சென்னையில் வாசிப்பை பரவலாக்க *Run To Read* மினி மாரத்தானை துவக்கி வைத்தார் காவல்துறை அதிகாரி திரு. ஏ.கே. விஸ்நாதன் IPSசென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு வாசிப்பை பரவலாக்க சென்னை வாசி என்ற “ரன் டூ ரீட்” (Run To Read) நிகழ்வை காவல்துறை அதிகாரி திரு. ஏ.கே. விஸ்நாதன் IPS அவர்கள் தொடங்கி வைத்தார்.

44வது சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு வாசிப்பை பரவலாக்க சென்னை வாசி என்கிற ரன் டூ ரீட் (Run To Read) மித ஓட்டம் (MINI MARATHON) நிகழ்வு இன்று (21.02.2021) காலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வினை காவல்துறை அதிகாரி திரு. ஏ.கே. விஸ்நாதன்IPS அவர்கள் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘வாழ்வில் அனைவருக்கும் படிப்பு அறிவு என்பது இன்றியமையாதத் தேவை என்றார். பொதுவாக மக்கள் தவணை முறையில் பொருட்களை வாங்கும்போது அவர்கள் கொடுத்திருக்கும் நிபந்தனைகளில் கவனம் செலுத்தி படிப்பதில்லை. எனவே அதிலும் கவனைத்தை செலுத்தி கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை கவனமாக படிக்க வேண்டும். சென்னை புத்தகக் காட்சி அறிவை வளர்த்துக் கொள்ள துடிப்பவர்களுக்கு சிறந்த இடம் ஆகும். எனவே அனைவரும் சென்னை புத்தகக்காட்சியில் பங்கேற்று பயனடைய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

காவல்துறை அதிகாரி திரு. திருநாவுக்கரசு IPS அவர்கள் பேசும்போது, புத்தகங்களை கண்டால் ஓடுகின்ற குழந்தைகளை மாற்றி, புத்தகத்தை கண்டு ஓடி வர வேண்டும் என்ற நிகழ்வுதான் இன்றைய நிகழ்வு ரன் டூ ரீட். இந்த நிகழ்வினை எப்படியெல்லாம் புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றன என்பதனை இங்கே சொல்லிக்காட்டிய அகரம் பவுண்டேஷன் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஓட்டத்தை ஓடிவிட்டு வந்த போது எனது நுரையீரல் எல்லாம் ஆக்ஸிஜனைப்பெற்று ஒரு புத்துணர்வை பெற்றேன். ஒன்று புரிந்து கொண்டோம் ஓடினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் பெற்று உடல் வலுப்படும். படித்தால் உங்கள் உள்ளத்தில் ஆக்ஸிஜன் பெற்று உங்கள் வாழ்க்கை புத்துணர்வு அடையும். ஓடுவது உடலுக்காக, படிப்பது வாழ்க்கைக்காக. உங்களது உள்ளத்தை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் புத்தகத்தைப் படியுங்கள். புத்தகங்கள் ஒவ்வொரு மனிதனையும் புனிதனாக்கின்ற ஒரு அறிவுப்பெட்டகம்.

Image

இந்த நிகழ்வினை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் தங்களுடைய ஒட்டுமொத்த முயற்சியின் மூலமாக இந்த மானுடச முதாயத்தை ஒரு அறிவார்ந்த சமூகமாக மாற்றவேண்டும் என்ற மாபெரும் தொலைநோக்கில் இந்த கொரோனா காலத்திலும் கூட புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான நோக்கோடு இதை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிகழ்விற்காக இங்கே வந்து பெருமைப்படுத்திய முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் மிகச்சிறந்த ஒரு படைப்பாளர் மற்றும் படிப்பாளர். இன்று சென்னை முழுவதும் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவி ஒரு பாதுகாப்பான நகரை உருவாக்குவதற்காக தனது முழு பணியையும் அர்ப்பணித்தவர். அவர் இங்கே வந்து இந்த நிகழ்வை துவக்கி வைத்ததற்கு முதலில் நன்றியையும் பாராட்டுகளையும் உங்கள் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று காலை எழுந்தவுடன்எ ல்லோரும் ஓடி இருக்கிறோம். மகாகவி பாரதி சொன்னார் காலை எழுந்தவுடன் படிப்பு என்று நாம் ஓடிச்சென்று ஒரு புத்தகத்தை எடுப்போம் ஓரிரு வரிகளாவது படிப்போம். இன்றை நாம் ஒரு புத்தகத்தை படிக்க முடியவில்லை என்றால் ஒரு தலைப்பில் இருக்கும் பத்துப் பக்கங்களையாவது படித்து விடுங்கள். பத்துப்பக்கங்களும் படிக்க முடியவில்லை என்று நினைத்தால் ஒரு பக்கமாவது படித்துவிடுங்கள். ஒரு பக்கமும் படிப்பதற்கு எனக்கு நேரமில்லை என்று நினைத்தால் ஒரு நான்கு வரிகளில் நாலடியாராவது படித்து விடுங்கள், எனக்கு நாலடியாரையும் படிப்பதற்கு வாய்பில்லை என்று சொன்னால் இரண்டு வரியில் ஒரு திருக்குறளையாவது படித்து விடுங்கள்.

Image

இரண்டு வரியும் படிப்பதற்கு வாய்ப்பில்லை என்றால் ஒரு வரியில் ஒரு ஆத்திச்சூடியாவது படித்துவிடுங்கள். இதையும் என்னால் படிக்க முடியாது என்று சொன்னால் தயவுசெய்து இந்த வாழ்க்கையை நீங்கள் விட்டுவிட்டே சென்று விடலாம். ஏனென்றால் பாரதிதாசன் சொல்வது போல், கல்வி இல்லாத மனிதன் இங்கே களர்வு நிலம். அங்கே புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்று சொல்லுவார். நல்ல மனிதர்கள் உருவாக வேண்டும் என்று சொன்னால் புத்தகங்கள் தான் அவசியமானது. காவல்துறையினரான நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது நல்ல மனிதர்கள் நல்ல எண்ணங்கள் இருந்தால் அவர்கள் சொன்னார்கள் அல்லவா சிறைச்சாலைகள் மட்டும் மூடப்படும் என்பதல்ல. காவல்நிலையங்களும் மூடப்பட்டுவிடும். எனவே நல்ல புத்தகங்களை வாங்கிப்படியுங்கள் அதில் உங்கள் ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள் உங்களை நீங்கள் வெற்றியாளர்களாக மாற்றுங்கள் அந்த நிகழ்வுதான் ஒரு அற்புதமான இந்த நிகழ்வு. நித்தமும் ஓடுங்கள் ஒரு புத்தகத்தோடு ஓடுங்கள். எனவே புத்தகங்களை புரட்டுங்கள் உங்கள் வாழ்க்கையும் புரட்டிப் போடப்படும்.

தலைகுனிந்து நீங்கள் படித்தாலும் கூட உங்களை தலைநிமிர வைப்பது புத்தகங்கள் தான். இந்தநாளில் ஒவ்வொருவரும் படித்து நாம் உயர்ந்து, நமது குடும்பம் உயர்ந்து, நம்மைச் சார்ந்த சமூகம் உயர்ந்து, தமிழகம் உயர்ந்து இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்க உறுதி எடுப்போம். ஓடுவோம் ஒவ்வொரு நாளும் புத்தகத்தோடு ஓடுவோம். இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Image

இந்தநிகழ்வில் சென்னை புத்தகக்காட்சியைப் பற்றி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு. ஆர்.எஸ். சண்முகம், செயலாளர் எஸ்.முருகன், பொருளாளர் அ.கோமதி நாயகம், துணைத்தலைவர்கள் திரு.கே.நாகராஜன், திரு. கோ. ஒளிவண்ணன், திரு. எஸ். சுரேஷ்குமார், திரு. வேடியப்பன், திரு. தினேஷ்  மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.