சார்ஜா 43வது சர்வதேச புத்தக கண்காட்சி நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி திறந்து வைத்தார்.
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தியா உள்ளிட்ட 112 நாடுகளைச் சேர்ந்த 2,522 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த கண்காட்சியானது ‘புத்தகத்துடன் தொடங்குங்கள்’ ‘It starts with a book, என்ற கருப்பொருளில் நடக்கிறது.
சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமியின் ஆதரவுடனும், சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் ஷேக்கா பொதுர் பிந்த் சுல்தான் அல் காசிமியின் வழிகாட்டுதலிலும் இந்த கண்காட்சி நடக்கிறது.
இந்த கண்காட்சியை சார்ஜா ஆட்சியாளர் தொடங்கி வைத்து அங்கு அமைந்துள்ள பல்வேறு அரங்குகளை பார்வையிட்டதுடன், புத்தகங்களையும் படித்து பார்த்தார்.
நடப்பு ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் மொராக்கோ நாடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளது.
இதன் மூலம் அந்த நாட்டின் கலை, கலாச்சாரம், இலக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் நேரடி சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400 எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர்.
63 நாடுகளைச் சேர்ந்த 250 விருந்தினர்கள் பங்கேற்கும் 1,357 கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘த்ரில்லர் திருவிழா’ மாணவ, மாணவியரை கவரும் வகையில் நவம்பர் 6 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும்.
பல்வேறு நாட்டினர் பங்கேற்கு 47 சமையல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. சமூக வலைத்தள நிலையம் பொதுமக்களின் கவனத்தை அதிகம் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த கண்காட்சியில் அரங்கு எண் 7 ல் தமிழகத்தைச் சேர்ந்த யுனிவர்சல் பப்ளிசர்ஸ், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், நூல்குடில் பதிப்பகம் மற்றும் சிந்தனை விருந்தகம் தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தமிழக பதிப்பாளர்களை வரவேற்று, கெளரவித்தது துபாயை சேர்ந்த இமான் அமைப்பு.
தமிழகத்தைச் சேர்ந்த பாடநூல் நிறுவன இணை இயக்குனர் திரு. சங்கர சரவணன் சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி தமிழக அரங்குகளை பார்வையிட்டார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.