2024 நாடாளுமன்றத் தேர்தல்
பரப்புரை எண்: 1
மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள்
மக்களாட்சி
சொன்னது
“ஜனநாயகத்தின் அழகு பொதுமக்களின் பங்கேற்பில் உள்ளது” –2024 மார்ச் 14 அன்று பொதுமக்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தில் நரேந்திர மோடி.
“பல கட்சிகல் பங்கேற்கும் தேர்தல்கள், சுயேச்சையான நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் போன்ற கட்டமைப்பு அம்சங்களே ஜனநாயகத்தின் மிக முக்கியமான கருவிகள் ஆகும்” – 2021 டிசம்பரில் நடைபெற்ற ஜனநாயக ரீதியாகச் செயல்படும் நாடுகளின் உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி.
உண்மை நடப்பு
மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது முன்னெப்போதும் இல்லத வகையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் கடுமையாக அரிக்கப்பட்டு வருவதாக பல்வேறு சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் , ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ இந்தியாவின் மதிப்பீட்டை சுதந்திரமான நிலையிலிருந்து ஓரளவிற்குச் சுதந்திரமான நிலைக்குக் குறைத்தது. (இதில் மீதமுள்ள ஒரே வகை என்பது சுதந்திரமே இல்லாத நிலை ஆகும்.) அதே ஆண்டில், ஜனநாயகத்தின் வகைகள் (வி-டெம்) திட்டம் அதன் மூடிய எதேச்சாதிகாரம், தேர்தல் எதேச்சாதிகாரம், தேர்தல் ஜனநாயகம் அல்லது தாராளவாத ஜனநாயகம் என்ற அளவில் இந்தியாவை ‘தேர்தல் எதேச்சாதிகாரம்’ என்ற நிலைக்குத் தள்ளியது. எகனாமிக்ஸ் இண்டெலிஜென்ஸ் பிரிவு முழுமையான ஜனநாயகம், குறைபாடுள்ள ஜனநாயகம், கலப்பு ஆட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில், ‘குறைபாடுள்ள ஜனநாயகம்’ என்ற வகைக்குள் இந்தியாவை நகர்த்தியது.
முற்றுகையின்கீழ் நாடாளுமன்ற ஜனநாயகம்
நமது அரசியலமைப்பு பாராளுமன்ற ஜனநாயகத்தை வழங்கியுள்ளது. இந்த முறையின் கீழ் நிர்வாகத்துறை (அரசாங்கம்) பாராளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டதாகும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள்தான் நாட்டின் சட்டமாக ஆகின்றன.
ஆனால் பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத்தின் தரம் திட்டமிட்டு தரம் குறைக்கப்படுகிறது. முதலாவது மக்களவையில் சராசரி அமர்வுநாட்கள் 135ஆக் இருக்கையில், கடந்த பிப்ரவரியில் முடிவடைந்த தற்போதைய 17வது மக்களவையில் சராசரி அமர்வு என்பது 55 நாட்கள் மட்டுமே.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உத்தேசிக்கப்படும் சட்டங்களை ஆராய்வதில் நாடாளுமன்றக் குழுக்கள் முக்கிய பங்கினை வகித்தன. 2019 முதலான நாடாளுமன்றத்தின் சமீபத்திய பதவிக் காலத்தில் சட்டமன்ற மசோதாக்களில் 13 சதவீதம் மட்டுமே குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. 2009-2014 காலப்பகுதியில் செயல்பட்ட நாடாளுமன்றத்தில், அதாவது மோசி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 71 சதவீத மசோதாக்கள் குழுக்களின் ஆய்விற்கு அனுப்பப்பட்டன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்க திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 2023ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் 146 எதிர்க்கட்சி எம்.பி. க்கள் அவைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது, இது முன்னெப்போதும் இல்லாத ஓர் அளவை எட்டியது.
