ஏ.ஜி.நூரானி அதிகாரத்துக்கு எதிரான துணிச்சல் குரல் - ஆர்.விஜயசங்கர் | A.G.Noorani is a brave voice against authority - Tribute to A.G.Noorani - https://bookday.in/

ஏ.ஜி.நூரானி அதிகாரத்துக்கு எதிரான துணிச்சல் குரல் – அஞ்சலி

ஏ.ஜி.நூரானி அதிகாரத்துக்கு எதிரான துணிச்சல் குரல் – அஞ்சலி

நல்ல நூல்களைப் படிப்பது என்பது கடந்த நூற்றாண்டுகளின் மிகவும் பண்படுத்தப் வதைப் போன்றது’ – பிரெஞ்சுத் தத்துவவிய லாளர் ரெனேடெகார்ட் சொன்ன இந்த வார்த்தைகள் நிதர்சனமானவை. சிறந்த சிந்தனையாளர்களின் நூல்களைப் படிப்பதே ஓர் உரையாடல் தான். அதிலும் அத்தகைய சிந்தனையாளர்களுடன் நேரடியாக உரையாடுவது ஒரு மாபெரும் அறிவுச் சுரங்கத்துக்குள் பயணிப்பதற்கு நிகரானது. ஆகஸ்ட் 29இல் மறைந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர், அரசியல் விமர்சகர், ஆங்கிலப்புலமை மிக்க எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட அறிஞர் ஏ.ஜி. நூரானி அப்படியான ஓர் அறிஞர்; என்னைச் செதுக்கிய ஆசான்களில் முதன்மையானவர்!

உணவில் தொடங்கிய உறவு:

ஏ.ஜி.நூரானியுடன் எனக்குத் தொழில்ரீதியாக மிக நீண்ட கால நட்பு இருந்தது. இந்த அசாதாரண உறவு, உணவைப் பற்றிய ஒரு சாதாரணமான உரையாடலில்தான் தொடங்கியது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலிருக்கும் ‘தி இந்து’ அலுவலக வளாகத்தில் ‘ஃபிரண்ட்லைன்’ இதழின் அலுவலகத்துக்குள் செய்தி ஆசிரியரைக்காண நூரானி வந்தார். நான் அப்போது பத்திரிகையின் துணை ஆசிரியர். செய்தி ஆசிரியர் அன்று விடுப்பில் இருந்தார் என்று கூறியவுடன், “நான் இன்று மும்பை (அவர் குடியிருந்த ஊர்) செல்கிறேன். சென்னையில் ஒரு நல்ல அசைவ உணவகம் எதுவென்று கூற முடியுமா?” என்று என்னிடம் கேட்க, நான் அப்போது செட்டிநாட்டு உணவுக்குப் பெயர் போன ஓர் உணவகத்தின் பெயரைச் சொன்னேன். நன்றி தெரிவித்துவிட்டுச் சென்ற அவர், சுமார் ஒரு மாதத்துக்குப் பின்  எங்கள் அலுவலகத்தைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். நான்தான் அழைப்பை எடுத்தேன். என் பெயரைக் கூறியதும், “நீங்கள்தாளே எனக்கு சென்னையிலிருக்கும் அருமையான உணவகத்தை அடையாளம் காட்டியவர் ? நன்றி! நான் ரூ.1,000 மதிப்புள்ள உணவு வகைகளை அங்கிருந்து பார்சல் கட்டி மும்பைக்கு எடுத்துச் சென்றேன்” என்றார்.

ஏ.ஜி.நூரானி அதிகாரத்துக்கு எதிரான துணிச்சல் குரல் - ஆர்.விஜயசங்கர் | A.G.Noorani is a brave voice against authority - Tribute to A.G.Noorani - https://bookday.in/

நான் 2003ஆம் ஆண்டில் மாதம் இருமுறை வெளிவரும் ‘ஃபிரண்ட்லைன்’ இதழின் பொறுப்பாசிரியராகவும், பின்னர் 2011இல் ஆசிரியராகவும் ஆன பின்னர், அப்படித் தொடங்கிய எங்கள் நட்பு மேலும் வலுப்பெற்று வளர்ந்தது. ஏனெளில், அன்றிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு இதழிலும் அவர் கட்டுரை எழுதினார். ஒவ்வொரு இதழின் பணி தொடங்குவதற்கும் முன்பே என்னை அழைத்து அடுத்த மூன்று இதழ்களில் அவர் எழுதத் திட்ட மிட்டிருக்கும் தலைப்புகளை என்னிடம் கூறி, ஒவ்வொரு முறையும் என் அனுமதியைக் கேட்டார். “நீங்கள் அனுமதி கேட்கவே தேவையில்லை” என்று கூறினாலும், “இல்லை நண்பரே, நான் யாராக இருந்தாலும் நீங்கள்தான் இதழின் ஆசிரியர்.

அது ஒரு பெரிய பொறுப்பு. கட்டுரையை ஒட்டி எந்தப் பிரச்சினை வந்தாலும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதால், அனுமதி கேட்பது ஒரு முக்கியக் கடமை, பொறுப்பு” என்பார். அவரது தன்னடக்கமும் பொறுப்புணர்வும் திட்ட மிட்டு வேலை செய்யும் முறையும் ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கும். நாள் பொறுப்பேற்றுப் பணி ஓய்வுபெறுவதற்கு முந்தைய ஆண்டு வரை அவருடைய கட்டுரை இடம்பெறாத இதழே இல்லை எனலாம். ஒரு தோராயமான கணக்கினை எடுத்தால் ஓர் ஆண்டுக்கு 25 இதழ்கள் என்கிற வீதத்தில் நான் தயாரித்த சுமார் 500 இதழ்களிலும் கட்டுரை எழுதி 20 ஆண்டு களில் சாதனை படைத்தவர் அவர்.

அசைக்க முடியாத ஆதாரங்கள்: 

‘ஃபிரண்ட்லைன்’ இதழில் அவர் முதல் முதலாக எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘Taming the RAW’. அது உளவுத் துறையின் வெளிநாட்டு அங்கமாகிய ரா அமைப்பினை ‘அடக்குவது’ குறித்ததாயிருந்தது. கடைசியாக எழுதிய கட்டுரையின் தலைப்பு Judges and ther bogus colegium’ (நீதிபதிகளும் அவர்களின் போலியான கொலீஜியம் அமைப்பும்). அவரது எழுத்துகள் எப்படி அதிகார மையங்களை அம்பலப்படுத்தின, எதிர்த்துக் கேள்வி எழுப்பின என்பதற்கு இந்தத் தலைப்புகளே சான்று.

ஏ.ஜி.நூரானி அதிகாரத்துக்கு எதிரான துணிச்சல் குரல் - ஆர்.விஜயசங்கர் | A.G.Noorani is a brave voice against authority - Tribute to A.G.Noorani - https://bookday.in/

நூரானி எழுதிய கட்டுரைகளின் உக்கிரத்திலிருந்து பிரதமர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் என யாருமே தப்பியதில்லை. ஆயிலும், அவர்கள் யாருமே அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கத் துணியாததற்குக் காரணம், அவரது கட்டுரைகளின் ஒவ்வொரு வரியும் அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையிலானவை. அந்த ஆதாரங்கள் அவர் தன் இரண்டு அறைகளே கொண்டிருந்த எளிய வீட்டின் உள்ளே குவித்து வைத்திருந்த நூல்கள், லூற்றட ஆவணங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளுக்குள்ளிருந்து எடுக்கப்பட்டவை. அவற்றையெல்லாம்விட அவர் வைத்திருந்த ஒரு பொக்கிஷம், 1960களி லிருந்தே அவர் பத்திரிகைகளிலிருந்து கத்தரித்து எடுத்துத் தேதிவாரியாக கோப்புகளுக்குள் இட்டு வைத்திருந்த செய்திகளின் தொகுப்பு. அவர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்த ஒரு விவரம் அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தின்படி வெளியே
கருத்துப் பேழை வரக் கூடாத ஒன்று, அது எப்படி அவருக்குக் கிடைத்தது எனக் கேட்டு மத்திய உளவுத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அவர் சற்றும் தாமதிக்காமல் அந்த விவரத்தைத் தாங்கி வந்திருந்த பத்திரிகைச் செய்தியைத் தனது கோப்பிலிருந்து உருவி எடுத்து அவர்களிடம் காட்டினார். அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.

அபாரமான நினைவாற்றல்:

நூரானியின் அற்புதமான இந்தப் பொக்கிஷங்கள், அவற்றில் எங்கே எந்தத் தகவல் இருக்குமென அவருக்கிருந்த நினைவாற்றல் எல்லாம் வியக்கவைப்பவை. இவற்றைத் தவிர, நாம் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டியது அவர் கணினி, கூகுள், திறள்பேசி என்கிற நவீனத் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில்தான் காலத்தால் அழிக்க முடியாத கட்டுரைகளையும், நூல்களையும் படைத்தார் என்பதுதான்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், 1930 செப்டம்பர் 6இல் பிறந்த இந்த நவீளச் சிந்தனையாளர், தன் 80ஆவது வயதுக்குப் பிறகுதான் கைபேசியைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதுவரை தரைவழித் தொலைபேசி மூலம்தான் பிரதமர்கள், அதிகாரிகள், ராஜதந்திரிகள், பத்திரிகையாளர்கள் என ஒரு பெரிய வலைப்பின்னலை உருவாக்கி வைத்திருந்தார். கடைசிவரை அவர் கைப்படத்தாள் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார்.

அவரது எழுத்துகளில் 90 சதவீதம் தட்டச்சு செய்யப்பட்டவைதான். தட்டச்சு செய்யப்பட்டு, தொலைநகல் மூலம் ‘ஃபிரண்ட்லைன்’ அலுவல கத்துக்கு வந்த கட்டுரைகளைக் கணினிக்கு மாற்றி வெளியிடுவது பெரும் சுமையாக இருந்தது. ஆனால், அவரது அறிவொளி பாய்ச்சும், ஆங்கிலப் புலமை புரண்டோடும் கட்டுரைகளை மெய்ப்புத் திருத்தம் செய்யும்போது சுமைகளெல்லாம் சகமாகிவிடும். அவருக்கு நீண்ட காலம் உதவியாக இருந்த தட்டச்சர் கணினிக்கு மாறியது 2010களில் தாள்.

ஏ.ஜி.நூரானி அதிகாரத்துக்கு எதிரான துணிச்சல் குரல் - ஆர்.விஜயசங்கர் | A.G.Noorani is a brave voice against authority - Tribute to A.G.Noorani - https://bookday.in/

தகவல்களில் துல்லியம்:

காஷ்மீர், ஆர்.எஸ்.எஸ். பாபர் மசூதி இடிப்பு, அரசமைப்புச் சட்டம், மனித உரிமைகள், இந்தியாவுக்கும் சீனா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து 25க்கும் மேற்பட்ட நூல்களையும் தன் பழைய பாணியிலேயே நூரானி படைத்தார். அவையாவும் கொள்கை-சட்டங்களை வகுக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு என்றென்றும் வழிகாட்டிகளாக இருக்கக்கூடியவை நூல்களில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்த அவர், ஏராளமான ஆவணங்களை ஆதாரமாக இணைத்திருக்கிறார். சான்றாக, காஷ்மீர் பிரச்சினை குறித்து அவர் எழுதிய நூலின் முதல் பாகத்தில் 150 பக்கங்கள் கருத்துக்களுக்கும், அதே அளவிலான பக்கங்கள் வரலாற்று – சமகால ஆவளங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கலாச்சார தேசியவாதம் என்கிற பெயரில் வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் குறித்த அவரது நூலில் சுமார் 100 பக்கங்களில் 15 பின் இணைப்புகள் இருக்கின்றன.

எங்களுடைய உரையாடல்களில் உளாவிடங்களைப் பற்றிய பேச்சு அதிகம் இருக்கும். சாப்பாட்டுப் பிரியரான அவர் தளக்கு மிகவும் பிடித்த மும்பை ஜிம்கானா கிளப்பில் எனக்கு விருந் அளிப்பதாக ஒவ்வொரு முறையும் உறுதிகூறுவார். நான்கு ஆண்டுகளுக்கு முன் தன் வாக்கினைக் காப்பாற்றினார். செட்டிநாட்டு விருந்தில் தொடங்கிய எங்கள் நீண்ட உறவு மும்பை ஜிம்கானா கிளப்பில் அவர் எனக்காக ஸ்பெஷலாக வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீமில் ஊறிய ஜிலேபியுடன் ஒரு முழு வட்டத்தை நிறைவுசெய்தது. அது எங்களது கடைசிச் சந்திப்பாக இருக்குமென எனக்கு அப்போது தெரியாது!

எழுதியவர் : 

ஆர்.விஜயசங்கர்

பிரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் ‘தி அய்டம்’ இணைய இதழின் ஆசிரியர்

நன்றி : 

இந்து தமிழ் திசை

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *