அனு கவிதைகள்
இன்னும் மிச்சம் இருக்கு
முதல் கவியின்
பிழையான எழுத்து
பயணத்தில் மடிசாய்ந்து
மயங்கிய உறக்கம்
பிடித்த பாடலடியின்
புன்முறுவல்
கனவுவாழ்வில்
மீதமான எச்சம்
இமையின் ஓரத்தில்
சிக்கிய தூண்டில்
தோழமைக் கூட்டத்தில்
தோரணமாய் ஆடியது
அண்ணாந்து பார்த்து
ரசித்த அனைத்தும்
உடையா நிலவாய்
ஒளிர்கிறது.
எழுதியவர் :
– அனு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.