புத்தக அறிமுகம்: செயல்திறன்மிக்க புரட்சியாளர் காஸ்ட்ரோ – ப.ஸ்வாதி (இந்திய மாணவர் சங்கம்)

கியூபாவும் அதன் மருத்துவர்களும் இன்றைய மோசமான கொரோனா நோய் தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்று மருத்துவ சேவையாற்றிவருகின்றனர். இன்றுவரை மருத்துவத்திலும், கல்வியிலும், வாழ்நிலையிலும் முன்னிலையில் நிற்கிறது கியூபா. இத்தகைய வெற்றிகளுக்கு தனது தீராத முயற்சியால் தன் தாய் நாட்டிற்காக போராடி வரலாற்றில் தன் கால்களைப் பதித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இந்நூல் அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றியதாகும்.

காஸ்ட்ரோ

வரலாறு உங்களை மன்னிக்காது காஸ்ட்ரோ ...

பிடல் காஸ்ட்ரோ தனது சட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் போது, கியூபாவை “பட்டிஸ்டா”(Batista) ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் கியூபாவை ஆட்சி செய்ததோ ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவும் அதன் யுனைடெட் ஃப்ரூட்ஸ் (United fruits) கம்பெனியும் தான். பட்டிஸ்டாவின் கொடுமையான ஆட்சி காஸ்ட்ரோவை கம்யூனிசம் பற்றியும் கார்ல் மாக்ஸ், லெனின் ஆகிய கம்யூனிச தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள தூண்டியது.  பிறகு, பட்டிஸ்டாவை எதிர்த்து 1953 ஜூலை 26-ஆம் அன்று போர் தொடுத்து , பிறகு சிறையிலும் அடைக்கப்பட்டார். காஸ்ட்ரோவின் சிறை தண்டனையை எதிர்த்து கியூப மக்கள் ஒன்று திரண்டு போராடியதன் விளைவாக காஸ்ட்ரோவை,_1955 மே 15_ ஆம் தேதி பட்டிஸ்டா அரசு விடுதலை செய்தது.

விடுதலையான காஸ்ட்ரோ மெக்ஸிகோவிற்கு சென்றார்.  அங்கு பட்டிஸ்டா அரசுக்கு எதிராக போர்புரிய தேவையான பயிற்சிகளையும், ஆயுதங்களையும் தயார் செய்து கொண்டார்.  சே குவேரா இங்குதான் காஸ்ட்ரோவுடன் இணைந்தார். பாடிஸ்டா அரசை எதிர்த்து போரிட இம்முறை அவர்கள் கையாண்ட திட்டம் கொரில்லா போர் முறை. அதாவது மறைந்து இருந்து தாக்கும் முறை. _1955-_ ஆம் ஆண்டு கிரான்மா கப்பல் மூலம் கியூபாவின் தலைநகரமான ஹவானாவிற்கு காஸ்ட்ரோ தனது படை வீரர்களுடன் வந்தடைந்தார்.  ஒவ்வொரு நகரமாக காஸ்ட்ரோவின் படை கைப்பற்றத் தொடங்கியது. இதையறிந்த பட்டிஸ்டா, கியூபாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். அதுவரை முதலாளிகளின் நன்மைக்காகவே இயங்கி வந்த அரசு, பாட்டாளி வர்கத்திரணருக்கான புதிய ஆட்சி அமைத்தது.

புதியதோர் கியூபா

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் ...

கியூபாவில் இருந்த யுனைடெட் ஃப்ரூட்ஸ் கம்பெனியை அரசுடையக்கப்பட்டது. அமெரிக்க அரசு கியூபாவிடம் இருந்து சர்க்கரை இறக்குமதியை நிறுத்திக்கொண்டது. தனது நட்பு நாடுகளிடமும் கியூபாவிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியது. கியூபா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை வாங்க ஆள் இல்லாமல் மலை போல் குவியத்தொடங்கியது. இந்த இக்கட்டான சூழலில் கியூபாவிற்கு உதைவியது உலகின் மிக பெரிய கம்யூனிச நாடான சோவியத் ரஷ்யா. கியூபாவிடமிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்து கொண்டது ரஷ்யா. தனது நட்பு நாடுகளிடமும், கியூபாவில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யுமாறு கேட்டு கொண்டது. கியூபாவிற்கு கடனுதவியையும் ரஷ்யா கொடுத்துதவியது.

காஸ்ட்ரோவின் அரசு தன் நாட்டு மக்களுக்கு, இலவச படிப்பு, இலவச மருத்துவம், ஆணுக்கு இணையான சம்பளம் பெண்ணிற்கும் கொடுக்கப்பட்டது, 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், அனைவருக்கும் சமமான நிலங்கள், சொந்த வீடு என பல திட்டங்களை கொண்டு வந்தது. தனியார் பள்ளிகளோ, தனியார் மருத்துவமனைகளோ கியூபாவில் அமையக்கூடாது என்பதில் காஸ்ட்ரோ கட்டாயமாக இருந்தார்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி கியூபாவை மட்டுமல்ல அனைத்து கம்யூனிச நாடுகளையும் பெரிதும் பாதித்தது. இதனால் பொருளாதார ரீதியான சிக்கல்களை கியூபா எதர்கொண்டது. எல்லா நெருக்கடிகளையும் கடந்து தனது நிலைத்த ஆக்கப்பூர்வமான செயல்களால் கியூபாவை முன்னுக்கு கெண்டுவரும் பெரும் பணியை காஸ்ட்ரோ ஆற்றினார். _1959-1976_ வரை பிரதமராகவும், _1976-2008_ வரை கியூபா வின் ஜனாதிபதியாகவும் இருந்த பிடல் காஸ்ட்ரோ, _நவம்பர் 25 2016_ ஆம் ஆண்டு உடல் நிலைக் குறைவால் இயற்க்கை எய்தினார்.

சே வின் அஞ்சலி கூட்டத்தில் “ சே, நீ இந்த உலகத்தை விட்டு பிரிந்தாலும் இந்த நாட்டு மக்களின் மனத்தில் என்றும் நிலைத்து நிற்பாய்” என்றார் காஸ்ட்ரோ. கியூப மக்களின் மனத்தில் மட்டுமல்ல உலகத்திற்கே புரட்சியின் அடையாளமாய் நிற்கிறார் சே.அதேபோல், காஸ்ட்ரோவும் உலக உழைக்கும் மக்களின் மனத்திலும் இன்றும், என்றும் நிலைத்து நிற்பார் என்பதே நிதர்சனம்.!

 

நூலின் பெயர் – கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ

ஆசிரியர் – கணேஷ் குமார்

பக்கங்கள் -68

விலை -49₹

 

ப.ஸ்வாதி,

சென்னை பல்கலைக்கழகம்,

இந்திய மாணவர் சங்கம்