சிறுகதையின் பெயர்: சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை
புத்தகம் : அ.கரீம் சிறுகதைகள்
ஆசிரியர் : அ.கரீம்
வாசித்தவர்: சி.பேரின்பராஜன் (Ss 138)
[poll id=”66″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
வணக்கம் தோழர். இந்த கதையே மிகவும் உருக்கமானது. . நெஞ்சை நெகிழ்விக்க கூடியது. அதனை நீங்கள் வாசித்த விதம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
இந்த கதையை கேட்கும் யாரும் கண் கலங்காமல் இருக்க முடியாது..தோழர்.பேரின்பராஜன் அவர்களின் குரல் வேறு அதற்கு ஒத்திசைவாக,குரல் மாற்றத்தோடு பேசுவதும் சிறப்பு👌👌👌💐
காஷ்மீர் நிலையை சொல்லும் சிறுகதை. தற்போதிருக்கும் 144 ஐயே நம்மால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. பல வருடங்களாக 144 ஐ அனுபவிக்கும் காஷ்மீரத்தை மக்களின் நிலை அந்தோ பரிதாபம்.
அசீனாவை சொ(கொ)ல்லும் உருக்கமான கதையை சிறப்பாக வாசித்து இருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்
நிகழ்கால நிகழ்வுகள் உணர்த்தும் கதை தேர்வு. அமிர் வாசிப்பு நெகிழ்வான கதை. வாழ்த்துகள் தோழர்
நெஞ்சை பதறவைத்த சம்பவம் ஹாசினாவின் கொடூர கொலை அந்த பிஞ்சின் துடித்துடிப்பை அக்குடும்பத்தின் கதறலை நினைத்தால் இன்னும் மனம் ஆற்றாமையால் துடித்திடும்…
உங்களின் வாசிப்பில் காட்சிகள் கண்முன் விரிந்து சம்பவ இடத்திற்கே மனம் சென்று திரும்பியது என்றால் மிகையல்ல…
அற்புதம் தோழர்…. அருமையான வாசிப்பு இதயம் இன்னும் கனத்து கிடக்கிறது.
தொடரட்டும் உங்கள் வாசிப்பு . என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிறப்பானதொரு கதை தேர்விற்கு முதலில் வாழ்த்துகள்! கதை முழுவதும் பரவியிருக்கும் வலியும் வேதனையும் தோழர்.பேரின்பராஜனின் வாசிப்பின் வழி, கேட்பவருக்கும் கடத்தப்படுகிறது, நெஞ்சினில் பாரமேற்றுகிறது…கதையின் உணர்வை சிறப்பாக தனது குரலின் மூலம் கடத்தியமைக்கு, தோழருக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்..
அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்
தோழர் கதையின் நிச நிகழ்வுகள் காட்சிகளாக கண்முன் உங்கள் வார்த்தை உச்சரிப்புகள் காட்டி கண்கலங்க வைத்துவிட்டது. அமீர் குதிரையாய் இருந்தாலும் உங்கள் வார்த்தைகளில் அதன் துயரத்தையும் கோபத்தையும் காட்டிவிட்டது. ஆனால் இங்கு மனிதர்கள் ஆறறிவு ஆணவத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் விரைவில் ஆணவக்காரர்கள் அழிவார்கள்.
நெஞ்சை உலுக்கும் கதையை அதே உணர்வோடு கதை வாசிப்பில் கேட்பவர்களுக்கு கடத்திய விதம் அருமை. கதை வாசிக்கும் போதும் அமீராக நின்று பேசும் போதும் குரலின் ஏற்ற இறக்கம் உணர்வுகளோடு கலந்து கேட்பவர்கள் மனதில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் தோழர்.
அமீர் சொன்ன கதை நெஞ்சில் இடி போல் இறங்கியது. அந்த மண்ணில் மட்டுமல்ல வேற எந்த மண்ணிலும் அசினா போல் வேறு மலர் கருதக்கூடாது. இதை எழுதிய அ.கரீம் அவர்களுக்கு வாசித்த பேரின்பராஜா அவர்களுக்கும் நன்றி.
👍 “சிதார் மரங்களின் இலைகள்…’கரீம் அவர்கள் எழுதிய கதை. வாசிப்பை நான் கேட்டு மகிழ்ச்சியுற்றேன் என்று கூற மனம் இல்லை அதிர்ச்சியுற்றேன் என்றே கூற வேண்டும் ஏனென்றால் கதையின் கணம் அப்படி. சிறார்களுக்கு நடக்கும் கொடுமை தொடர்ந்து படிக்கவோ கேட்கவோ இயலாமல் மனம் பதைபதைக்கிறது. வாசிப்பாளர் பேரின்ப ராஜன் அவர்களின் குரல் ஏற்ற இறக்கம் அருமை. கண்முன்னே ஒரு படமாக உருவகப்படுத்தி காட்டியது. அந்த குதிரையின் மன ஓட்டத்தை கேட்கும்போது கண்களில் நீர். மௌனமாய் அழுதது வாயில்லா ஜீவன் மட்டுமல்ல வாயுள்ள மனிதர்களும். மிக மிக அழகான வாசிப்பு. கதையை நானே படித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. வாசிப்பாளருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
கதை வாசிக்க,வாசிக்க மனதில் பாரம் கூடிக் கொண்டே சென்றது தோழர். கதை நிகழ்விடம் கண் முன்னே தோன்றியது. அவசியமான இடத்தில் இடைவெளியுடன், குரல் ஏற்ற இறக்கத்துடன் வாசித்திருப்பது அருமை தோழர்.
நன்றி தோழர் பேரின்ப ராஜன்… உங்கள் குரல் மிக மிக மோசம். அவ்வளவு மன நெருக்கடியை வாசிக்கும் அதே வலியை கடத்துகிறது. கதைக்கு உங்கள் குரல் மிகப்பொருத்தம்.
பேரன்பு. இதை கேட்ட கருத்தை பதிந்த அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
அ. கரீம்.
மனதை கணமாக்கும் ஒரு உண்மை கதை. முன்பே படித்தகதையாயினும் தோழர் பேரின்பராஜரின் உருக்கமான குரல் கண்களை கலங்க செய்து கொண்டே இருக்கிறது.
“சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை”சிறுகதை வாசிப்பு அருமையாக இருந்தது.
“சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை” சிறுகதை வாசிப்பு அருமையாக இருந்தது.
அற்புதமான வாசிப்பு. நல்ல குரல் வளம். தோழர் கரீம் அவர்களின் சிறுகதையும் அருமை. மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்…
மிகச் சிறப்பாக கதையை சொல்லியுள்ளீர்கள் ணா…