நான் கொடுத்த
சாக்லேட்டுக்கு நீ
பதில் கொடுக்காமல்
போனது கூட பரவாயில்லை.
பதிலாக ஒரு சாக்லேட்டாவது
கொடுத்துச் சென்றிருக்கலாமே!
இன்னமும் என் காதல்
கேள்விக்குறியாய்
கவிதைகளில் சிக்கிக்
கொண்டிருக்கின்றது.
காதலை
காதலுடன் மறுத்திருக்கலாமே!
உறை கிழியாமலும் சாக்லெட் உறையில் ஒட்டிக் கொள்ளாமலும் இலாவகமாய்
வேகமாய் சாக்லெட்டைப் பிரிப்பாய் நீ!
அதே இலாவகத்துடன் எனக்கெந்த சேதாரமும் இல்லாமல் எனை நீ
பிரிந்து சென்றிருக்கலாம்.
இன்னும் வலியில்
கவிதையில் புலம்பிக்
கொண்டிருக்கின்றேன் அன்பே!
உனக்குப் பிடித்த அதே சாக்லெட்டை
அடம்பிடிக்காமலே
என் குழந்தைக்கு தினம்
வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
உன் பெயரெல்லாம்
வைக்க மனத்திடமில்லை,
எப்படியும் மகளையும்
ஒரு நாள் பிரியவேண்டியிருக்கும்..
எழுதியவர்:
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.