Subscribe

Thamizhbooks ad

ஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)

 

நாவல் கொரானோ வைரஸ் என்பது நமது தேர்வு முறைகளை சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான சக்தியை உருவக்குவதற்கான ஒரு சரியான தருணம்
கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பீடித்திருப்பதற்கு மத்தியில் பொதுத்தேர்வு என்பது கற்பனை செய்துகூட பார்க்க இயலாத கடினமான ஒன்றாகும். இதைத்தான் தமிம்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை நடத்த உள்ளது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்ற வழக்கமான உத்தரவாதத்தினைத் தாங்கியதாக இந்த அறிவிப்பு. உள்ளது. உண்மையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ ரீதியான தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தேர்வு எழுதும் மாணவர்களை தனிமனித இடைவெளியுடன் தூரம் தூரமாக அமரவைத்தல். ஒவ்வொரு அறையிலும் 10 மாணவர்களுக்கு மேல் அமரவைக்கப்பட மாட்டார்கள். இ்வ்வாறு அமரவைப்பது நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3000 லிருந்து 12 690 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

ஒரு சடங்கு

Coronavirus: BMC issues advisory; parents urge Mumbai schools to ...

மேலே உள்ள பத்தியில் சொல்லப்பட்டுள்ளது எதுவும் நாம் 15 வயது குழந்தையைப் பற்றி நாம் குறிப்பிடுகிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்தாது.. பொதுத்தேர்வு என்ற உரையாடலில் குழந்தைகள் தேர்வர்கள் ஆகின்றனர்,அவர்களது பெயர்கள் தேர்வெண்கள் மூலம் மாற்றப்படுகிறது. மேலும் பள்ளிகளானது தேர்வு மையமாகிறது. ஆசிரியரகள் கண்காணிப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் தேர்வில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டுமென்பது தெரிகிறது. எல்லா தேர்வுகளுமே நூற்றாண்டு கால பழமையான கறாரான சடங்குகள் மாறாதிருப்பதை பின்பற்றுகின்றன. கல்வியுடனோ அல்லது கற்றலுடனோ வாரியத் தேர்வுகளானது மிகவும் சிறிய அளவிலான தொடர்பே உடையது. குழந்தைகளை இது மேற்கொள்ள உற்சாகப்படுத்தும் அனைத்து விழுமியங்களும் எதிர்மறையானது.. தோற்றுவிடுவோமோ என்ற பயம்,மகிழ்ச்சியை தியாகம் செய்தல் மற்றும் ஒரு தெளிவில்லாத முறைமைக்கு அடிபணிதல் போன்றவை இதில் முக்கியமானவை.ஆகும்.

தமிழக அரசின் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் இந்த அவசர முடிவானது ஒரு பொதுப்புத்தியின் வெளிபாடாக புரிந்த்கொள்ள இயல்கிறதே தவிர காரண காரியத்துடன் இருப்பதாகத் தெரியவில்லை கல்விஆண்டிற்கான கால அட்டவணையை நிறைவை செய்வதாகவே இறுதித் தேர்வுகள் பார்க்கபடுகிறது. இறுதித்தேர்வுகள் பின்பற்றும் கேள்வி முறைமைகளின் தொகுப்பு அறிவார்த்தமான கூறுகளை உடையதாக இருப்பதில்லை. அவை வறட்டு மனப்பாடத்தையே வேண்டுகிறது. இத்தேர்வுகளின் உண்மையான நோக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது யாரெல்லாம் கல்வியினைத் தொடரலாம் என்று தெரிவு செய்து ஏனையோரை தள்ளிவைப்பதே ஆகும். இந்த நோக்கமானது மாணவர்களை அவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரம் பிரித்து தேர்ச்சி அல்லது தோல்வி என நிறைவேற்றப்படுகிறது. .

பரிசீலனை செய்வதற்கான ஒரு மையப்பாதை

Coronavirus scare: Primary schools in Delhi to remain close till ...

இந்த பொதுவான வாதமும் தமிழ்நாடு மாநிலத்தைப் பொறுத்தவரை பொருந்தக்கூடியதாக இல்லை.கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளில் 95% மாணவர்கள் தேர்ச்சி என்பதையேயாகும். பல மாவட்டங்களில் இந்த சதவிகிதம் 99 யை நெருங்கியுள்ளது. எனவே மற்ற மாநிலங்களைப் போல குறிப்பாக வட இந்திய மாநிலங்களைப்போல தேர்வுக்கான அடிப்படையான நோக்கத்தினை நிறைவு செய்வதாக அதாவது அங்குள்ள குறைவான எண்ணிக்கையிலான 12 ஆம் வகுப்பு பயிலும் வாய்ப்பினை ஈடுசெய்யும் வண்ணம் 11 ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையினைக் குறைப்பது அதன் மூலம் இருக்கும் 11 ஆம் வகுப்பு இடங்கள் போதுமான இருக்கும் என்ற தேவையும் தமிழ்நாட்டிற்கு இல்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே 11 ஆம் வகுப்பு பயில்கின்றனர். இது போன்ற வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே தேசிய கலைத்திட்ட அறிக்கை 2005ல் பத்தாம் வகுப்பு தேர்வினை விருப்பம் உள்ளோர் மட்டும் எழுதிக்கொள்ளலாம் என்ற பரிந்துரையினை அளித்தோம்.. இந்த மையமான பாதையினை தமிழக அரசு பரிசீலிக்கலாம். பள்ளியானது திறக்கப்பட்டவுடன் வாரியத் தேர்வினை எழுதவிரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். மற்றோர் அடுத்த வகுப்பில் கல்வியினைத் தொடரலாம்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து பதின்பருவத்தினர்க்கான தேர்வுகளும் அவர்களது மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்கள் அடுத்த பயில வாய்ப்புள்ள பாடப்பிரிவுகளுக்கு பிரிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இப்படிப்பட்ட நோக்கமே இளையோர் மத்தியில் வைரஸைப் பரப்பும் அபாயத்தை எதிர்நோக்குவதற்கான காரணமாகிறது.

பத்தாம் வகுப்புத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பதை மதிப்பீடு செய்வதற்கான காராணகாரியமாக வைப்பது ஒரு வகையான நம்பிக்கைதான். இப்படிப்பட்ட வாதத்தினை உறுதியாக[ பரிசீலிக்க தேர்வு நடத்தும் முறையில் இதற்கான பொருள் பொதிந்திருந்தால் பரவாயில்லை. கேள்வித்தாளானது ஒரே மாதிரியானதாகவும் பொருள் பொதிந்தவையாகவும் இல்லாத நிலையில் ஒரு சில கேள்விகள் மட்டும் இயந்திரத்தனமாகவும் அமைந்திருக்கின்றன. இது தேர்வினை எதிர்கொள்ள எந்த அளவுக்கு தயாராக இருந்திருக்கிறார்கள் என்பதை நல்ல மதிப்பெண்ணோ அல்லது குறைவான மதிப்பெண்ணோ காட்டுகிறது.. இது போன்றவற்றைத்தான் தேர்வுகள் மதிப்பீடு செய்கின்றன. கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இப்படி இருந்தது. உலக சமாதானமானது ஏன் அவசியமான ஒன்றாக உள்ளது? இதற்கும் ஒரு குறிப்பிட்ட விடையானது உள்ளது. ஆசிரியரின் பணி என்பது அந்த குறிப்பிட்ட விடையை குழந்தை சொல்லியிருக்கிறதா ? என்பதுதான்.அக்குழந்தை இதனைவிடுத்து கேள்வியானது சரியாக வடிவமைக்கப்படவில்லை என்றோ உண்மையில் பொருளற்றதாக உள்ளது என்றோ சொல்ல இயலாது

புதுப்பிப்பின் பொருள்

Almost 300 million kids missing school because of the coronavirus ...

கேட்கப்படும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் விடையளிக்க ஒவ்வொரு குழந்தைகளும் தயாராவதை உறுதி செய்யும் பணியாகவே ஆசிரியர்களின் பணி அமைகிறது. ஜூன் மாதம் நடக்க உள்ள குழந்தைகளை தேர்வுக்குத் புதுப்பிப்பு செய்ய (தயார் செய்ய) கொடுக்கப்பட்டுள்ள கால அளவானது குறைவாகவே உள்ளது என்று சொல்லும் ஆசிரியர்கள் சரியாகவே குற்றம் சாட்டுகின்றனர். புதுப்பிப்பு என்று அவர்கள் சொல்ல வருவது மாணவர்கள் மனப்பாடம் செய்திருக்கும் விஷயங்களை எழுதவைக்கும் நிலைக்கு தயார்படுத்துவது என்பதே ஆகும். . ஆசிரியர்கள் அந்த மனப்பாடச் சாவியை நன்கு திருகிவிட்ட பிறகே மாணவர்களின் வகுப்புகளானது நிறுத்தப்படவேண்டும். மூன்று மாதங்களான பிறகு சாவியானது அதன் இறுக்கத்தை இழந்த பிறகு அந்த பொம்மையானது குறிப்பிட்ட தேதிக்கும் நேரத்திற்கும் முடிவு செய்ததை செய்யச் சொன்னால் எப்படி. எனவேதான் ஆசிரியர்கள் கொஞ்சம் காலம் கேட்கிறார்கள். அவர்களது தொழில்சார் அறத்தினையும் அறிவுத்தள பாத்திரத்தினையும் பெரிய அளவுக்கு சமரசம் செய்து கொண்டு பணீயாற்றும் அவர்களது கோரிக்கைகள் நியாயமானதே. அவர்களுக்கு மட்டும் கற்பிப்பதிலும் மதிப்பீடு செய்வதிலும் உண்மையான சுதந்திரத்தினை அவர்கள் அனுபவித்திருந்தால் அவர்கள் குழந்தைகளை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பிரிப்பதற்கு தேர்வு மதிப்பெண்கள் உதவாது என்று அரசிடம் சொல்லியிருப்பர்.

நீங்கள் தமிழக அரசு தேர்வுகள் துறை இணையதளத்தைப் பார்த்து கடந்த ஆண்டின் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கவனீப்பீர்கள். அதிக பட்ச தேர்ச்சி சதவிகிதமான 98.3% ஆக திருப்பூர் மாவட்டமும் அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம் 98.48% நாமக்கல் மாவட்டம் 98.45% ஆக உள்ளது. இந்த வாக்கியத்தை நான் வாசித்தபோது இதற்கான முக்கியத்துவமோ பொருளோ எங்கே இருக்கிறது என்று யோசித்தேன். இந்த மூன்று மாவட்டங்களின் தேர்ச்சி சதவிகிதமானது ஒரே சீரானது. இந்த மூன்று மாவட்டங்களில் தேர்ச்சி சதவிகிதம் அவ்வளவு அதிகமானது எனவே இந்த சிறிய வேறுபாடானது வழக்கமாக தேர்வு முடிவுகள் சொல்லும். அல்லது பிரதிபலிக்கும் விஷயங்களைப் பிரதிபலிக்கப் போவதில்லை. யாரும் இந்த .03% தேர்ச்சி சதவிகித பாதிப்பினால் நாமக்கல் ஆசிரியர்களும் மாணவர்களும் இராமநாதபுரம் ஆசிரியர்கள் மாணவர்கள் போல் திறமைசாலி இல்லை என்று சாமதானப்படுத்தும்படியாக வாதாடப்போவதில்லை. உண்மை என்னவென்றால் மூன்று மாவட்டங்களுமே சிறப்பாக செய்துள்ளன. எனவே தேர்வு வாரியங்களானது இந்த சிறிய அளவிலான தேர்ச்சி சதவிகித வேறுபாட்டினை வைத்து நம்மை எதைப் உற்றுநோக்கச் சொல்கிறது. மேலும் இது போலவே சிறிய அளவிலான தேர்ச்சி சதவிகித வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு மாணவியர்களே சிறப்பாக வெற்றிபெற்றுள்ளனர் எனற குறிப்பிடப்டுவதையும் நாம் சொல்லவேண்டும்.

நெருக்கடிகளும் மாற்றங்களும்

Facing Continued Harassment, 40 Girl From This Haryana Village ...

சில பேரழிவுகள் நமக்கு சிலவற்றைக் கற்பிக்கிறது. இவ்வாறான நெருக்கடி நிலையில் பயணிக்கும் அனுபவமானது சிலவற்றை சீர்திருத்தும் விருப்பத்தினை உண்டாக்கும். ஆனால் இந்த நாவல் கொரோனா வைரசானது தேர்வு முறை சீர்திருத்தத்திற்கான சக்தியினைக் கொடுக்கும் என்று கற்பனை செய்வது கடின மானதே. தேர்வுத் துறை போன்று நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்று அவ்வளவு எளிதில் முன்னேற்றங்களுக்கான அழுத்தங்களுக்கு வளைந்துகொடுக்காது. எண்ணற்ற குழுக்களும் தனிநபர்களும் வைத்துவரும் எணணிலடங்கா விமரிசனங்களை தேர்வு முறைமை தாக்குபிடித்துவருகிறது. இந்நிலையில் ஒரு சிறிய முன்னேற்றத்திற்கே பலரது தொடர்ச்சியான முயற்சிகள் பல வருடங்கள் தேவைப்படும் இதனிடையே ஆட்சிகளும் மாறும் அதில் பொறுப்பேற்றிருப்போரும் மாற்றமடைவர் அல்லது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவர். நாம் இழிவாகக் கருதப்படாதிருக்க விரும்பினால் பத்தாம் வகுப்பு வாரியத்தேர்வு முடிந்த பின்னர் குழந்தைகள் பெறும் சான்றிதழின் பெயருக்கு அதாவது ”பள்ளியை விட்டு விலகும் சான்றிதழ்” .என்பதற்கு சரியான மாற்றை யோசிக்கலாம்.

ஓரு காலத்தில் மெட்ரிக்குலேஷன் தேர்வுகளானது மிகவும் கடினமானதாக இருந்தது. மிகவும் சொற்ப அளவிலான எண்ணிக்கையுடையோரே உயர்கல்விக்கு சென்றனர். இப்போது அளவுக்கதிகமான குழந்தைகள் பத்தாம் வகுப்போடு பள்ளிகளை விட்டுவிலகுவதில்லை.இந்த பள்ளியை விட்டு விலகும் சான்றிதழ் என்ற வழக்கானது .தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு முரண்பாடாக இந்த மாநிலங்களிலேயே பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு செல்வோரும் அதிகமாக உள்ளனர். இந்த கொடும் வைரசானது இந்த வழக்கொழிந்த தலைப்பை விட்டுவிடத் தூண்டுதல் அளிக்கும் என நம்புவோம்.. ஆசிரியர்களை நம்பி பள்ளி அளவிலான மதிப்பீட்டு முறைகள் வளர்வதை ஊட்டப்படுத்துவது அடுத்த கட்டமாகட்டும்.

நன்றி: தி இந்து இணையதளம் 

https://www.thehindu.com/opinion/lead/a-moment-to-trust-the-teacher/article31689913.ece

Latest

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது வீடு என்பது எப்போதும் நிரந்தர குடியிருப்பும்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு          (3) தாளமிசைக்கும்  கால்கள் தலையசைக்கும் பயிர் களை பறிப்பவள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here