கொரானாவிற்கு எதிராகப் போராடும் முன்னணிப்படை – அண்ணா.நாகரத்தினம்

கொரானாவிற்கு எதிராகப் போராடும் முன்னணிப்படை – அண்ணா.நாகரத்தினம்

 

கொரானாவின் தாக்குதலால் நேரடியாகப் பாதிப்படைந்தவர்கள் தினக்கூலிகளும் அமைப்புச்சாரா தொழிலாளர்களும்தான். 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்  ஊரடங்கின்போது  இவர்கள் வேலைக்கும் போகமுடியாமலும் வீட்டிலும் இருப்புக் கொள்ளாமலும் புகைந்துக் கொண்டிருக்கின்றனர்.

காலம் முழுக்க இவர்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளும், அரசுகளும் கொரானா போன்ற நெருக்கடியான காலங்களில்கூட  பாதுக்காக்க வேண்டிய தார்மீக கடமையைக் கூட செய்யாமல், இவர்களை கைகழுவி விட்டனர். உழைகின்ற மக்கள் தங்கள் வாழ்க்கைக்கான உரிமையைக் கூட கேட்க முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்த அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நிலை பற்றியும் இந்த நெருக்கடியான காலத்தில் இவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைப் பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது.

உலகமயம் அளித்த  கொடை

1990 களில் உலகம் முழுவதிலும் புதிய உற்பத்தி முறையும், பொருளாதார ஒழுங்குமுறையும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளைச் சார்ந்த அனைத்துப் பணிகளின் தன்மைகள் இப்போது மாறிவிட்டன.  அமைப்புச் சார்ந்த தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அமைப்புச் சாராத் தொழிலாளிகளின் பட்டாளம் உருவாக்கப் பட்டது. தினக்கூலி வேலை, பகுதிநேர வேலை, ஒப்பந்தப்பணி, பாதுகாப்பற்ற வேலை, ஆபத்து நிறைந்த பணி, உதிரி வேலை, பீஸ் ரேட் பணி, கடன்பொறியுடன் பிணைக்கப்பட்ட கொத்தடிமை, நவீன வடிவிலான அடிமைப்பணி போன்ற நிரந்தரமற்ற நிலையற்ற தொழில்நிலைமை உருவாக்கப் பட்டிருக்கின்றது.

தாராளமயமாக்கலுக்கு பின்னர் 2013 ஆண்டில் மட்டும் உருவாக்கப்பட்ட 6.1 கோடி வேலைகளில் கிட்டத்தட்ட 92% முறைசாராவைஇப்போது இந்த எண்ணிக்கை 50 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவையாவும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகிய கொள்கைகள் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.  2018-19 இல் மொத்த தொழிலாளர்களில் 93.1% முறைசாரா தொழிலாளர்கள்.  உலக அளவில் மொத்தமுள்ள 330 கோடி தொழிலாளர்களில் 200 கோடி பேர் முறைசாரா தொழிலாளர்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்புக் கூறுகின்றது.

இவ்வாறு வரைமுறையற்ற வகையில் சுரண்டப்படும் ஒரு தொழிலாளர் பட்டாளத்தை முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது.  இவர்களுக்கு எந்த வகையிலும் வேலை உத்தரவாதம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எந்த காரணமுமின்றி வேலையிலிருந்து நீக்கப்படலாம். வேலை நேரம் வரையறுக்கப்படுவதில்லை. எட்டுமணி நேரம் என்பது இல்லை. நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும். அதிக வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம் கிடையாது.

ஊதிய உயர்வில்லாத பொருளாதாரமாக ...

சட்ட ரீதியான எந்த உரிமையும் கிடையாது.  உரிய சம்பளம் கிடையாது. பஞ்சப்படி கிடையாது. வேறு எந்த படிகளும் கிடையாது. வாழ்விடத்தில் அடிப்படையான வசதிகள் கிடையாது. மோசமான வாழ்நிலை. வேலை இடத்தில் தேவையான பாதுகாப்பு எதுவும் இருக்காது.  விபத்து நேர்ந்தால் சாகவேண்டியதுதான். இவர்களுக்கு சமூக நலன்சார்ந்த எந்த திட்டமும் கிடையாது. விடுமுறை கிடையாது. விடுமுறை எடுத்தால் கூலி கிடையாது.  ஒன்று சேரமுடியாது. தொழிற்சங்கம் கிடையாது. உழைப்பை மலிவான விலைக்கே விற்க வேண்டிய நிர்பந்தம் எப்போதும் இருக்கும். உழைப்பைச் சுரண்டுபவர்கள் எந்தவிதமான ஒழுங்குமுறைக்கும் கட்டுப்படவேண்டிய அவசியமில்லை. இதுதான் இவர்களின் நிலைமை.

 சுகாதாரத் துறை புறக்கணிப்பு

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ...

உலகயமக் கொள்கைகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட துறைகள் சுகாதார துறையும் கல்வித்துறையும்தான். 1990 களுக்கு முன்பு பொதுசுகாதாரத்தில் இந்திய அரசு சமூக நலன் சார்ந்த சில அடிப்படையாக விசயங்கள் இருந்தன. அதற்கு பின்னர் பொதுசுகாதாரம் படிப்படியாக கைவிடப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது சுகாதார செலவினங்களுக்கான ஒதுக்கீடு, 1.28% ஐ தாண்டவில்லை.

பல வருடங்களாக முதலாளிகளும் அவர்களின் அரசாங்கங்களும் பொது சுகாதார அமைப்புகளை அழித்து, மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மிகவும் ஆபத்தானதாக ஆக்கி, தங்கள் இலாபத்தை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன் மிருகத்தனமான சமத்துவமின்மையை உருவாக்குகின்றன.  இது போன்ற நெருக்கடியான காலங்களில் சுகாதாரத் துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு கடுமையாக சுரண்டப்படுகிறார்கள் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கொரானாவிற்கு எதிரான முன்னணிப் படை

கொரானா வைரஸ் கொலைவெறியுடன் தெருத்தெருவாக அலைந்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அந்த தெருக்களில் கொட்டப்பட்டுள்ள மொத்தக்  கழிவுகளுடன் தம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர்கள், கொரானா தனது தாக்குதலைத் தீவிரபடுத்தியுள்ள இந்தச் சூழலில், சமூகத்தைப் பாதுகாக்கின்ற பணியில் இவர்கள் முன்னிறுத்தப் படுகிறார்கள். தம் உயிருக்கு எந்த வகையில் தீங்கு நேரிடும் என்ற கவலையில்லாமல், எதையும் எதிர்பார்க்காமல் தன்னலமற்ற உழைப்பால் உயர்ந்து நிற்கின்றனர் இந்தச் சுகாதாரப் பணியாளர்கள்.

இவர்களது பணிகளை மெச்சி, அரசு கொண்டாடுகிறது, ஊடகங்கள் உச்சி முகந்து புகழ்கின்றன. பொதுமக்களும் அவர்களை பூசிக்கிறார்கள், வணங்குகிறார்கள். இவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல், எப்போதும் போல தமது வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தூய்மைப் பணியாளர்கள்.

இவர்கள் மட்டுமல்ல, கொரானாவிற்கு எதிரான போராட்டக் களத்தில் ஆஷா என்ற கிராம சுகாதாரச் சேவகிகள், துணை செவிலியர் மருத்துவச்சிகள் மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்கள் போன்ற ஆரம்ப சுகாதார ஊழியர்களும் இருக்கிறார்கள்.

Coronavirus: Tamil Nadu extends lockdown till April 30, seventh ...

மேலும் நாடுமுழுவதும் உள்ள போக்குவரத்து, உணவு, தளவாடங்கள் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் கொரானாவிற்கு எதிரான அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நிர்வாக எந்திரத்தின் அடிமட்டத்தில் அமிழ்ந்துக் கொண்டிருக்கு இந்த உழைக்கும் மக்கள்தான் இன்று கொரானாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வரிசையில் நின்று போராடி வருகின்றனர்.

இவர்கள் அரசின் கீழ் மட்ட பணியாளர்கள். இவர்களில் பெரும்பான்மையினர் ஒப்பந்தப் பணியாளர்களாகவும் தற்காலிகத் தொழிலாளர்களாகும் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் தலித்துகளும் ஆவர். இவர்களுக்கு முறையான சரியான சம்பளம் கிடையாது. இவர்களது பணிகள் வரைமுறைக்கு உட்பட்டதில்லை. வேலை நேரம் வரையறுக்கப் படுவதில்லை. அதிக வேலை நேரம், ஆனால் மிகக் குறைந்த சம்பளம் என்பதுதான் விதி.

கொரானா தாக்குதலின் மொத்த விளைவும் இந்த சுகாதாரப் பணியாளர்கள் போன்ற உழைக்கின்ற மக்களின்மீது திணித்து, இந்திய அரசு அவர்களை கடுமையான ஒடுக்குமுறைக்கும் கொடூரமான சுரண்டலுக்கும் ஆட்படுத்தி வருகின்றது.   சமூக நலன், சமூகப் பாதிக்காப்பு என்ற பெயரில் இவர்கள் மீதான சுரண்டல் கொடூரமான முறையில் தீவிரப்படுத்தப்படுகிறது.

பொதுவாக, பராமரிப்புத் தொழிலாளர்கள் முக்கிய பணிகளில் பணிபுரிந்த போதிலும், அரசுகள் அவர்களின் மோசமான வாழ்க்கை மற்றும் பணிநிலைமையைக் கண்டுகொள்வதில்லை.  தூய்மைப் பணியின் போதும் பராமரிப்பு பணியின் போதும், வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பில் பணிபுரிந்த போதிலும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், ஆரம்ப சுகாதார ஊழியர்களுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.

இந்த நெருக்கடியான நேரத்தில், அவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு வழங்கப்படவில்லை.  இதனால் அவர்கள் பெரும்பாலும் உணவைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.  வெறிச்சோடிய சாலைகளில் நேரங்கெட்ட நேரத்தில், பல நேரங்களில் கால்நடையாகவே பயணிக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர்.  மேலும் ஆரம்ப சுகாதார ஊழியர்களுக்கு பயண பாஸ்கூட வழங்கப்படவில்லை.

இரவு நேர கடமையின் போது போக்குவரத்து வசதி, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு போன்ற சட்டரீதியான பயன்கள் கிடையாது.  சில நேரங்களில் காவல்துறையின் அத்துமீறல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  வழக்கமான கணக்கெடுப்புகளின் போது அவர்கள் சமூகங்களால் துரத்தப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. இவர்கள் குடியிருக்கும் பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதற்கான அச்சுறுத்தல் இருந்துக் கொண்டே இருக்கும்.

ஆரம்பச் சுகாதாரத் தொழிலாளர்கள்

இவர்கள்தான் மருத்துவம் சுகாதாரம் தொடர்பான விசயங்களை  அன்றாடம் மக்களிடம் நேரடியாக கொண்டு செல்பவர்கள். தற்போது கொரானாவால் அனைவருக்கும்  ஏற்படக்கூடிய ஆபத்துக்களை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்பவர்களாக இருக்கின்றனர்.  ஆனால் இவர்களுக்கான சுய பாதுகாப்புக் கருவிகள் இல்லை.  பராமரிப்புத் தொழிலாளர்கள் மீது அரசு எவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

​​சுகாதாரப் பணியாளர்கள் உண்மையில் கொரானாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வீரர்கள்.  மொத்தமுள்ள சுகாதார ஊழியர்களில், கணிசமான பிரிவினர் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆவர்.

COVID-19 கணக்கெடுப்பின் போது ஆஷா ...

ஆரம்ப சுகாதார ஊழியர்கள் பெரும்பாலும் தன்னார்வத் தொழிலாளர்களாக பணிபுரிவதால், அவர்களுக்கான சுகாதார நலன்கள், விடுப்புகள் போன்ற சமூகப் பாதுகாப்பிற்கு எந்த உரிமைகளும் இல்லை. கொரானாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் அவர்களின் நியாயமான மற்றும் அத்தியாவசிய கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

துணைச் செவிலியர் மருத்துவச்சி என்றழைக்கப்படும் சுகாதாரப் பணியாளர்கள்தான் சுகாதார திட்டங்களை சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் இணைப்புக் கண்ணியாகத் திகழ்பவர்கள். சுகாதார அமைப்பில் அடிமட்டத்தில் பணிபுரியும் இவர்கள், ஆரம்ப சுகாதார துணை மையங்களில் பணிபுரிகின்றனர். கொரானா பாதிப்பிலிருந்து மக்களை காப்பற்ற நேரடியாக களத்தில் நிற்பவர்களுள் இவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்

ஆஷாஎனப்படும் கிராம சுகாதாரச் சேவகிகள்

இதன் முக்கிய நோக்கம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நலனைக் கிடைக்குமாறு செய்தல். கற்பிணிப் பெண்களை பராமரித்தல், குழந்தைகளுக்கான் ஊட்டச்சத்து அளித்தல், முதியோர் பாதுகாப்பு போன்றவை இவர்களது பணிகளாகும்.

இந்தப் பணிக்கு பெண்களை மட்டும் குறிவைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள். அதிலும் கைவிடப்பட்ட பெண்கள், விவாரத்து ஆன பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மற்றும் மலைவாழ் மக்களிடமிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர்.

ASHA Worker Salary [Pay Scale] (Protsahan Rashi) - 7th PAY ...

பொதுவாக மற்ற வேலைகள் மாதிரி இதுவும் ஒரு பணி என்று பார்ப்பதில்லை. இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் தன்னார்வர்களாக இருக்க வேண்டும் அதாவது எதையும் எதிர்பார்க்காமல் தானாக முன்வந்து பணிபுரிய வேண்டும் என்று அரசு போதிக்கிறது.

பயனாளிகளை அக்கறையுடன் கவனிக்கும் சேவை மனப்பான்மையுடன் இந்த வேலைகளை செய்யவேண்டும் என்று அரசு எதிர்ப்பார்க்கிறது.  பொதுவாக, இந்தப் வேலையை உழைப்பைச் செலுத்தும் திறமைவாய்ந்த பணியாக யாரும் பார்ப்பதில்லை. இந்தப் பணியில் ஈடுபடும் பெண்களே தங்களை இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இதற்கு மிகக்குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.

இவர்களும் கொரானா பாதிப்பை எதிர்த்த சுகாதாரப் பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.  இது இவர்களுக்கு கூடுதல் பணி. இதற்கு என்று தனியாக எந்த சம்பளமோ ஊதியமோ கிடையாது.

செவிலியர்கள்

பணி மாற்றம் செய்ய பணம் கேட்பதாக ...

செவிலியர்கள் தொடர்ச்சியான முறைகளில் ஷிப்டுகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள், அவர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.  கொரானாவிற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் கூட, அவர்கள் பரிசோதிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, அவர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர்கள் மருத்துவ விடுப்பில் வெளியேற்ற வேண்டும் அல்லது ஊதிய இழப்பை சந்திக்க வேண்டும்.

பல இடங்களில், டாக்டர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் செவிலியர்களுக்கு நெரிசலான மற்றும் அழுக்கு நிறைந்த அறைகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் தங்குமிடம் மறுக்கப்பட்டன.

கடுமையான சுரண்டல்

ஆஷா தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை மட்டும் சம்பளம் பெறுகிறார்கள், இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகின்றது.  இந்த அற்ப சம்பளத்துடன் கூட, பயணத்திற்கும் எழுதுபொருட்களுக்கும் செலுத்த வேண்டிய பொறுப்பு அவர்களைச் சார்ந்தது. அங்கன்வாடி தொழிலாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோருக்கு மிகச் குறைந்த சம்பளம் பெறுகிறார்கள். சுகாதாரப் பணியாளர்கள் பெரும்பான்மையானவர்கள் அவர்களின் பணிக்கு தேவையான பாதுகாப்பிற்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் அற்ப ஊதியங்களுக்கான அபாயகரமான  பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

 in the ...
India’s ASHA workers: The backbone of primary healthcare

செவிலியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தப் பணிகளில்  பெரும் எண்ணிக்கை யுள்ள சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது மலிவான ஊதியத்திற்கு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மிகக் குறைவாக  சம்பளத்தில் வேலை செய்கிறார்கள், அதேசமயம் பெருநகரங்களில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அதிக சம்பளம், பணிப்பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான உரிமைகள் அனைத்தையும் பெறுகின்றனர்.  இந்த ஊதிய வேறுபாடுகளை எதிர்த்து  செவிலியர்கள் பல கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும் செய்து வருகின்றனர். அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படும் துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்யும் அதிகாரத்தை சட்டம் அரசுக்கு வழங்குகிறது.

நோய்க்கு ஆளான மருத்துவர்கள்

Bengaluru locals attack, snatch phones of Asha workers checking ...

பராமரிப்பு தொழிலாளர்களும் மருத்துவர்களும் கொரானா நோயால் பாதிக்கப்படுவது குறித்த செய்திகள் இந்தியா முழுவதும் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 3 ஆம் தேதி, 50 மருத்துவர்கள்  கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுவதால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.  ஏப்ரல் 17 நிலவரப்படி, டெல்லியில் குறைந்தது 600, மும்பையில் 160, ராஜஸ்தானில் 50 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டிலும் மருத்துவர்கள் கொரானா நோயினால் பாதிப்படைந்துள்ளனர்.

கருத்தியல் தாக்குதல்கள்

இந்தப் பணியாளர்கள், அறிவுபூர்வமாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பணிபுரிகின்றனர். ஆனால் இந்தப் பணிகளில் செலுத்தப்படும் உழைப்பு, திறமையற்ற உழைப்பாகவே கருதப்படுகிறது.  ஏன் மற்ற பணியைப் போல ஒரு பணியாக கூட கருதப்படுவதில்லை. இந்த அணுகுமுறையினால்தான், பொதுமக்களிடம் பராமரிப்புப் பணிகளின் மீது மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போகின்றன.    பணியை ஒரு வேலையாக மதிக்காத போக்கு  இருப்பதால் இவர்களுக்கு பணியின் போது ஏற்படும் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது.

பொதுவாக பெண்கள் என்றால் மற்றவர்களைக் கவனித்துக் கொள்பவர்கள், பேணிப் பராமரிப்பவர்கள்; ஆண்கள் என்றால் நோயாளிகளைக் குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டவர்கள் என்ற கண்ணோட்டம் பொதுபுத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. காலங்காலமான இதுபோன்ற கருத்தியல்களை பொதுபுத்தியில் திணிப்பது மட்டுமல்லாமல், உழைக்கின்ற மக்களிடமும் புகுத்தியுள்ளது.

பாலின வேறுபாடும் சாதியக் கண்ணோட்டமும்

கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், முழு உடலையும் சிறப்பு கவசத்துடன், நீல நிற ஆடைகளால் மூடியவாறு இருக்கின்றனர். உடலில் கண்களை தவிர்த்து அனைத்து பாகங்களும் இந்த பாதுகாப்பு உபரகரணங்களால் மூடப்பட்டுள்ளன. இதுபோன்ற தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் சிலருக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. ஆனால் அங்கு பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி அங்கு சேரும் குப்பைகளைப் பிரித்துக் கையாளுகின்றனர். கையுறைகள் கிடையாது.

வினவு | Tamil news analysis, alternative politics, culture ...

முகக் கவசம் கிடையாது. கால்களுக்கு பாதுகாப்பு உறைகள் கிடையாது. பல இடங்களில் அவர்களின் உடைகளைக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு பணிபுரிவதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. கொரோனா சிறப்பு வார்டுகளின் பின்புறங்களில் கொட்டப்படும் உபயோகப்படுத்தப்பட்ட கையுறைகள், முகமூடிகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றை இவர்கள்தான் அகற்ற வேண்டும். ஆனால் இவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை.

இந்தியாவின் கொரானா ஒழிப்புப் பணிக்குழுவில் பராமரிப்புத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. எல்லா அரசுகளும் எல்லா விசயங்களிலும் இவர்களைப் புறக்கணித்தே வந்துள்ளன.

சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  ஆனால் இவர்களின் கௌரவம் மற்றும் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன. சட்டபூர்வமான உரிமைகள் பறிக்கப் படுகின்றன. மேலும் இது போன்ற தொழில்கள் பாலின ரீதியில் வகைப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது.  சமூகத்தின் அத்தியாவசியமான இது போன்ற பணிகளில்,  பாலின வேறுபாடு,  சாதியக் கண்ணோட்டம் மற்றும் கருத்தியல் ரீதியான தாக்குதல்கள் அப்பட்டமாக வெளிப்படுகின்றன.

சுகாதாரத் துறைச் சார்ந்த தொழிலாளர்கள் கடுமையான முறையில் சுரண்டப்படுவதோடு மட்டுமல்லாமல் சாதிய ரீதியாகவும் பாலின ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த சுகாதார பணியமைப்பு என்பது உழைப்புச் சுரண்டல், சாதிய, பாலின வேறுபாடு மற்றும் பிற்போக்கு கருத்தியல்கள் ஆகியவற்றால் இறுக பிணைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இறந்தவர்கள் அதிகமானோர் அடித்தட்டுமக்கள்

ஆரம்பத்தில் இந்த நோயைப் பரப்பியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர், நிறுவனங்களின் மேலாளர்கள். அவர்கள் உலகெங்கிலும் தவறாமல் பயணம் செய்கிறவர்கள். வைரஸ் தனிப்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியவுடன், மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். உதாரணமாக, அமெரிக்காவில், கறுப்பின மற்றும் ஹிஸ்பானிக் மக்களிடையே அதிகமான இறப்புகள் உள்ளன. இதேபோல் பிரேசிலிலும், கறுப்பின மக்கள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரானாவிலால்  பாதித்தவர்கள் பெரும்பான்மையினர் கறுப்பர்களும் தொழிலாளர்க்ளும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கொரானாவின் பிந்தைய விளைவுகள்

No https://itunes.apple.com/us/app/club-it/id560033939?mt=8 https ...

பெரிய முதலாளிகளும் அவற்றின் அரசாங்கங்களும் நெருக்கடியைப் பயன்படுத்தி, பணிநீக்கங்கள், தொழிற்சாலை மூடல்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களைச் செய்வதற்கு தாயாராகி வருகின்றனர். இதனால், கோடிக்கணக்கான மக்களை பசிக்கும் பட்டினிக்கும் ஆளாக நேரிடும்.  ஏற்கனவே வேலையின்மை மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றின் அதிகரிப்பைப் பயன்படுத்தி முதலாளித்துவம் ஊதியக் குறைப்பு மற்றும் அதிகமான வேலை நேரங்களை விதிக்க முயற்சிக்கின்றன.  இந்த சூழ்நிலைகளில் கூட உழைக்கின்ற, ஏழை மக்கள் மீதான ஒருக்குமுறைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

