கைதாகப் போகும் ஆனந்த் டெல்டும்டேக்கு ஒரு கடிதம் – விஜய் பிரசாத் மற்றும் சுதன்வா தேஷ்பாண்டே… தமிழில் ச.சுப்பாராவ்

கைதாகப் போகும் ஆனந்த் டெல்டும்டேக்கு ஒரு கடிதம் – விஜய் பிரசாத் மற்றும் சுதன்வா தேஷ்பாண்டே… தமிழில் ச.சுப்பாராவ்

இந்த அரசாங்கத்திற்கு எதிரான கருத்து மாறுபாட்டு அலையின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பதால் நீங்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறீர்கள்.

அன்புள்ள ஆனந்த், 

திங்களன்று உங்கள் வீட்டுக் கதவு தட்டப்படலாம். உங்களைக் கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் வரக்கூடும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை மேற்கோள் காட்டும் ஏராளமான குறிப்புகள் நிரம்பி வழியும் காகிதங்கள் கொண்ட கோப்பை அவர்கள் எடுத்து வருவார்கள். புனே அருகில் உள்ள பீமா கோரேகான் என்ற கிராமம் பற்றிய ஏராளமான குறிப்புகள் அதில் இருக்கும். அந்தக் காகிதங்கள் உங்கள் மீதும், பிறர் மீதும் கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறும்.

அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. நீங்கள் 2018 ஜனவரி 1ம் நாள் பீமா கோரேகானில் வன்முறையைத் தூண்டினீர்கள். ஜனநாயகத்தைத் தகர்க்கும் ஒரு மாவோயிஸ்ட் சதியில் நீங்கள் ஒரு அங்கம். ”பாசிஸ எதிர்ப்பு அமைப்பை” உருவாக்கி அரசாங்கத்தை தூக்கி எறிய முயற்சி செய்தீர்கள். நீங்கள் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய முயற்சி செய்தீர்கள். நீங்கள் தடைசெய்யப்பட்ட இந்தியக் கம்யூனிஸட் கட்சியின் (மாவோயிஸ்ட்) முன்னணி செயல்பாட்டாளர்.

நீங்கள் கண்ணியமானவர் என்பதால் போலீசாருக்கு டீ தருவீர்கள். இப்படியொரு நாகரீகமான கண்ணியமான மனிதரை எவ்வாறு இத்தனை பயங்கரமானவர் என்று அரசாங்கம் நினைக்கிறது என்று அவர்கள் வியப்பார்கள்.

கருத்து மாறுபாட்டு அலை

கௌதம் நாவ்லக்கா, சுரேந்திர காட்லிங், ஷோமா சென், மகேஷ் ராட், சுதீர் தாவ்ளே, ரோனா வில்சன், சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா, வெர்னான் கோன்சால்வ்ஸ், வரவரராவ் ஆகியோர் போல் அந்த அரசாங்கத்திற்கு எதிரான கருத்து மாறுபாட்டு அலையின் ஒரு பகுதி என்பதால் நீங்கள் சிறைக்கு அனுப்பப்படப் போகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

BREAKING : 'Dissent Is The Safety Valve Of Democracy': SC Says ...

அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளான இந்திய முற்போக்காளர்கள்

அரசாங்கம் நினைப்பது சரிதான். இந்திய ஜனநாயகம் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களாலோ, கௌதமாலோ, சுதாவாலோ, அல்லது வரவரராவாலோ அல்ல. அது அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள அதிதீவிர வலதுசாரிகளால் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. பட்டப்பகலில் கும்பலாகத் தாக்கிக் கொல்வதிலிருந்து நாம் இன்னும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தின் கொடூரங்கள் தண்டிக்கப்படாமல் செல்வதாகவே உள்ளன.

அம்பேத்கரின் India and Communism என்ற நூலுக்கு நீங்கள் தந்த அறிமுகத்தை நாங்கள் பெருமையோடு வெளியிட்டோம். அந்த நூல் இடதுசாரிகள் ஜாதியை நேரடியாகத் தாக்காவிட்டால், அவர்களால் இந்தியாவில் ஒரு இடது செயல்திட்டத்தை முன்னெடுக்க முடியாது என்று எங்களுக்குச் சொன்ன நூல். அதிதீவிர வலதும் ஜாதி பற்றி லேசாகக் குரல் தருகிறது. ஏனெனில் ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் வாக்குகள் இல்லாவிட்டால் அதனால கணிசமான வாக்குகளைப் பெற முடியாது. இந்திய மக்கள் தொகை முற்றிலும் பிராமணியமயமான, ஆதிக்க ஜாதி அரசியல் செயல்முறைகளை எதிர்ப்பதாகவே உள்ளது.

ஜாதிப் படிநிலைக்கு எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டே, அதிதீவிர வலதுசாரிகள் நமது கலாச்சார, பண்பாடுகளின் மிக பிற்போக்குத் தனமான பகுதிகளில் மிக வசதியாக இயங்குகிறார்கள். அவர்கள் ஜாதிப் படிநிலைக்கு காப்பளிக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோரின் தாழ்நிலையை உறுதிப்படுத்துவதைத் தொடர்கிறார்கள்.

எனவே, 2018ல் பல்வேறு தலித் அமைப்புகள் கோரேகான் போரின் 200 வது ஆண்டுதினத்தை அனுசரிக்க முடிவு செய்ததில் வியப்பேதுமில்லை. இது 1818ல் மராத்தா அரசின் பேஷ்வா ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுத்திய போராகும். 1927ல் அம்பேத்கர் “இது ஒரு முக்கியமான நிகழ்வாகும், ஏனெனில் இது பிராமணிய பேஷ்வாக்களுக்கு எதிராக கம்பெனியின் போர்வீர்ர்களாக மஹர்களை நிறுத்தியது” என்று குறிப்பிட்டார். இதனால்தான் பல நூற்றாண்டு கால ஒடுக்குமுறைக்குப் பிறகு மஹர்களின் சக்தியைக் காட்டிய அந்த நாளைக் கொண்டாடும் வகையில் இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தலித்துகள் புனிதப்பயணமாக வருகிறார்கள். அம்பேத்கருக்குப் பிறகு தலித்துகள் தங்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரத்திற்காகக் காத்திருக்கக் கூடாது, அவர்களே சுதந்திரத்தைப் பறித்துக் கொள்ள வேண்டும் என்ற வாதம் மேலோங்கியது.

Fresh Layers Of Biting Memory | Outlook India Magazine

பீமா கொரோகான் போர் நினைவு சின்னம்

2018ல் அந்த வருடாந்திர நிகழ்வின்போது, சில தீயவர்கள் அந்தக் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் மீது கற்களை வீசினாகள். ராகுல் படங்களே (28) கொல்லப்பட்டார். இந்தக் கொண்டாட்டத்தின் போது தலித்துகளுக்கதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கங்கள் நடந்தன. இந்த இயக்கங்களில் மற்றொருவர் கொல்லப்பட்டார். பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தார்கள். 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள்.

முற்றிலும் தொன்மக்கதை

ஆனால், ஆனந்த், 1927ல் அம்பேத்கர் இங்கு வந்ததற்குப் பிறகு உருவான பாரம்பரியத்திலிருந்து நீங்கள் மாறுபட்டீர்கள். கோரேகான் சம்பவத்திற்கு மறுநாள், 1818 போரை மக்கள் எவ்வாறு ஒரு தொன்மக்கதையாகப் பார்க்கிறார்கள் என்று ஒரு கட்டுரை எழுதினீர்கள். அரசாங்கத்தின் கையில் நீங்கள் படும் சித்ரவதையை உற்று கவனிப்பவர்கள், அந்தப் போரைக் கொண்டாடுபவர்களுக்கும், உங்களுக்கும் உள்ள இடைவெளி பற்றி குழப்பம் அடைவார்கள்.

நீங்கள் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படும் அந்த சம்பவத்திற்கு மறுநாள் அந்தப் போர் நினைவு கொள்ளப்படும் விதம் பற்றி நீங்கள் எச்சரிக்கை செய்யும் விதமாக எழுதினீர்கள். பிரிட்டிஷார், பேஷ்வாவிற்கு எதிராகப் போரிட, ஏராளமான தலித்துகளை, குறிப்பாக மஹர்களை பணியமர்த்தியது உண்மைதான் என்று எழுதினீர்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவுத்தில் சேர்ந்த மஹர்கள் ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காகச் சேரவில்லை, அவர்கள் பேஷ்வாக்கள், முகலாயர்கள் ராணுவத்திலும் கூடத்தான் சேர்ந்தார்கள் என்று எழுதினீர்கள்.

அம்பேத்கர் மஹர் ராணுவ வீர்ர் பற்றிய ”தொன்மத்தை” உருவாக்கியது. பிரிட்ஷார் மீண்டும் தலித்துகளை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கத் தூண்டுவதற்காகத் தான் என்று எழுதினீர்கள். இந்தப் போரைக் கொண்டாடும் தலித் அமைப்புகள் இந்துத்வா சக்திகளை புதிய பேஷவாவாகவும், தலித்துகளை அவர்களை எதிர்த்துப் போரிடும் வீர்ர்களாகவும் சித்தரித்தன. “தலித்துகள் இந்த இந்துத்வா கொள்ளையர்களால் உருவாக்கப்பட்ட புதிய பேஷ்வாக்களை எதிர்த்துப் போராடுவது அவசியம்தான். அதற்கு அவர்கள் தம் பழம் தொன்மங்களை நெருப்புக்கோழி போல் பார்த்து, தமது பெருமைகளைக் கற்பனை செய்து கொள்ளாது, யதார்த்தத்தைக் காண தமது கண்களைத் திறந்து வைத்துக் கொள்வது நல்லது”, என்று எழுதினீர்கள்..

இந்தக் கொண்டாட்டத்தை இப்படி விமர்சித்தவரும். அதில் எந்தப் பங்கும் இல்லாதவருமான உங்கள் மீது எப்படி தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்? எந்த ஆதாரமும் இல்லாது குற்றம் சுமத்துகிறார்கள்?

A letter to Anand Teltumbde, on his way to jail

பீமா கோரேகான் கொண்டாட்டத்தில் அம்பேத்கர்

இதில் எதிலும் வியப்பில்லை. கௌதம், சுதா போன்ற மற்றவர்களுக்கும் பீமா கோரேகானின் கூட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொழில்ரீதியாகவும் உங்களுக்குள் பொதுவானதாக எதுவும் இல்லை. உங்களில் ஒருவர் கவிஞர். மற்றொருவர் வழக்கறிஞர். மற்றொருவர் பத்திரிகையாளர். மற்றொருவர் ஒரு கல்வியாளர். எங்கள் அன்பான ஆனந்த், நீங்களோ ஒரு நிர்வாகவியல் நிபுணர். உங்களை ஒன்றிணைத்தது பீமா கோரேகானோ அல்லது உங்கள் தொழில் சார்ந்த பின்னணியோ அல்ல. உங்களை ஒன்றிணைத்தது உங்கள் கொள்கைகள். சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்கள். இந்திய அரசியலமைப்பில் வேரோடியுள்ள லட்சியங்கள்.

ஆனால், உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு நாடு பற்றிய பார்வை. நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு கொள்கையறிக்கை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது போல, இந்தியக் குடியரசில் ஒரு மனிதர் ஒரு வாக்கிற்கு (vote) சமம். ஆனால் ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு சமமானவரல்ல. அதை அவர் சமூக, (ஜாதி, பாலினம்) மற்றும் பொருளாதார (வர்க்கம்) பார்வைகளில் தான் அவ்வாறு குறிப்பிட்டார். போராட்டம் இன்றி எந்த சுதந்திரப் போராட்டம் பற்றிய வாக்குறுதியும் நிறைவேறாது.
சமீப ஆண்டுகளில் பல சமூக உரிமைகளும் குறைக்கப்பட்ட நிலையில், உங்ளைப் போன்ற, மகேஷ், ரோனா, அருண் போன்றவர்கள் பகுத்தறிவை, சமத்துவத்தை அரசியலமைப்பு நூலின் பக்கங்களிலிருந்து யதார்த்தத்திற்குக் கொண்டுவரக் குரல் கொடுக்க வேண்டியது மேலும் அதிக முக்கியமானதாகிறது.

கற்பி, போராடு, ஒன்று திரட்டு

உங்களைக் கைது செய்ய வரும் பொலீஸ் அதிகாரிகள் உங்கள் வீடு புத்தகங்களால் நிரம்பி இருப்பதைப் பார்ப்பார்கள். பாபாசாகேப் அவர்களின் படைப்புகள் அனைத்தும் முக்கியமாக அடுக்கி வைக்ப்பட்டிருப்பதையும், உலகின் மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் படைப்புகள் இருப்பதைப் பார்ப்பார்கள். அதிகாரிகளில் ஒருவர் அம்பேத்கர் படைப்புகளைப் புரட்டிப் பார்ப்பார். அவர் கண்களில் 1942 நாக்பூரில் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் பேசிய கீழ்கண்ட வார்த்தைகள் படவும் கூடும்.

“உங்களுக்கு எனது இறுதியான அறிவுரை இதுதான் கற்பி, போராடு, ஒன்று திரட்டு. உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நம் பக்கம் நியாயம் இருக்கும் போது, நாம் எவ்வாறு தோற்றுப் போக முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் போராட்டம் என்னைப் பொருத்தவரையில் மிக மகிழ்ச்சியான விஷயம். .இந்தப் போராட்டம் ஆன்மீகமானது. அதில் லோகாயதமாகவோ, சமூகரீதியாகவோ ஒன்றுமில்லை. ஏனெனில், நமது போர் செல்வத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ நடத்தப்படும் போர் அல்ல. அது சுதந்திரத்திற்கான போர். மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கான போர்,” என்ற வரிகளை அவர் படிக்கக் கூடும்.
அந்த அதிகாரி திரும்பி உங்களைப் பார்த்து, மனசாட்சியின் தகிப்பை உணரட்டும். உண்மையில் இந்த உலகளாவிய கோவிட்-19 பிரச்சனைகளுக்கு நடுவே நீங்கள் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்படுவதை இந்தியா பார்க்கட்டும். நமது ஒட்டுமொத்த உடலிற்குள் மனசாட்சி சுடுவதை உணரட்டும்.

Verso

விஜய் பிரசாத் மற்றும் சுதன்வா தேஷ்பாண்டே…                                                                                                  தமிழில் ச.சுப்பாராவ்                         

– நன்றி scroll.in

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *