அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள்

*******************************************

1.

கண்களை அகலத் திற—

எந்த கதவு மூடியிருக்கிறது

என்று ஒரு கை பார்த்துவிடலாம்.

*******************************************

2.

உன்னை நம்பு;

கட்டாயம் உன்னால்

என்னை நேசிக்க முடியும்!

*******************************************

3.

யாரும் இல்லாதபோது

கடவுள் தான் கிடைக்கிறார்—

சண்டை போடுவதற்கும்.

*******************************************

4.

நீ என்னை நேசித்தால் என்ன செய்வேன்?

உன்னை நேசிப்பேன்.

நீ என்னை நேசிக்காவிட்டால் என்ன செய்வேன்?

உன்னை நேசிப்பேன்.

*******************************************

5.

என் பக்கம் யாருமில்லை என்று

ஆரம்பத்தில் கவலைப்பட்டேன்.

என் பக்கம் என்பக்கம் இருக்கிறது—

அதுவே என் பக்கம்!

பிறகு என்ன கவலை?

*******************************************

6.

இல்லாதவர்கள் சொல்வார்கள்—

“மடியில் கனமில்லை,

வழியில் பயமில்லை.”

இல்லாததால் தான் சொல்வார்கள்—

“மடியில் கனமில்லை,

வழியில் பயமில்லை.”

*******************************************

7.

“இல்லை” என்று சொல்லிவிட்டு

வேறு வேலையைப் பார்க்க முடியாதபோது—

அங்கு ஏதோ இருக்க

ஆரம்பிக்கிறது.

*******************************************

எழுதியவர் : 

✍🏻 அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *