ரிசிகேஷில் அமைந்திருக்கும் அகில இந்திய மருத்துவ அறிவியல் இன்ஸ்டிடியூட் யோகாவும் காயத்தரி மந்திரமும் ஜபிப்பதன் மூலம் கொரோனா நோயாளியைக் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது.இந்த ஆய்விற்கான நிதியை அறிவியல் தொழில் நுட்பத்துறை வழங்குகிறது. கொரோனாவுக்கான ஆய்வு பற்றிய அறிவிப்பை அரசு அறிவித்ததன் பேரில் இது தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் இதற்கான மனிதர்கள் சார்ந்த சோதனைக்குரிய வழிமுறைகளில் செய்ய வேண்டிய கிளினிக்கல் ட்ரயல் சட்ட திட்ட வழிமுறையில் செய்வதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.
எய்ம்ஸில் நுரையீரல் நிபுணரும் இணை பேராசிரியருமான டாக்டர் ருச்சி துவா, இது குறித்த ஆய்வுக்கு டிஎஸ்டியிலிருந்து நிதி பெற விண்ணப்பித்திருந்தார். ஆய்வை நடத்துவதற்காக அவருக்கு ₹ 3 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முறையை இருபது கொரோன நோயாளிகளில் மிதமான அறிகுறிகள் உள்ளவர்கள் மீது செய்து பார்க்கப்படும்.
இந்த இருபது நபர்கள் பத்துப் பத்தாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழுவினர் வழக்கம் போல கொரோன சிகிச்சையும் மற்ற ஒரு குழுவினர் கொரோனாவிற்கு கொடுக்கும் வழக்கமான சிகிச்சையுடன் காயத்ரி மந்திரம் மற்றும் பிரணாயம ஆசன முறைறையும் கைக் கொள்ளுவர். இது 14 நாட்களுக்கான சோதனை ஆய்வாகும்.
கொரோனாவில் இருந்து மீளும் முறைகள் இரண்டு குழுக்களிலும் சேகரிக்கப்பட்டு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து காயத்ரி மந்திரம் ஜபித்தவர்களிடம் அழற்சி, செல் அழிதல் போன்றவைகளில் மேம்பாடு குறித்து அளவிடுதல் செய்யப்படும். சோதனைக்கு முன் அழற்சிக்குக் காரணமான சி புரோட்டின் அளவை இருபது நோயாளிகளிடமும் பதிவு செய்யப்படும். பிற அழற்சி காண்பிகளான இன்டர்லுகின் 6 அளவும் ,மார்பக எக்ஸரேயும் பதிவு செய்யப்படும்.
பதினான்கு நாட்கள் சோதனைக்குப் பின் மேற்சொன்ன சோதனைகள் அனைத்தையும் செய்து பார்த்து காயத்ரி மந்திரம் ஜெபித்த நோயாளிகளிடம் மாறுபட்ட அழற்சி காண்பிகள் தென்படுகிறதா எனக் கண்டறிவர். கடுமையான பாதிப்புள்ளானவர்கள் மீது இந்த ஆய்வு செய்யப்படமாட்டாது.
இரண்டு நோயாளி குழுக்களுக்குமிடையே உள்ள பிற வேறுபாடுகளையும் மருத்துவர்கள் மதிப்பிடுவர். அதாவது இரண்டு குழுக்களுக்குமிடையே நெகட்டிவ் அடைந்த காலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற காலம் ஆகியனவும் ஒப்பீடு செய்யப்படும். மேலும் அவர்களிடையே ஏற்பட்டுள்ள குறைந்த தளர்ச்சி அல்லது குறைந்த எதிர்நோக்கு செயல்பாடு ஆகியனவும் மதிப்பிடப்படும்.
எய்மஸ் மருத்த நிறுவனத்தின் மருத்துவர் டாக்டர் ருசி டுவா என்ற நுறையீரல் சிறப்புனர் மற்றும் இணைப் பேராசரியருமான இவர் குறிப்பிடுவது என்னவென்றால் பின் முனைவர் பட்ட ஆய்வாளர் ஒருவர் ஏற்கனவே யோகாவில்.ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளார் எனவும் கூறியுள்ளார். சி எதிர்வினைப் புரதத்தை அளவிட்டு அழற்சி காண்பிக்களை அளவிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன் பின் மூன்று நான்கு மாதத்திற்கு அவர்களின் நலவாழ்வுக் குறியீடுகளும் மதிப்பிப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்த ஆய்விற்கான குறிப்பில் கொரோன நோய் என்பது சார்ஸ் கோவி 2 என்ற முக்கிய வைரசால் வருகிறது. அது மனித சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் தன்மையுள்ளது. காயத்ரி மந்திரம் என்பது இந்துக்களின் புனிதமான மந்திரம் ஆகும்.தற்போது வரை இந்நோய்க்கு சிகிச்சையோ தடுப்பு மருந்தோ இன்னும் கண்டுபிடிக்வில்லை என ஆதங்கப்படுகிறார். மேலும் விஞ்ஞானிகள் கொரானாவிற்கு சிகிச்சை அளிக்க ஒரு விந்தையை நிகழ்த்துவதற்கு மாயமான சிகிச்சையும் தடுப்பு மருந்து கண்டுபிடித்தலுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பிரணாயமா, காயத்ரி மந்திரம் ஆகிய பிற நோய்களைக் குணப்படுத்தியுள்ள நம்பிக்கையில் இந்த ஆய்வு முக்கியமானதாகிறது என்கின்றனர்.
இப்போ நாம் இந்த ஆய்வில் அடங்கியுள்ள பிரச்சினைகள் எனனென்ன எனப் பார்ப்போம்…
இது தான் காயத்ரி மந்திரம். நான்கு சிறிய வரிகள் கொண்டது.
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோ:
யோந: ப்ரசோதயாத்..!
ஆனால் 35க்கும் மேற்பட்ட காயத்ரி மந்திரங்கள் இருப்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். இதில் எதை ஓதப் போகிறீர்கள்?
இதுவரை வந்துள்ள வைரஸ் நோய்களில் எத்தனை நோய்கள் காயத்ரி மந்திரத்தால் குணமாகியுள்ளன….எத்தனை நோய்கள் எனப் பட்டியலிடமுடியுமா?
காயத்ரி மந்திரம் சொல்லி தினசரி வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கொரோனா வரவில்லையா அல்லது வந்து சரியாகி இருக்கிறதா…இதற்கான தரவுகள் இருக்கிறதா?
ஆராய்ச்சிக்கு முன்னர் காயத்ரி மந்திரம் யோகா செய்வோருக்கு சுவாச நோய்கள் வருவதில்லை என்ற தரவுகள் கொடுக்க முடியுமா?
சுவாச நோய் உள்ளவர்கள் காயத்ரி மந்திரம் யோகாவால் குணமடைந்து உள்ளார்கள் என்பதற்கான தரவுகள் உள்ளனவா?
குறிப்பாக வைரஸ் பேக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளால் வரும் சுவாச நோய்கள் காயத்ரி மந்திரம் யோகாவால் குணமடைந்துள்ளன எனத் தரவுகள் உள்ளனவா?
இந்த ஆய்வு என்பது பாசிட்வாக உள்ளபவர்கள் பதினான்கு நாளில் திரும்பவும் நெகடிவ் ஆவதைக் கண்டறியும் என்பதால் இந்த ஆய்வு தனிமைப்படுத்துதல் கால சோதனையாக இருப்பதால் இந்திய நாட்டின் மீளும் விகிதம் 80 சதவீதத்துக்கு மேலும் இறப்பு விகிதம் 2.8 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது இருபது நபர்களில் செய்யப்படும் ஆய்வு எந்தவிதத்தில் பயன் தரக் கூடியதாக இருக்கும்?
காயத்ரி மந்திரம் மட்டுமல்லாது யோகாவும் இணைந்த வழிமுறையில் செய்வதால் பத்து நபர்களின் செய்முறை வெவ்வேறானதாக இருக்கும் பட்சத்தில் அறிவியல் முறையில் இது தவறானதல்லவா?
ஏற்கனவே பதஞ்சலி போன்ற ஆயுர்வேத மருந்து கொரானில் ஒப்புதல் பெற்று அதன் பின் அதன் செயல்தன்மை பொய்யாகி விலக்கிக் கொள்ளப்பட்டது. அது போன்று இந்த ஆய்வும் பயனற்றுப் போவதால் பணம் விரையமாகாதா ? பதஞ்சலி தனது சோதனை முறைகளை அதுவே அங்கீகரித்து கூறி ஒப்புதல் பெற்ற பின் விஞ்ஞானிகளின் எதிர்ப்பால் விலக்கிக் கொள்ளப்பட்டது. அது போல் காயத்ரி மந்திர சோதனைகளின் முடிவு அறிவிக்கப்பட்டு எதிர் வினைகள் வந்தால் ஆராய்ச்சிகளே கேள்விக் குறியாகாதா?
காயத்ரி மந்திர சோதனைகள் அறிவியல் வழிமுறையற்று உள்ளது. அதாவது சோதனை செய்பவருக்கும் சோதனை செய்யப்படுபவருக்கும் என்ன சோதனை செய்யப்படுகிறது என்பது தெரியாது. இது இரட்டை மறைப்பு முறையாகும் ( டபுள் பிளைன்ட்). அதோடு மட்டுமில்லாமல் இந்த சோதனை முறையை நோய் அறிகுறியற்றவர்களிடமும் செய்து பார்த்து நோய் வருகிறதா என்ற சோதனை முறையும் இதில் இல்லையே.?
இது தவிர மற்ற சில குழுவினருக்கு பிற சுவாசப் பயிற்சியும் பிற மந்திரங்களை பிரயோகிக்கும் முறைகளான கிராமப்புற கோடங்கிக் செய்வதையும் இஸ்லாமியர் பாத்தியா ஓதுவதையும் கிறித்துவர்கள் உள்ளி்ட்ட பிற மதங்கள் பாரம்பரியமாகக் கொண்டிருக்கும் ஓதும் முறையையும் செய்து காண்பிக்க வேண்டாமா?
இறுதியாக காயத்ரி மந்திரம் போல் கிராமப்புறங்களில் கோடாங்கிகள் பயன்படுத்தும் மந்திரிக்கும் முறைகளையும் தர்ஹாக்களில் மந்திரிக்கும் முறைகளையும் ஆய்வுக்கு உட்படுத்த நிதி தரப்படுமா?
இதுபோன்ற போலி அறிவியல் திட்டங்களுக்கு நிதியினை ஒதுக்கி மக்கள் வரிப்பணத்தை அரசு வீணடிக்கலாமா? இதை விஞ்ஞானிகள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கலாமா?
இறுதியாக இந்த திட்டத்தின் தரவுகள் முடிவுகள் பரிந்துரைகள் அதற்குரிய எதிர்வினைகளை பொது வெளியில் வெளியிடுவீர்களா?
திருவண்ணாமலையில் தங்கிய ரமணர் கும்பகோணத்திலிருந்து காஞ்சியில் குடியேறிய சங்கராச்சார்யார்கள்
அனைவரும் மந்திர உபாசனைக்காரர்கள்தான், ஆயின் அவர்களுக்கு நோயால் தான் மரணம்.
நித்தியானந்தா வேறு ஏதோ உபாசனைக்காரர், ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார். சகல சவுபாக்கியங்களையும் அறைக்குள்ளேயே அவருக்கு கிடைக்கிறது,
எனவே அந்த மந்திரத்தை ஆயுஷ் அமைச்சகம் ஆய்வு செய்து பரப்பிடலாம்,.