2026-ம் ஆண்டுக்கான ‘தமிழ்ப் பேராயம்’ விருதுகள் வழங்கும் விழா

2026-ம் ஆண்டுக்கான ‘தமிழ்ப் பேராயம்’ விருதுகள் வழங்கும் விழா

2026-ம் ஆண்டுக்கான ‘தமிழ்ப் பேராயம்’ விருதுகள் வழங்கும் விழா

சென்னை: எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் 2026-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன வேந்தரும் தமிழ்ப் பேராயத்தின் புரவலருமான பாரிவேந்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் அறங்காவலர் பாலாஜி சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு. நாகராசன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது எழுத்தாளர் வ.கீரா-வுக்கு ‘குமரி’ படைப்புக்காக வழங்கப்பட்டது.

பாரதியார் கவிதை விருது கவிஞர் சீனு ராமசாமிக்கு ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ படைப்புக்காக வழங்கப்பட்டது.

பாரதி புத்தகாலயம் சார்பில் தோழர்.ஜெயசீலி அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை பெற்றுக்கொண்டார் .

அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோவுக்கு ‘சுழற்காற்றாக வந்த சிறுவன்’ படைப்புக்காக வழங்கப்பட்டது.

ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது டி. சித்தார்த்தனுக்கு, ‘Temples: The Centres of Social Life’ நூலுக்காக வழங்கப்பட்டது.

ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கு ‘செயற்கை நுண்ணறிவு’ நூலுக்காக வழங்கப்பட்டது.

‘பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது’ சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி ஆகியோருக்கு ‘நீலமலைத் தொல்லியல்’ படைப்புக்காக வழங்கப்பட்டது.

‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு கோயில் நுழைவுப் போராட்டம்’ நூலுக்காக வழங் கப்பட்டது. ‘சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது’, ‘கலைமகள்’ இதழுக்கு வழங்கப்பட்டது. ‘தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது’ கல்லைத் தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.

தமிழ் இலக்கியத்துக்கும் தமிழாய்வுக்கும் நீண்டகாலப் பங்களிப்பை வழங்கிய ஆய்வறிஞர் ப. அருளியாருக்கு, ‘பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

முதல் 7 விருதுகளுக்கான பரிசுத்தொகை தலா ரூ.1,20,000 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ரூ.1,00,000 விருதாளருக்கும், ரூ.20,000 நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் வழங்கப்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது மற்றும் தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது ஆகியவற்றுக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரூ.3,00,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களின் சார்பில் ஆய்வறிஞர் ப. அருளியார் ஏற்புரை வழங்கினார். தமிழ்ப் பேராயத்தின் செயலர் பா. ஜெயகணேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாக நிர்வாகி இரா. அருணாசலம் நன்றியுரையாற்றினார்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *