க.பாண்டிச்செல்வி கவிதைகள்
போதிமரமென்பது
இந்த இரவை எப்படிக் கடப்பது
ஏழு கடல்
ஏழு மலை தாண்டியும்
இன்னும் இவ்விரவு
நகர மறுக்கிறது
ஒற்றைச் சொல்லுக்காக.
திரு(ந்)த்தி சொல்வதற்கு
காத்திருக்கும் மனம்
இருட்டைப் போர்த்திக்கொண்டாலும்
கண்கள் மலங்க மலங்க விழிக்கின்றன.
வெளிச்சம் பாய்ச்சும் சொல்லுக்காக.
குறுஞ்செய்தியில்
வாட்சப்பில்
மெயிலில்
மெசஞ்சரில்
துழாவுகின்றன கண்கள்
இருள் அகற்றிடும் சொல்லுக்காக.
உச்சிக் கிளையில் பறவையொன்று
பேரிருட்டின் அமைதியை கலைக்கிறது
பெளர்ணமி கரு மேகத்தினூடே
தன்னை மறைத்துக் கொள்கிறது அச்சத்தில்.
ஆனாலும் அந்த சொல் மட்டும் வரமறுக்கிறது
ஒரு வேளை மெளனமென்பது
இயலாமையின் வடிவமோ?
குற்றவுணர்வின் குறியீடோ?
வஞ்சகத்தின் வெளிப்பாடோ?
எதுவாயினும் ஞானம் கொள் .
எழுதியவர் :
க.பாண்டிச்செல்வி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