தொற்றுநோய்களுக்குப் பின்னர்  வரப்போகிற சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகள் தெளிவாக வெளிப்பட்டுக் கொண்டிருகின்றன. கொரானாவின் பாதிப்பின் விளைவாக சுமார் 160 கோடி பேர் வேலையிழந்து வருமானம் இழந்து தவிக்கும் நிலை உருவாகும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. முதலாளித்துவ அறிஞர்களே தொழிலாளி வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களால் கிளர்ச்சிகள் நிகழ்க் கூடும் என்பதையும் எச்சரிக்கிறார்கள்.

ஏழைகளுக்கும் பட்டினியும் பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடியும்

நிதி மற்றும் பண நெருக்கடிக்கு உள்ளாகும் நலிவடைந்த  நிறுவனங்களை மீட்டெடுத்தல்தான் முதலாளிகளின் முதல் நடவடிக்கையாக இருக்கும். இந்த நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் வழங்கப்படுகின்றன, அவை ஒருபோதும் திருப்பிச் செலுத்தாது, அல்லது சாதகமான சூழ்நிலைகளில் திருப்பிச் செலுத்தாது. இந்த நிறுவனங்கள் பணத்தை என்ன செய்கின்றன என்பதை யாரும் விசாரிக்க மாட்டார்கள் அவற்றின் திவால்நிலை பாரிய பணிநீக்கங்களையும் நெருக்கடியின் தீவிரத்தையும் குறிக்கும்

இப்படி அடுத்த வேலை சோற்று என்ன செய்வது என்று கஷ்டப்படும் மக்கள் ஒருபுறம். மறுபுறம் லாக்டவுனால் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களது வருமானத்தினை இழந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக ஆர்பிஐ அறிவிப்பின்படி வங்கிகள் அனுமதி கொடுத்தாலும், 90 நாள் தடைக்கு பின்னர் வட்டியை கட்டித்தானே ஆக வேண்டும்.

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 ...
மெகுல் சோக்சி, விஜய் மல்லையா,நிரவ் மோடி

ஏழை மக்களின் உணவுகளுக்கு எந்தவித உதவிகள் செய்யாமல் இருக்கின்ற இந்திய அரசு,  பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறிப்பாக குஜராத் சேர்ந்த முதலாளிகளுக்கு அனைத்தும் செய்து வருகிறது.  சமீபத்தில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதுமட்டுமல்ல பெருமுதலாளிகளிடம் இருந்து வாராக் கடனாக அறிவித்துள்ள 15 லட்சம் கோடிகளை இனி வருங்காலத்தில் இந்த முதலாளித்துவ தள்ளுபடி செய்யும்.

கூர்மையடைந்து வரும்  முரண்பாடு

ஒருபுறம், லட்சக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களும், செவிலியர்களும், மருத்துவ வல்லுநர்களும் நேரடியாக சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம், கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து உணவு உறைவிடமின்றி   நிர்கதியாய் நிற்கின்றனர்.  மற்றொருபுறம், கோடிக்கணக்கான தினக்கூலிகளும் அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் வேலை யிழந்து வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார்கள்.

ஆக ஒட்டுமொத்தமாக அமைப்புசாரத் தொழிலாளர்கள் அனைவரும் ஒட்ட சுரண்டப்படுவதோடு, ஒட்டுமொத்த அரசு எந்திரத்தாலும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரானா தொற்றுநோய் நெருக்கடி இந்திய அரசுக்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை மேலும் கூர்மையடைய வைத்துள்ளது.

முதலாளித்துவ அதிகாரத்தை எதிர்த்து அமைப்பாய் திரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பான வேலை நிலைமை, அமைதியான வாழ்க்கை நிலைமை, போதுமான சம்பளம், பொது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிபடுத்தி, சாதியற்ற பாலின பேதமற்ற சமூகத்தை படைக்க முடியும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *