இந்திய சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை மார்க்சிய சரித்திர இயல்தத்துவமான வரலாற்றுரீதியான பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடன் ஆராய்வது என்ற முன்னுரையிடன் துவக்கிறது…
இயற்கை உலகில் நிகழ்கின்ற மாறுதல்களையும், அவைகளைப்பற்றிய விதிகளின் செயல்பாடுகளையும் கற்கப்பயன்படுத்துகிற, அதே விஞ்ஞான முறைகளை, சில முக்கியமான மாறுதல்களோடு, சமூகத்தில் ஏற்படுகிற மாறுதல்களைக் கற்கவும் பயன்படுத்தலாம். அதன் பயனாக சமூக மாற்றங்களுக்கு அடிப்படையான விதிகளையும் கண்டுபிடிக்க முடியும். இதுதான் சமூக விஞ்ஞானங்கள் என்ற அடிப்படையில் மனித உயிரினங்களின் தோற்றம் காட்டுமிராண்டி காலம் , அநாகரீக காலம் அதைத்தொடர்ந்து நாகரீக காலம் வளர்ந்ததை நிரூபித்துக் காட்டுகிறார்…
வேத நாகரீகமும் அண்ணிய நாகரிகம் தான் , அதற்கு முன்னரே இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது என்பதை ஹரப்பா, மொகஞ்சதாரோ தொல் பொருள்களின் மூலம் அறிவியல் பூர்வமாக வாதாடுகிறார்.
அந்நியர்களான ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து சில இடங்களில் போர் புரிந்தும், சில இடங்களில் இணைந்தும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர்.. பின்னர் மௌரிய சம்ராஜ்யம் காலத்தில் இயற்றப்பட்ட ‘அர்த்தசாஸ்திரம்’ சமூக, பொருளாதார விஷயங்களில் ஏற்படுத்திய தாக்கம் அதாவது சுயராஜ்ய கிராம முறை, நான்கு வர்ண முறை சமூகத்தின் அமல்படுத்த பெரிதும் உதவியதும் என்றும், பின்னர் மனுஸ்மிருதி சாதிய ஏற்றத்தாழ்வுகளை இன்னும் வலுவாக கெட்டிப்படுத்தியதையும் விரிவாக கூறுகிறார்.
பின்னர் வந்த முகலாய சாம்ராஜ்யமும் நீண்டநாள் நிலைத்திருக்கவில்லை. இவர்கள் காலத்திலேயே சிற்றரசர்கள் மூலம் இந்தியாவில் நிலப்பிரபுத்துவம் வளரத் துவங்கியிருந்ததை சுட்டி காட்டுகிறார். பேரரசுகள் நீண்ட நாள் நிலைத்து இருக்கவில்லை. இந்தியாவில் நிலவி வந்த ‘உற்பத்தி முறை’ தான் அதற்கு காரணம் என கூறுகிறார்..
‘வியாபாரம்’ ( உலக சந்தையை இந்தியாவில் விரிவுபடுத்த வந்த உலக முதலாளிகளின் ஏஜன்ட்கள்) என்று இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர் ஆட்சி பிடித்த கதையை விவரிக்கிறார்..
அப்போது எழுந்த தேசிய இயக்கம் பெரும் பகுதி பூர்ஷ்வா எண்ணம் கொண்ட அறிவாளிகளின் கீழ் இருந்தது என்பதை தெளிவுபடுத்துகிறார். உள்நாட்டு முதலாளிகள் நிலப்பிரபுத்துவம்மற்றும் அன்னிய ஏகபோக களுடனும் சமரசம் செய்துகொண்டண்டு சுதந்திரம் பெற்றனர் என்றும் இந்த காலத்தில் ஏற்பட்ட வெகுஜன போராட்டம் அதற்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் பங்களிப்பு குறித்தும் சுருக்கமாக பதிவு செய்கிறார்.
அன்று நிலப்பிரபுக்கள், உள்நாட்டு முதலாளிகள், அன்னிய ஏகபோகம் ஆகியவற்றை ஒருசேர எதிர்க்கும் பலத்தை தொழிலாளர் இயக்கம் பெற்று இருக்கவில்லை என்பதையும், இந்தியாவில் நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவமும் இணைந்த அயோக்கியத்தை அழுத்தமாக பதிவு செய்கிறார். சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் தோன்றிய அரசாங்கம் சமஸ்தானங்கள், ஆதிக்க நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்து கொண்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கான அரசாங்கமாக எவ்வாறு விளங்கியது என சொல்லி முடிக்கிறார்…
இந்தியாவின் வரலாற்றை சமூக, அரசியல், பொருளாதார, தத்துவ தலங்களில் மதிப்பீட்டு இருக்கக்கூடிய இந்த நூல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான நூல்.
தமிழில் பிஆர் பரமேஸ்வரன்
முதல் பதிப்பு 1975
செல்வராஜ்
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்
இந்திய ஜனநாய வாலிபர் சங்கம்