பாரதி புத்தகாலயம் மதம் பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களிலிருந்து ஐந்து கட்டுரைகளை தேர்வு செய்து ஒரு முன்னுரையோடு கையடக்க அளவில் வெளியிட்டுள்ளனர்.
இக்கட்டுரைகள் மதமார்கங்களின் தோற்றத்தையும் செல்வாக்கையும் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் அவைகளின் தாக்கத்தை அலசுகின்றன.
சித்தாந்த அடிப்படையிலும் பாமர மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும் அதனை கால வரிசைப்படி அலசுகிறது. மதம் பண்பாட்டு அடிப்படை மற்றும் அரசியல் பொருளாதார அடிப்படை என்ற இரண்டு தூண்களைக் கொண்டது. என்பதை கவணத்தில் கொண்டே இவைகள் எழுதப்பட்டு இருக்கின்றன.
கிருத்துவ ,யூத, இஸ“லாமிய மதங்களின் தாக்கங்களை ஸ்தூலமாக வரலாற்று நிகழ்வோடு இனைத்தே எழுதப்பட்டிருந்தாலும் மதங்களில் இருக்கும் பொதுத்தன்மையை வாசகனை உணர வைத்துவிடுகிறது. அந்த பொது தன்மை என்பது என்ன?
மார்க்சின் புகழ் பெற்ற மேற்கோள் “மதம் மக்களின் அபினி” என்பதே ஆகும்.
மதவாதிகள் கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது தத்துவங்கள் மதத்தை அபினி என்ற விஷப் பொருளோடு ஒப்பிட்டு தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி ஒரு மேலை நாட்டு ஆய்வாளர் கூறுகிறார் . அபினி என்பது மார்க்ஸ் காலத்தில் வலியை போக்கும் மருந்தாகவே கருதப்பட்டது. அபினியை மதநம்பிக்கையுள்ளவர்களின் மன வலியை போக்கும் மருந்து என்ற பொருளில்தான் மார்க்ஸ் குறிப்பிடுகிறார் என்கிறார்
மதத்தை பற்றி எழுதியது அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு என்ற கழிவிரக்க மனதோடுதான் மார்க்ஸ் பதிவு செய்கிறார். என்கிறார்
20ம் நூற்றாண்டு துவக்கத்தில்தான் அபினி விஷமாக கருதப்பட்டு தடை செய்யப் படுகிறது. இரு ஆசான்களும் மதம் பற்றி சொல்வதென்ன?
மதங்களை பற்றி நாத்திக கருத்துக்களை தர்க்க ரீதியாக சரியாக இருந்தாலும் கரடு முரடான அறிவியல் பக்குவமற்ற எதார்த்தங்களை அடிப்படையாக கொள்ளாதவைகள் என விமர்சிக்கின்றனர்.
1.மானுட சமூகம் அறியாமை இருளில் இருந்த காலத்தில் மதங்களே வழிகாட்டியாக இருந்தன. பார்வையற்ற மாற்றுத் திறனாளி போல் இருட்டிலே வழிகாட்டியதுஅறிவொளி வந்த பிறகு மதங்கள் பல மார்கங்களாக பிரிந்து சித்தாந்த
2.ஆயுதங்களாக அரசியல் பொருளாதார தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் மோதத் தொடங்கின இதற்கு வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாக காட்டுகின்றனர் .
3. மூலதன நூலிலிருந்து ஒரு பகுதியை இப்புத்தகம் வெளியிட்டுள்ளது. தங்கத்திற்கு பின்னர் தாள்பணத்திற்கும் ஒரு மாயா சக்தி இருப்பதாக கருதும் போக்கிற்கும் மத நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பை அலசுகிறது. தாள் பணம் செல்லுபடியாகக் காரணம் சமூக உழைப்பால் உருவாகும் சரக்குகளே என்ற ஒர்மை இல்லாமலே பணத்திற்கு மாயசக்தி இருப்பதாக கருதி சமூகமே அலைகிறது.
4. உண்மையில் அந்த ஓர்மை நம்ம நாட்டு முதலாளிகளுக்கு இருந்திருந்தால் டாலர் சம்பாதிக்கும் வெறிக்கு பலியாகாமல் இருந்திருப்பர். ரூபாயின் மதிப்பை உயர்த்த முடிந்தவரை அதிக பட்ச உழைப்பாளிகளின் உழைப்பை பயன்படுத்திட போட்டி போடுவர் ரூபாயின் மதிப்பை உயர்த்த இது தான் வழி. வட்டி உயர்வல்ல என்பதை உணர்திருப்பர்.
5. எங்கெல்ஸ் எழுதிய ஆரம்பகால கிறிஸ்த்துவத்தின் வரலாறு பற்றிய கட்டுரை இதில் ஒன்றாகும் சில லட்சியவாதிகள் நவீன பாட்டாளி வர்க்க சோசலிச இயக்கத்தை ஆரம்ப கால கிருத்துவத்தோடு ஒப்பு நோக்கி கூறுவதில் எவ்வளவு மெய் இருக்கிறது என்பதை அலசுகிறார் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்த மூலாம்பர கிருத்துவம் எப்படி சுரண்டும் வர்க்கத்தின் உளவியல் ஆயுதமாகவும் ஆனது என்பதை புரிய உதவுகிறது.
6. ஒன்றேகுலம், ஒருவனே தெய்வமென இலட்சியமாக கொண்ட மத சீர்திருத்தவாதிகளோ. இந்து என்றால் ராமனை தெய்வமாக பூசிக்க வேண்டும் என்று அலையும் அரசியல் வாதிகளோ சமூக இயல்பை அறியாமல் செயல்படுகின்றனர் என்ற உண்மையை இந்த எழுத்துக்களில் உள்ள தர்க்க இயல் நமக்கு உதவுகிறது. சுருக்கமாக சொன்னால் வர்க்க பிரிவினை உள்ள சமூகத்தில் பொதுவான மதம் என்பது இருக்க இயலாது.
7. ஆயிரம் தெய்வங்களை கும்பிடும் சமூகத்தை ராமனை கும்பிடுபவர்களாக ஆக்க மோடியின் அதிகாரம் முயற்சித்தால் பண்பாட்டுத்தளத் திலும், அரசியல் பொருளாதார தளத்திலும் மோதல் களையே உருவாக்கும் என்பதை வரலாற்று அணுபவமாக இருப்பதை இந்த எழுத்துக்கள் மூலம் கணிக்க முடிகிறது.
8. இப்புத்தகத்தின் முன்னுரையில் கடவுளை நம்புகிற மக்கள் முட்டாள்கள் என மார்க்ஸ் சொல்லவில்லை என குறிப்பிடப்படுகிறது. இது குழப்பத்தை ஏற்படுத்தும் மதங்கள் மூட நம்பிக்கையை உருவாக்காது என்று மார்க்ஸ் சொன்னதாக புரிந்து கொள்வர் முட்டாள்தனமாக கடவுளை நம்புகிறானா அல்லது சித்தாந்த ரீதியாக ஐன்ஸ்டீன் போல இயற்கையின் இயல்பை கடவுளாக கற்பனை செய்கிறானா என்பதை வைத்தே கூறக்கூடிய ஒன்றை இப்படி பொதுவாக கூறுவது வாசகர்களை
குழப்பும். அறிவியல் இயக்கமே தேவை இல்லை என்று கூறுவதாக கருதிவிடுவர்.
பாரதியாரின் இந்த வரிகள் நமக்கு உதவுகிறது
” ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! -பல்லாயிரம் வேதம்
அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?—-
பலபித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை யழிவீரோ?—–
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர் மறை
காட்டவும் வல்லீரோ?—-
“ஒன்ருபிரம முள துண்மை
யஃதுன் உணர்வெனக் கொள்வாயே.” 1
தெய்வம் என்பது ஒரு உணர்வு என்று பாரதியும் கூறுகிறார்.
இப்புத்தகத்தை படித்து புரிந்து கொண்டால் மார்க்சிசம் என்பது மாவோ குறிப்பிட்டமாதிரி யுனிவர்சல்ட்ரூத் மட்டுமல்ல அதை கண்டுபிடிக்கும் கருவியும்மாகும் என்பதை உணர்வோம்
—————————————————————————————————————————
இக் கட்டுரைகளை வாசிப்பதில் உள்ள சிரமத்தை குறைக்க வரலாற்று தகவல்கள், சில தத்துவ சொல்லிற்கு விளக்கங்கள அடிக்குறிப்பாக கொடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் மதவாத அரசியலின் அபாயத்தை மதநம்பிக்கை உள்ளவர்களை கவணப்படுத்துகிற முறை யில் அறிமுக உரையில் சேர்ப்பது நல்லது. ஒவ்வொரு கட்டரைக்கும் அதன் இன்றைய பொருத்தபாடுடன் ஒரு விளக்கம் முன்னுரையாக வைப்பது அவசியம் பக்கங்கள் கூடுவதை தவிற்க கட்டுரைகளை குறைக்கலாம்
வாசகர்களுக்கு வேண்டுகோள் சிரமப்படாமல் கொம்புத்தேன் கிடைக்காது. அது போல் வரலாற்றையும் கலை சொற்களுக்கான விளக்கத்தையும் சிரமப்பட்டுத் தேடி தொடர்ந்து படித்தால் கொம்புத்தேன் பெற்ற மகிழ்ச்சி உண்டாகும் பார்வை விசாலமாகும்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