2019க்கும் 2023க்கும் இடையில், சராசரியாக, சுமார் 80 சதவீத பட்ஜெட் விவாதமின்றி வாக்களிக்கப்பட்டது. 2023ஆம் அனடில் முழு பட்ஜெட்டுமே விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்
அரசியலமைப்பின் 19வது பிரிவு கருத்து சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் போன்றவற்றை குடிமக்களுக்கு வழங்குகிறது. இந்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் இப்போது வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன; அல்லது மறுதலிக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஒரு தெளிவான உதாரணம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உவாபா) ஆகும். இது 2019இல் திருத்தம் செய்யப்பட்டது. 2015க்கும் 2019க்கும் இடையில், உவாபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் தொடர்ந்து வாடுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் உவாபா சட்டத்தின்கீழ் 814 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022இல் 1005ஆக் அதிகரித்துள்ளது. 8947 பேர் கைது செய்யப்பட்டனர். 6503 பேர் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றனர். கைது செய்யப்பட்டவர்களில் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசுக்கு அதிருப்தி தெரிவித்தவர்களும் அடங்குவர். உவாபா விதிகளின் கீழ் கைதுசெய்யப்படும் நபர்களுக்கு ஜாமீன் கிடைப்பது நடைமுறை சாத்தியமற்றதாகும்.
மற்றொரு ஆயுதம் இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள தேசத்துரோக விதி ஆகும். 2018 முதல் 2022 வரை 701 தேசத்துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. அரசை விமர்சித்தமைக்காக குடிமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் 96 சதவீத வழக்குகள் 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பதிவு செய்யப்பட்டவை. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டத்தில் இந்த தேசத்துரோக விதி மேலும் கடுமையான தண்டனையுடன் புதிய வடிவத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஊடகங்களை கட்டுப்படுத்துவது; ஒழுங்குபடுத்துவது
எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தயாரித்த உலக பத்திரிக்கையாளர் சுதந்திர குறியீட்டின்படி ஊடக சுதந்திரத்தில் உலகில் உள்ள 180 நாடுகளில் இந்தியா 161வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஊடகங்களின் பெருநிறுவன உரிமையாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் பெருமளவிலான வாசகர்களைக் கொண்ட முக்கிய தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன; ஒழுங்குபடுத்தப்படுகின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொலைத்தொடர்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள்; ஒளிபரப்பு மசோதாக ஆகிய் அனைத்துமே அரசின் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைக்கு வழிவகுப்பவை ஆகும். நியூஸ்கிளிக் நிறுவனர் விஷயத்தில் நடந்ததுபோல, தேசத்துரோக விதி மற்றும் யுவாபா கூட அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஆளும் கட்சிக்குச் சாதகமான பெருவணிக நிறுவனங்களின் கைகளில் ஊடகங்களின் குவிப்பு மற்றும் கட்டுப்பாடு 80 கோடி பார்வையாளர்களைக் கொண்ட 72 தொலைக்காட்சி சேனல்களுக்குச் சொந்தக்காரராக முகேஷ் அம்பானியை இட்டுச் சென்றுள்ளது. அதானி குழுமமும் தன் ஊடக உரிமையை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.
எதிர்ப்பை ஒடுக்குதல்
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒடுக்குவதன் மூலம் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவுவதே மோடி மற்றும் பாஜகவின் நோக்கமாகும். இதற்காக, அமலாக்க இயக்குநரகம் (இடி), சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய அரசின் அமலாக்க அமைப்புகள் எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஏராளமான தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை மற்றும் வழக்குகள் உள்ளன.
ஜார்க்கண்ட் முதல்வரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. டெல்லி துணை முதல்வர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறையில் அடைபட்டுள்ளார். இப்போது டெல்லி முதல்வரும் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். மத்திய அரசு நிறுவனங்களின் விசாரணை மற்றும் கைது அச்சுறுத்தல் காரணமாக பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பாஜகவிற்கு மாறிவிட்டனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் இத்தகைய தந்திரங்களால் பிளவுபட்டுள்ளன.
கண்காணிப்பு
எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகளில் பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது அரசின் கண்காணிப்பு எந்த அளவிற்கு நீண்டுள்ளது என்பதை வெளிச்சமாக்கியுள்ளது. இது இப்போது எங்கும் பரவியுள்ளது.
தொலைத்தொடர்பு கண்காணிப்பிற்கான மத்திய கண்காணிப்பு அமைப்பு, இணைய பகுப்பாய்விற்கான வலைத்தொடர், போக்குவரத்து பகுப்பாய்வு (நெட்ரா) மற்றும் கண்காணிப்பு தரவு தளங்களின் தேசிய கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு போன்ற தற்போதுள்ள டிஜிட்டல் வழி கண்காணிப்பு உள்கட்டமை மூலம் பல சட்ட அமலாக்க நிறுவனங்கள் குடிமக்களின் டிஜிட்டல் முறையிலான தரவுகளை அணுகி வருகின்றன.
டிஜிட்டல் முறையிலான தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு சட்டம் தனியுரிமை மீறலை அதிதீவிரமான நிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஏனெனில் இது பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் தனிப்பட்ட விவரங்களை மக்கள் வழங்க வேண்டும். இந்தத் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அரசு கண்காணிப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தபால் அலுவலகச் சட்டம், சந்தேகத்திற்கு உரியதாக இருப்பின், ஒரு பார்சலை திறந்து மேலதிக விசாரணைக்காக சுங்கத் துறை அல்லது வேறெந்த ஓர் அரசு நிறுவனத்திற்கும் அனுப்பிவைக்க எந்தவொரு அரசு அதிகாரிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
பல்வேறு அரசுத் திட்டங்களுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள ஆதாரின் பயன்பாடு அனைத்து தனிப்பட்ட தரவையும் சேகரிக்க அரசிற்கு உதவுகிறது.
அரசின் உத்தரவின் பேரில் 2022இல் 84 முறை இணைய தள செயல்பாடுகளை நிறுத்தியதன் மூலம் இந்தியா இவ்வகையில் உலகை வழிநடத்துவதாக மாறியுள்ளது. இந்த இருட்டடிப்புகள் பொதுவாக மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு முன்பும் பின்பும் திணிக்கப்படுகின்றன. இது பயனுள்ள பொதுமக்கள் ஒருங்கிணைப்பிற்கு தடையாக அமைகிறது. பெரும்பாலும் இத்தகைய இருட்டடிப்பிற்கு தெளிவான அளவுகோல்கள் ஏதும் இல்லாமல் இருப்பதில்லை.
ஒற்றையாட்சி முறையை அமல்படுத்தல்
மக்களாட்சி முறையின் இன்றியமையாத அம்சம் கூட்டாட்சிக் கோட்பாடு ஆகும். இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் ஆகும். ஆனால் பாஜக – ஆர் எஸ் எஸ் ஆட்சி மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் வளங்களையும் பறிக்கும்படியான ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி முறையை உருவாக்க விரும்புகிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு என்பது கூட்டாட்சியைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அனைத்து பன்முகத் தன்மைக்கும் இடமளிப்பதாகவும் அமைகிறது.
மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளின் உரிமைகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட விதம் தான் மாநிலங்களின் உரிமைகள் மீதான மிக மோசமான தாக்குதல் ஆகும்.
மாநில விவகாரங்களில் தலையிட ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்துவது; போதிய நிதி ஆதாரங்களை மறுப்பது; கடன் வாங்கும் உரிமை மறுக்கப்படுவது; மாநில விவகாரங்களில் மத்திய அரசின் உத்தரவுகளை திணிப்பது ஆகிய இவை அனைத்தும் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதலே ஆகும்.
சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலை தடுத்து நிறுத்துவோம்
இந்துத்துவ – கார்ப்பரேட் கூட்டணியில் இருந்தே ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் தடையும் உருவெடுக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், இந்துத்துவ விழுமியங்களை சமூகத்தின் மீது திணிக்கவும் அதிக அளவு எதேச்சாதிகாரம் தேவைப்படுகிறது. மோடி அரசால் முன்னெடுக்கப்படும் இந்துத்துவா சர்வாதிகார ஆட்சியின் இருப்பு ஜனநாயகம் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு நீடித்த அச்சுறுத்தலை முன்னறிவிப்பதாக அமைகிறது.
எனவே, ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மையமான பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!
பாஜகவை தோற்கடிப்போம்!!
Communist Party of India (Marxist)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

