சூரியாதேவியின் கவிதைகள்
1. அரசி
தினம் தினம் நடக்கிறது
அவளது இல்லத்தினில்
திகட்டாத திருவிழா
தேர் போல செல்கிறாள்
இல்லத்தார் இழுக்கும் திசையெல்லாம்
மனம் வலிக்கும் வேளையில்
நினைக்கிறாள் இனிமையான
இளமைக் காலத்தை
இருப்பினும் எண்ணி
மகிழ்கின்றாள், நெகிழ்கின்றாள்
நிகழ்காலத்தை நேசிக்கின்றாள்
தானும் தன் தந்தை வீட்டில்
இளவரசி, எழிலரசி,
வீரத்தில் மங்கையர்க்கரசி
இப்போதும் நான் அரசி
என்னவனுக்கு இல்லத்தரசி
என் குழந்தைக்கு உள்ளத்தரசி!
சில நேரங்களில்
அரசி என்பதற்கு
அர்த்தம் பிடிபடாமல்!…..
2. மங்கையரின் மாதவம்
நான் மஙகையாய் பிறக்க
மாதவமொன்று செய்தேன் போலும்
தவத்தின் இருப்பிடமோ
தாயின் கருவறை
தவமிருந்த நாட்களோ
இருநூற்றெண்பது
என் தவத்தின் வலிமை
மாதந்தோறும் வளர்ந்தது
மலர் போல எனைஈன
தினந்தோறும் தன்னை
தியாகம் செய்து
சிறகில்லாது
எனைச் சிறையிட்டதால்
அன்னை எனும்
பெயர்சூட்டி
விடுதலை தந்தேன்
நான் அவளுக்கு …..
விடுதலையின் முழுப் பொருளைக்
காலம் அவளுக்குக் கற்றுத் தரும்!
எழுதியவர் :
சூரியாதேவி ஆ
மதுரை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.