கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - Prof V Balakrishnan - Indian theoretical physicist - https://bookday.in/

இந்தியாவின் ரிச்சார்டு ஃபைன்மேன் என்று போற்றப்படும் கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன்

இந்தியாவின் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் என்று போற்றப்படும் கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் (Prof V Balakrishnan)

தொடர் : 80 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் இயற்பியல் துறையின் திடப் பொருட்களின் இயந்திர நடத்தை இயல், இயக்கவியல் அமைப்புகள், சமச்சீர்மை, க்வாண்டம் இயக்கவியல் உட்பட பல்வேறு துறைகளில் நிபுணத்துவமிக்க இந்திய விஞ்ஞானி ஆவார். ஆனேலாஸ்ட்க் கோட்பாடு என்பது குறித்த இவரது இயக்கவியல் கோட்பாடுகள் உலகப் பிரசித்தி பெற்றவை ஆகும்.. உலகின் தலை சிறந்த இயற்பியல் ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் போற்றப்படுகிறார்.

துகள் இயற்பியலில் பல் உடல் சிக்கல் இன்னும் பிரச்சனை உண்டு. இதற்கு ஒரு உதாரணம் THREE BODY PROBLEM. மிக நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் இயற்பியல் சிக்கல்களில் ஒன்று. இயற்பியலில் குறிப்பாக கிளாச்சிகள் மேசனிக்ஸ் என்றிழைக்கப்படும் துறையில் விண்வெளியில் ஒன்றை ஒன்று சுற்றி வருகின்ற மூன்று வான் பொருட்கள் குறித்த இயக்க விதிகளை நிர்ணயிக்கும் வினோதமான பிரச்சனையாகும்.. இப்படியான மூன்று உடல் சிக்கல் என்பது அவை ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டு பிரபஞ்சத்தையும் சுற்றி வரவேண்டுமென்றால் அவற்றின் சுற்றுப்பாதையைக் கணக்கிடுவது ஆகும்.

நம்ம அது பூமி உட் பட இருக்கும் ஒன்பது கோள்களும் அவற்றினுடைய துணைக்கோள்களும் சூரியன் என்கிற ஒரு புள்ளியைச் சுற்றி வருகின்றன.. இரண்டு சூரியர்கள் உள்ள சூரிய மண்டலங்களும் உண்டு அங்கு உள்ள கோள்கள் இரண்டு சூரியர்களைச் சுற்றி வர வேண்டும்.. எனவே அவற்றின் சுற்றுப்பாதை வேறுபடுகிறது. இரண்டு சூரியர்கள் உள்ள சூரிய மண்டலங்களின் சுற்றுப்பாதைகள் குறித்த TWO BODY PROBLEM இயற்பியலாளர்கள் ஆல் எளிதில் தீர்வு காணப்பட்டது. ஆனால் மூன்று உடல் பிரச்சனை என்பது மூன்று சூரியன்களைக் கொண்ட ஒரு சூரிய மண்டலத்தைக் கற்பனை செய்கிறது.

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

உலகின் பெரிய உலகம் என்று கருதப்படும் விண்வெளி உலகத்தை விட்டு விடுவோம்.. இதே பல உடல் பிரச்சனை என்பது குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் பல் துகள்களின் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு சிக்கலைத் தீர்க்க முயற்சிக்கிறது. சர் ஐசக் நியூட்டன்.. பூமி சந்திரன் மற்றும் சூரியன் இவை மூன்றையும் மூன்று உடல் சிக்கலாகக் கருதி அதற்கான தீர்வுகளை டைகோ பிராகே என்னும் விஞ்ஞானியின் தரவுகளைக் கொண்டு ஜோஹன்னஸ் கெப்ளலர் போன்றவர்களின் வழிநடத்தல் படி சிறப்பான ஒரு கணித மாதிரியை தன்னுடைய பிரின்சிபியா புத்தகத்தில் வெளியிட்டார்.

இந்த இடத்தில் நாம் ஒரு சிறு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மாண்டமான விண்வெளி உலகில் எப்போதுமே சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் வட்டப் பாதைகள் அல்லது நீள் வட்டப் பாதைகள் குறித்து நமக்கு ஒரு திட்டமான நம்பிக்கை உண்டு. பூமி சூரியனைச் சுற்றி வரும் அதே வேளையில் சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது.. இது நிலையான ஒரே வழி பாதையாக நம்முடைய 2D வரைபடங்கள் நமக்குக் காட்டுகின்றன.. ஆனால் பூமி சூரியனைச் சுற்றி வரும் அதே சமயத்தில் சூரியன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றி வருகிறது.. எனவே ஒரே புள்ளியை மீண்டும் புவி அடைவதே இல்லை.. பூமி மட்டும் அல்ல சந்திரனும் அப்படியே.

இந்த புரிதலோடு நாம் அணுக்களின் உலகிற்குள் செல்வோம்.. ஆரம்பத்தில் பகுக்க முடியாதவை என்று அணுக்கள் நம்பப்பட்டன. ஆனால் அணுக்களின் மையத்தில் நியுக்லியஸ் என்கிற ஒரு அமைப்பு உள்ளதை பின்பு விஞ்ஞானிகள் கண்டறிந்து அறிவித்தார்கள் இந்த அமைப்பு சூரிய மண்டலத்தைப் போலவே உள்ளது நடுவில் நியூக்ளியஸில் நியூட்ரானும் புரோட்டானும் உள்ளன.. இந்த மைய அமைப்பை எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன.. எலக்ட்ரான்கள் சுற்றிவரும் பாதை பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை போலக் கற்பனை செய்ய முடியாத ஒன்று.. அது மேலும் கீழும் அல்லது வடக்கிலிருந்து தெற்கே அல்லது கிழக்கிலிருந்து மேற்கே அல்லது இடமிருந்து வலமாக என்று பல வகைகளில் அணுவின் உட்கருவைச் சுற்றி வரும் அமைப்பாக உள்ளது.. அதன் இடத்தை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்பதுதான் ஹாசன்பர்க் என்னும் அறிஞரின் நிச்சயமற்ற கோட்பாடு ஆகும்.

பல உடல் பிரச்சனை என்பது ஒரு ஊடாடும் துகள்களின் நுண்ணிய அமைப்புகளின் பண்புகள் உடன் தொடர்புடைய கருப்பொருள் சார்ந்த இடப்பெயற்சி சிக்கலாகும். கணினிகளால் கூட துல்லியமாக ஒரு விளக்கத்தை வழங்க முடியாத குவாண்டம் இயக்கவியலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய சிக்கலாக இது கருதப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு தனி துகளின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் அடிப்படை இயற்பியல் விதிகளை அடைய வேண்டுமென்றால் இந்த பல்லுடல் சிக்கலுக்கான தீர்வை நாம் கண்டறிய வேண்டும்.. இந்த சிக்கலுக்கான தீர்வுகளில் ஒன்றை முன் வைத்த பெருமை பேராசிரியர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணனை சேரும். இதனால் அவர் இந்தியாவின் ரிச்சர்ட் ஃபைன்மேன் என்று அழைக்கப்படும் அளவிற்கு புகழ் பெற்றார்.

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். மும்பையிலும் பூனாவிலுமாக தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்தார் புது டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் தன்னுடைய இளம் அறிவியல் பட்டத்திற்கு இயற்பியலை HONOROS பட்டமாக எடுத்துப் படித்து அங்கேயே முதுகலைப் பட்டமும் பெற்றார் அமெரிக்காவில் பிராண்டிஸ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை துகள் இயற்பியலில் மேற்கொண்டார்..1970 ஆம் ஆண்டு..முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகு டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார்.

அப்போது நம்முடைய கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம் தொடங்கப் பட்டது விக்ரம் சாராபாய் போன்ற அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு வந்து அவர் இணைந்தார் FAST BREEDER REACTOR என்று அழைக்கப்படும் அதிவேக இனப்பெருக்க உலை சம்பந்தமான தன்னுடைய ஆய்வுகளின் மூலம் இந்தியாவின் அணு உலைகளின் தோற்றத்திற்கு மிகுந்த பங்களிப்பை வழங்கினார்..1980 ஆம் ஆண்டு சென்னையின் ஐ.ஐ.டி நிறுவனத்தில் ஒரு இயற்பியல் பேராசிரியராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

பேராசிரியர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்த மற்றொரு முக்கிய துறை நிகழ்தகவு கோட்பாட்டில் சீரற்ற செயல்முறை என்று அழைக்கப்படும்..STOCHASTIC PROCESSES என்பதாகும் இது பொதுவாக ஒரு நிகழ்தகவு வெளியில் சீரற்ற மாறிகளை ஒரு கோர்வையாகக் கருதித் தீர்வுகளைத் தரும் இயற்பியலின் அடிப்படை துறை ஆகும். இங்குக் காலத்தின் விளக்கம் மிகமிக முக்கியமானது சீரற்ற முறையில் வேறுபடும் அமைப்புகள் மற்றும் நிகழ்வுகளின் கணித மாதிரிகளாகச் சீரற்ற செயல்முறை பரவல்களைப் பயன்படுத்துகின்றனர்.. இந்த இயற்பியல் நுணுக்கமான பல அடிப்படை விஷயங்களுக்குப் பயன்படுகிறது.

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

STOCHASTIC PROCESSES மாதிரிகளைக் கொண்டு வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் வெப்ப இறைச்சலை கணக்கிடுதல் மின்சார ஏற்ற இறக்கத்தைத் தெளிவாக புரிந்து கொள்ளுதல் வாயு மூலக்கூறுகளின் இயக்கத்தைக் கணக்கிடுதல் மற்றும் ஆய்வகத்தில் பாக்டீரியா மக்கள்தொகையின் வளர்ச்சியைத் துல்லியமாக அறிதல்.. கோவிட் 19 போன்ற வைரஸ் தாக்குதல்கள் ஒரு இடத்தில் எப்படி நிலை கண்டுள்ளன என்பதன் சூழலியல் புள்ளிவிவரங்களை அடைதல் என்று பல வாறாக பயன்படும் கணக்கீடுகளை வெளியிட்டார்.

வெங்கட்ராமன் பாலகிருஷ்ணனின் இயற்பியல் உரைகள் மிக பிரசித்தி பெற்றவை ஆகும். அடிப்படை இயற்பியலில் 38 பேருரைகளை அவர் நிகழ்த்தினார்.. குவாண்ட இயற்பியலில் அவர் நிகழ்த்திய முப்பத்தி ஒரு பேருரைகள் தனிப் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.. அணேலாஸ்ட்டீசிட்டி, தொடர்ச்சி நேர சீரற்ற நடை என்று அழைக்கப்படும் CONTINOUS-TIME RANDOM WALKS ஏனும் தனி இயற்பியல் துறை, கணிதத்தையும் இயற்பியலையும் இணைக்கும் சார்புலூர் வளைவு என்று அழைக்கப்படும் டைனமிகல் சிஸ்டம் என்னும் துறை ஆகியவற்றிலும் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் பெரிய அளவில் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். இயற்பியல் மீதான இவருடைய துறை சார்ந்த புகழ் ஆயிரக்கணக்கான மாணவர்களை இயற்பியலை நோக்கி ஈர்த்து வந்துள்ளது.

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

உலகளவில் தன்னிகரற்ற இயற்பியல் கோட்பாடுகளை வழங்கி இருக்கும் வெங்கட்ராம பாலகிருஷ்ணன் என்கிற அந்த மாபெரும் அறிஞர் ஐ ஐ டி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பால்க்கி என்று தன்னுடைய மாணவர்களால் இன்றைக்கும் ஒப்பற்றவராக போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் போற்றும் இந்திய மருத்துவ இயல் விஞ்ஞானி காந்தா சுப்பாராவ் (#KantaSubbarao)

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *