இழப்பீட்டின் அற்பப் பயன்கள் கூட பங்குதாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்குப் பொருந்தாது. கடன் மற்றும் கடன் முறையின் நிலையும் இதேதான்.

கேரளாவைத் தவிர, விவசாய, கிராமப்புற தொழிலாளர்களுக்கு சமூக ஓய்வூதியம் வழங்குவதற்கு மத்திய அரசோ அல்லது வேறு எந்த மாநில அரசோ எந்தவொரு குறிப்பிட்ட திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. கேரள விவசாய தொழிலாளர் நல நிதி வாரியம் பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்தை உறுதிப்படுத்துகிறது. இடது ஜனநாயக முன்னணி தலைமையிலான கேரள அரசு மட்டுமே வலுவான பொதுத்துறை மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மக்களுக்கு உறுதி செய்கிறது.

2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமர் ஷ்ரம் யோகி மான் தன் (பிஎம்-எஸ் ஒய் எம்) ஓய்வூதிய திட்டத்தைச் சுற்றி மோடி அரசு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது. இதில் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். 60 வயதை எட்டிய பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 3000/- வழங்க இதன் கீழ் ஏற்பாடு உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளி மாதம் தோறும் 50 சதவீத பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் 49,25,155 பயனாளிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஆனால் வயது வரம்பு காரணமாக ஒருவர் கூட எந்தவித நன்மையையும் இதுவரையில் பெறவில்லை.

தொற்றுநோய்ப் பரவலின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் சார்பாக உச்சநீதிமன்றம் தலையிட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2021 ஆகஸ்டில் இ-ஷ்ராம் என்ற இணைய தளத்தை அறிமுகம் செய்தது. எனிமும் அதில் எவ்வித சமூக நன்மைகளும் குறிப்பிடப்படவில்லை. கார்ப்பரேட் ஊடகங்கள் இந்த இணைய தளத்தைச் சுற்றி ஒரு மிகையான சித்திரத்தை உருவாக்கின. ஆனால், உண்மையில் ஒரே ஒரு தொழிலாளி கூட இத்திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதே உண்மை.

விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரிப்போம்!

பாஜக வை தோற்கடிப்போம்!!

 

Communist Party of India (Marxist)

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *