கதவிற்கு பின்னொரு குழந்தை – கவிதா பிருத்வி 

A child behind the door (கதவிற்கு பின்னொரு குழந்தை) Poetry By Kavitha Prithivi. Book Day is Branch of Bharathi Puthakalayam.கதவிற்கு பின்னொரு குழந்தை

விடுமுறை காலம்
அக்கா மாமா குழந்தைகள் என்று
சொந்தங்களின் வருகை..

அன்று காலையில் இருந்தே
இருப்புக் கொள்ளாது..

வாசலை பார்த்து பார்த்து
எப்போது வருவார்கள் என்று
காத்துக் கிடக்கும் மனசு…

அவர்கள் முகம் பார்த்ததும்
மனம் முழுக்க
மகிழ்ச்சி அலை அடிக்கும்..

சித்தி என்று தாவிவரும்
பிள்ளைகளை

வாரி அணைத்து முத்தமிட்டு, குளிப்பாட்டி, சோறூட்டி,
தூங்க வைத்து..

கடைத்தெரு சினிமா என்று
சுற்றி விட்டு…

எப்படி நாட்கள் நகர்ந்தது
என்றே தெரியாமல்
ஒரு வாரம் முடிந்து
இன்று ஊருக்கு கிளம்புறோம் என்ற,
அக்காவின் வார்த்தையில்
மனசு வலிக்கும்..

அக்கா பிள்ளைங்க
ஊருக்கு கிளம்புறாங்க பாரு..

வாசலுக்கு வா என்ற
அம்மாவின் குரல்..

கண்ணில் கண்ணீரோடு
கதவுக்குப் பின் நின்றேன்
குழந்தையாய்…

கவிதா பிருத்வி
தஞ்சை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.