கவிஞர். மு. பிரபு எழுதிய 8 அழகிய, புதிய தமிழ் கவிதைகள் | 8 Tamil Poems Written By Poet M Prabhu | புதுக்கவிதை |

கவிஞர். மு. பிரபு எழுதிய 8 கவிதைகள்

கவிஞர். மு. பிரபு கவிதைகள்

1.
விவசாயமுமில்லை
விலைகளும் குறையவில்லை
நிரந்தர வேலையுமில்லை
வேலைக்கு ஏற்ற
ஊதியமுமில்லை
ஆனாலும்
மறைமுக வரிகளால்
சுமைதாங்கிகளாய்
ஏழைகள்.
……………….

2.

மழைக்காலம்
அடுப்பு பற்றவைக்க
முடியாமல்
செங்கல்
சூளைக்காரர்.

வயிற்று பசியை
அணைக்க முடியாமல்
தவிக்கும்
செங்கல் சூளை
தொழிலாளி.
……………..

3

மரங்களில்லா
சாலையில் பயணம்
இளைப்பாற
இடையிடையே
தேநீர்க் கடைகள்.
………………

4

இறுதி ஊர்வலத்தில்
உயிர்பெறும்
விமர்சனங்கள்.
………….

5.

தொண்டர்களிடையே
கொள்கையை
கொட்டும் முரசாய்
முழக்கியவரையும்

மக்களிடத்தில்
இலவச வாக்குறுதியை
அமைதியாய்
பேச வைக்கும் தேர்தல்.
………………

6.

கோடைவெயில்
வீதிகளில் கூக்குரலிடும்
ஐஸ் வண்டிகாரர்

வீடுகளில் அமைதியாய்
கைப்பேசியில்
குழந்தைகள்.
……………….

7.

பயன்படுத்தினால்
பட்டமரமும்
ஊன்றுகோல்.

…………………………….

8

ஏழையோ
நடுத்தர வர்க்கமோ
வசதியோ

சைவமோ / அசைவமோ
எதிலும் நீ இருப்பாய்
எல்லோருடைய
சமையலறையிலும்
சமையலிலும்
கலந்திருக்கும்
சமத்துவக் கனி நீ

ஏழைகளின் பங்காளியாய்
இருக்கும் நீ
விலையேறும் காலங்களில்
ஏழைகளின்
எட்டாக்கனி ஆகிறாயே
அது ஏன்
ஓ என் தக்காளியே.
……………….

எழுதியவர் : 

மு. பிரபு
வேலூர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. கவிதைகள் மிக சிறப்பாக உள்ளன. அனைத்து கவிகளிலும் சமூக முரண்களும், மக்களின் வலிகளும், அறியாமைகளும் படம் பிடித்து காட்டுகின்றன. வாழ்த்துக்கள் கவிஞர் பிரபு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *