விலங்கு கைகளில்…
தரையில் மடங்கிய முகம்…
முழங்கால் அழுத்திய கழுத்து…
ஏதும் செய்யவில்லை அவர்கள்…
அழைத்தது அவன் குரல் அதிகாரிகளை “அய்யா…அய்யா”
இரங்கவில்லை அவர்கள் …
உயிருக்காக கெஞ்சினான்…
தாகத்திற்காக மன்றாடினான்…
கருணைக்காக கதறினான்…
அசையவில்லை அவர்கள் …
மூக்கில் கசிந்த ரத்தம்…
உதறல் எடுத்த உடல்…
கட்டுப்பாடு இழந்த சிறு நீர்ப்பை…
நின்றார்கள் கல்லாய் அவர்கள்…
அவனின் அலறல்
“என் மூச்சு திணறுகிறது”
கேட்கவில்லை அவர்கள் செவிகள் …
பன்னிரண்டு முறை தொண்டைக் குழியில் இருந்து…
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
“எனக்கு மூச்சு திணறுகிறது”
கருணை காட்டவில்லை அவர்கள்…
கடைசி முறையாய் முனகினான்…
“எனக்கு மூச்ச்…சு…”
கொஞ்சமும் கசியாத அவர்கள்…
உணர்விழந்தான் அவன்…
அப்படியே நின்றார்கள் அவர்கள்
அவசர உதவி ஊழியர் கோரினார் அவனின் நாடித் துடிப்பை சோதிக்க..
மறுமொழி ஏதுமின்றி அவர்கள்…
மருத்துவ பணியாளர்கள் நிறுத்துங்கள் போதும் என்றார்கள்…
ஆனாலும் சற்றும் நகரவில்லை…
கிடைக்கவில்லை உயிர் வாயு…
செயலிழக்க துவங்கின உறுப்புகள்…
மூளை நரம்புகள் அழுத்தத்தின் உச்சத்தில்…
சிலையாய் இருந்தனர்
அவர்கள்…
ஜார்ஜ் ஃபிளாய்ட் இறப்பு கண் முன்னே…
உதிர்கிறது உயிர் …
மெல்ல மெல்ல நிகழ்ந்த மரணம்…
சலனமே இல்லாமல் அவர்கள்…
கொடூரமான உயிர் பறிப்பு…
அவர்கள் எதுவுமே எதுவுமே செய்யாமல்…
வேதனையான எட்டு நிமிடங்கள்…
வேடிக்கை பார்த்தனர் அந்த நான்கு அதிகாரிகள்…
அம்மா என்று அலறினான்…
வளர்ந்த மனிதன்…
வாளாவிருந்தார்கள் அவர்கள்…
அழைத்து கதறினான் தனக்கு உயிர் தந்த அந்த பெண்ணை …
தனக்கு முன்பே மரணித்து விட்ட அந்த தாயை…
ஆனாலும் இரக்கம் காட்டவில்லை அவர்கள்…
கறுப்பு மனிதன்…
கம்பீர உருவம்…
இருந்தாலும் கொல்லப்பட்டான்
கறுப்பன் என்பதால்…
ஒன்றுமே செய்ய முனையவில்லை அவர்கள்…
இருக்கிறது காரணம் …
இருக்கிறது நிறம்…
அவன் ஓய்வெடுக்கட்டும் அமைதியாய்
அவன் அன்னையின் அருகில்…
நீதி மலரட்டும்…
ஏதாவது அவர்கள் செய்யட்டும்
இப்போதேனும்…
( மிச்சேல் லோரன்ஸ் கவிதையை தழுவிய தமிழாக்கம். சற்று சுதந்திரத்தோடு… மன்னிக்கவும் தவறு இருந்தால்)
க.சுவாமிநாதன்