வானவில்லை வளைத்தாடும் எண்ணத்துப்பூச்சி கவிதை – சே கார்கவி
அந்த வானத்தையும்
நிலவையும் பார்த்தபடி
அமைந்த உள்ளத்திற்கு
வெள்ளைப் பர வளையத்தைச் சுற்றி
மையிடப்படுகிறது

நேராய்
வலதாய்
இடதாய்
குறுகலாய்
சற்று இட வலமாய்
இவற்றை வாரிய
விரிந்த நிலையாய்
உருண்டாடும் கண்களுக்கு மட்டும்தான்
எத்தனைத் திருஷ்டி வெடிப்புகள்….!

ராட்சசர்களை
ஒரு கூண்டில் வைப்பதற்கு
கடவுள் மனங்கள்
சாவிகளை விழுங்க வேண்டியுள்ளது
உணர்வுகள் மனங்களைத் தாண்டி
சாத்தான்களின் மலங்களில்
ஒரு விதை வளர கனவினைத் தெளிக்கத் தொடங்குகின்றன….

மை வேண்டாம்
சிறு கனவு வரைந்து
காதம் தொடர்ந்தால் போதும்
வாழ்க்கை இடதோ வலமோ வசப்பட்டுவிடும்
என் நிழலுக்கு…

– கவிஞர் சே கார்கவி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.