சிறந்த குறிக்கோள் இருப்பவர்களே சிறந்த மனிதர்களாக விளங்க முடியும். சிறந்த மனிதர்களால் மட்டுமே சிறந்த வெற்றியை ஈட்ட முடியும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். முடிவு எடுத்த பிறகு திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கியே போய்க் கொண்டிருக்க வேண்டும்.

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும். “எனக்குத் தகுந்த வேலை கிடைத்தால்தான் செய்வேன்’ என்று காத்திருக்காமல் கிடைக்கிற வேலையைப் பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டும்.
அதிகாரத்தினால் அல்ல, அன்பினால் மட்டுமே பிற மனிதர்களை நமக்கு உகந்தவர்களாக நாம் மாற்ற முடியும்.

தங்களை ஊக்கப்படுத்துபவர்களையும் உற்சாகப்படுத்துபவர்களையும் நட்பாகக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் உயர்வுக்கு அது இட்டுச் செல்லும்.

ஒரு முயற்சியில் தோல்வியடைந்தால் கலங்கக் கூடாது. நாம் வெற்றி பெறுவதற்குத் தேவையான முயற்சிகளைச் செய்யாததே தோல்விக்குக் காரணம். நாம் எடுத்து வைக்கிற ஒவ்வோர் அடியும் நாம் சென்று சேர வேண்டிய சிகரத்தையே காட்டுகிறது.

தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். முயற்சியால் முனைந்து பெறும் வெற்றியே நிலைத்து நிற்கும். செய்ய வேண்டிய நேரத்தில் எதையும் செய்துவிட வேண்டும். யாராக இருந்தாலும் மாறிவரும் உலகத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு மட்டுமல்லாமல் நல்ல மனிதனாக வாழ்வதற்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது.

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள் – வடகரை செல்வராஜ்; பக்.604; ரூ.520;
ரேவதி பப்ளிகேஷன்ஸ், புதிய எண்.3, பழைய எண். 2, பாரதீஸ்வரர் காலனி முதல் தெரு, கோடம்பாக்கம், சென்னை-24.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்நூல் கிராம ஊராட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்து தந்திருக்கிறது.

கிராம ஊராட்சிகளின் அதிகார எல்லைகள் எவை? ஊராட்சித் தலைவரின், இதர பணியாளர்களின் பணிகள் எவை? குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு என அனைத்தையும் கிராம ஊராட்சி அமைப்பு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை அமைப்பது, அதைப் பராமரிப்பது, மேம்படுத்துவது என அதன் பணிகள் விரியும். தெருவிளக்கு எனில் எத்தனை தெருக்கள், எவ்வளவு விளக்குகள், அவற்றை அமைப்பது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் ஊராட்சி அமைப்புதான் செய்ய வேண்டும்.

வெற்றி எங்கே இருக்கிறது? – உதயை மு.வீரையன்

பக்கம் :136

விலை:ரூ.100

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; 044 – 2536 1039.

நன்றி – தினமணி நாளிதழ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *