அ.கரீம் எழுதிய “சைலென்ஸ்” சிறுகதை தொகுப்பு
பெண்கள் சாமியாடி தனது தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வது காலகாலமாக நடப்பது. அவர்களின் தேவைகளை, கோபத்தை அந்த நேரத்தில் நிறைவேற்றி கொள்ளுதல். அது அவர்கள் கையாளும் ஒரு யுக்தி. அதேபோல எழுத்தாளர் அ.கரீம் அவர்கள் சமூகத்தின் மேல் தனக்கு இருக்கும் அக்கறையால் அவரின் உணர்வின் வெளிபாடுகளை சைலென்டாக கழுத்தைக்கு மனு கொடுத்து குருதி வாடை வீசம் லாதி (லத்தி ) ஊடாக (அக்கப்)போரும் அமைதியும் வாசம் வீச உத்தரவு பிறப்பித்து ஆழித்துயர் துடைக்க பலாப்பழங்களை தித்திப்பாக அளித்து அம்பத்தாறாமங்குல பெரும்வழுதி மன்னன் அரசாண்ட கதையாக இந்த சிறுகதை தொகுப்பை நமக்கு அளித்துள்ளார்.
சிறுகதை தொகுப்பு ஒரு இரயில் பயணம் போல. வெவ்வேறு கம்பெர்ட்மென்ட், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு குடும்பங்கள் பயணித்தாலும் எல்லோரும் மனிதர்கள். அப்படி தான் இந்த தொகுப்பில் இருக்கும் கதைகள்யாவும். கூட்டத்தில் இருக்கும் ஒருவரை பற்றி. அது நாமாக கூட இருக்கலாம். பயணிப்பவர்கள் எல்லோரும் கூட்டத்தில் இருக்கும் சாமான்ய மனிதர்கள். ஏனெனில் இன்று பாடுகள் படுவது சாமான்ய மனிதர்கள் தானே. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, பாடுகளை அவர்களின் வலிகளை ஏன் சில கதைகளில் தீர்புகளை கூட அவர்கள் கையால் அளித்துள்ளார். தீர்ப்புகளை எழுத நீதிபதிகளால் மட்டுமே முடியும் என்பதை உடைத்து தனி ஓரு மனிதனாலும், அந்த மனிதனும் பணம் படைத்தவனோ, படித்து பட்டம் வாங்கியவனோ இல்லை வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மனிதர்களாலும் முடியும் என தனது தீர்ப்பை எழுதியுள்ளார். அது தான் இந்த தொகுப்பின் சிறப்பு. இந்த சிறுகதை தொகுப்பின் எனது விமர்சன பார்வை:
குருதி வாடை : குருதி வாடை கதை வாசிக்க துவங்கியவுடன் குறுதி வாடை வாசிக்கும் வாசகரை சூழலாமால் நுகராமல் செல்ல இயலாது. காவல்துறை என்றால் மக்கள் அவர்களை பார்க்கும் கோணம் வேறு. அவர்கள் அவர்களை பார்த்து கொள்ளும் கோணம் வேறு. ஸிஸ்டம், சமூக அழுத்தம், அதிகார அழுத்தம் அரசு அழுத்தம் என பலதரப்பட்ட அழுத்தத்தை காவலாளிகள் சுமந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு சம காலத்தில் மன உளச்சல் அதிகமாக உள்ளது. விதிவிலக்காக சில இடங்களில் அதிகாரிகளே சட்டத்தை அதிகாரத்தினால் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு பேராட்டத்தில் சிறுமியை துப்பாக்கி குண்டு துளைத்து இறந்துவிடுகிறாள். அந்த இறப்பு அவனின் நெஞ்சிலும் நிழலாய் துளைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக அவனின் மனம் நனவலி மனமாக மாறி அவன் குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதை இந்த சிறுகதை பேசுகிறது
சைலென்ஸ்- அமைதி பல ரகசியங்களின் பொக்கிஷம். நீதிமன்றத்தில் சொல்லும் சைலென்ஸ் என்ற வார்த்தையும் அப்படி தான். பல உண்மைகலுக்கு போடப்படும் பூட்டு. கைதியாக இருக்கும் ஒரு நபர் நீதிபதி மற்றும் நீதிமன்றத்தில் இருப்பவர்கலுக்கு என்ன தீர்ப்பு அளித்தார் என்பது தான் கதை.
வாசம். ஒரு பெயர் அடையாளமாகிறது. அந்த பெயர் ஒருவனை செய்யாத தவறுக்கு தண்டனை அளித்து மனபிறழ்வு நோயாளியாக சிறையில் வாழ்நாளை கழிக்க வைக்கும் என்றால் மனிதர்களுக்கு பெயர் எதற்கு? பெயறற்ற மனிதர்களாகவே வாழ்ந்து விடலாமே. அல்லது மொழியே இல்லாமல் வாழ்ந்து விடலாம். இந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரால் அவருக்கு காவல்துறையினால் உண்டாக்கும் அவலங்களை பேசுகிறது இந்த சிறுகதை.

{அக்கப்)போரும் அமைதியும்: எழுத்தாளர் உயிர் பெற்று விடுகிறார் (அக்கப்) போரும் அமைதியும் கதை எழுதும் போது. கதாபாத்திரம் ஊடே கதையின் வழியில் எட்டி எட்டி பார்கிறார் எழுத்தாளர். சில இடங்களில் புத்தகம் வாசிக்கும் போது கைபேசி வந்து வாசிப்பின் தொடர்ச்சியை தடை செய்வதாக தோன்றினாலும் சில இடங்களில் நெருங்கிய உறவு அழைத்து பேசும் போது வாசிப்பை மறந்து பேச விரும்புவதும் போலவும் உள்ளது. சமகாலத்தில் நடப்பதை 2030 ஆம் வருடத்திற்கு காலச் சக்கரத்தை சுழற்றி அதிபரை புகைப்படத்தில் தொங்கவிட்டு ஒரு எழுத்தாளரின் சுதந்திரம் எந்நிலையில் உள்ளது என்பதை பகடி நடையை அமைத்து நமக்கு அளித்துள்ளார். காவல்நிலையத்தில் இருக்கும் காவலர் நிலையையும் அவர்களின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார். புனைவு என கதை முழுவதும் கொண்டு சென்றவர் கோயிலின் அடையாளம் பெயர் கொண்ட எழுத்தாளரை மட்டும் நேரடியாக கதைக்குள் அழைத்து வந்துவிட்டார். மொத்தத்தில் ஒரு எழுத்தாளரின் பெயர் என்னவாக இருக்க வேண்டும், எந்த உடை ஆணிய வேண்டும், எந்த புத்தகம் வாசிக்க வேண்டும் என அவர்களின் சுதந்தரத்தை தனதாக்கி கொள்ளும் அரசின் கதையை பேசுகிறது.
லாதி: கதை குறவர்கள் கூட்டம். ஒரு இனத்தின் அடையாளம் குற்றபரம்பரையாக வலம் வருகிறது. காட்டை காப்பாற்ற போராடியவர்கள் இன்று திருட்டு பட்டம் சுமந்து கொண்டு பலி ஆடுகளாக இறப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இந்த சம்பவம் சில திரைப்படங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் ‘லாதி” வழியாக இந்த கதையாடல் எப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்பதில் தனித்துவமாக விளங்குகிறது. அதிகார வர்கத்தை பொருத்தவரை தண்டிக்க ஒருவர் வேண்டும். அவரை சார்ந்த நபர்களும் வேண்டும். இந்த சிறுகதையில் அந்த ஒருவர் யார்? அவரின் குடும்பத்தினர்கள் யார்? என்பதை
பலாப்பழச்சுளை : திருநங்கை. தொலைக்காட்சி விழாவில் திருநங்கை கவிதை வாசித்த கருவின் சில வரிகள். எங்கள் இனத்திலா ஜாதி இல்லை. எங்களுக்கு கருப்பை இல்லை. ஆனால் தாய் உண்டு. பல அழமான உண்மைகளை பகிர்ந்து கொண்டார். நிஜம் தானே!. முக்கியமாக அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. தாங்கள் நினைத்தை செய்ய முடிகிறது. சமூகம் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டால் அவர்கள் சம மனிதர்கள் போல வாழ இயலும். அவர்களிடம் பிரச்சனை இல்லை. சமூகத்தில் தான் பிரச்சனை உள்ளது. அப்படி சமூகத்தால் குடும்பத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மனுஷி பற்றிய கதையை பேசுகிறது இந்த சிறுகதை. பலாபழங்களுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்மந்தம். வாசித்து தெரிந்துக் கொள்ளலாம்.
கழுதைக்கு மனு: ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு விண்ணப்பம் கொடுத்தால் அது ஒவ்வொரு டேபிளாக போய் கடைசியில் ஆரம்ப நிலைக்கே வந்துவிடும் அவலம். மருத்துவ வளர்ச்சி,வீதிக்கு வீதி மருத்துவமனைகள் ஆனால் நோயாளிகள் கூட்டம் கூட்டாமாக பெருகுவது போல… டிஜிட்டல் ஸிஸ்டம், எல்லாம் உண்டு. ஆனால் பாமர மக்களின் கோரிக்கைகள் கேட்பார் அற்று கிடப்பது தான் இன்றைய நிலை. இந்த சூழலில் கழுதைக்கு மனு கொடுத்தால் என்ன ஆகும்? யார் எதற்காக எங்கு எப்படி எப்போது எந்த மனுவை கொடுத்தார்கள். அந்த மனுவை கழுதை பரிசீலனை செய்ததா என்பது தான் கதை.
ஆழித்துயர்: கலவரம். அது முடிந்தவுடன் காவா வழியாக உயிர் பிழைத்து இரயில் பயணத்தில் ஒவ்வொரு இடத்தில் இறங்கி கடைசியில் பேருந்து நிலையத்தில் அடைக்கலம் அடைவது யார்? அவருக்கு யார் உதவி கரம் கொடுக்கிறார்கள். கலவரத்தால் எதை எல்லாம் இழக்கிறோம் என்பதை இந்த கதை பேசுகிறது.
உத்தரவு சிறுகதை மாரியம்மா, ஓ ஏ ஆபிஸ் அஸிஸ்ட்டண்டை வைத்து நீதிமன்றத்தில் ஒரு கடைநிலை ஊழியர்கள் படும் பாடுகளை சொல்ல சொல்ல நீதிமன்றம் காட்சிபடலமாக கண்முன் விரிகிறது. மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம். வக்கீல்கள் படுத்தும் பாடுகளை சொல்ல முடியாது. முடியாது என்ற வார்த்தை அவர்களின் அகராதியில் இல்லை. பார்த்துக்கலாம்…. இளம் வயதில் ஒரு பிரச்சனை கொண்டு அவர்களிடம் சென்றால் முதுமையிலும் அந்த பிரச்சனை முடியாமல் இருக்கும் வழக்குகள்பல பல. எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு. இந்த கதை நீதிமன்றத்தில் பணி புரியும் பெண்ணின் நிலையை துல்லியமாக பேசுகிறது. நீதிபதிக்கே மாரியம்மா தீர்ப்பு வழங்குகிறாள்? அது என்ன தீர்ப்பு என்பது தான் கதை
அம்பத்தாறாமங்குல பெரும்வழுதி மன்னன் அரசாண்ட கதை சமகால அரசியலை பேசுகிறது. இந்த சிறுகதை வாசிக்கும் போது தமுஎகச மாநாட்டில் பூபாளம் பிரகதீஸ்வரன் நையாண்டி மேடை நாடகம் கண்முன்னே காட்சியாக விரிகிறது. மக்களின் நலனுக்காக மக்களின் பாதுகாப்புக்காக, மக்களின் கவசமாக இருப்பதாக நம்ப வைக்கப்படுவது அரசாங்கம், அரசு அலுவலகங்கள், காவல்துறை, நீதிதுறை. அது ஒரு நம்பிக்கையாக மட்டுமே ஏட்டில் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம்.
எழுத்தாளர் கரீம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “சைலென்ஸ்” சிறுகதை தொகுப்பு |
| ஆசிரியர்: | அ. கரீம் |
| வெளியீடு: |
எதிர் வெளியீடு
|
| விலை: | ₹.120 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 சாந்தி சரவணன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

