அலை(பேசி) பேச்சு கேட்கவா! – கவிதை
1.
நான் காதலோடு
இருக்கும் வரை
காதல் என்னோடு
இருந்தது.
நான் அமைதியாக
இருக்கும் வரை
அமைதி என்னோடு
இருந்தது.
நான் தெய்வத்தோடு
இருக்கும் வரை
தெய்வம் என்னோடு
இருந்தது.
2
அலை(பேசி) பேச்சு கேட்கவா!
மனம் சொல்பேச்சு
கேட்கவில்லை என
நல்பேச்சு கேட்க
நட்பெண்ணை
அலைபேசியில்
அழைக்க
‘ நானே பேச
நினைத்தேன்,
மனசே சரியில்லை!
தண்ணி, தம் அடிச்சிட்டு
தூங்கணும்னு
சொல்வாங்களே அந்த
மாதிரி இருக்குது’
என சிரித்தாள்!
‘ மனசு சரியில்லனா
நீ என்ன செய்வ,
கவித எழுதுவ தான!’
என்றாள்!
‘ கவித எழுதிப் பார்ப்பேன்
இல்லனா
கவிதைகளிடம்
பேசிப் பார்ப்பேன்’ என
‘ என்னது கவிதையிடம்
பேசுவியா’
என குரலை விரித்தாள்!
‘ மனச லேசாக்கற, மனச
லேசாக்கறவங்க எல்லாமே
கவிதை தான்!’ என,
‘ நீ பேசறது முழுசா
புரியல
ஆனா, என் மனசு
இப்ப முழுசா
லேசாயிட்டது,
ஆமாம், நீ எதற்கு
அழைத்தாய்’
என்றாள்!
‘ எனக்கும் கொஞ்சம்
மனசு கனமா
இருந்தது’ என
சொல்ல யத்தனிக்கும்
முன்
‘ நான் எப்ப சரியில்லாம
இருந்தன், நான்
எப்ப கனமா இருந்தேன்,
என இறுமாப்பாய்
கண் சிமிட்டி
வாயைப் பொத்தியது
மனசு!
எழுதியவர் :
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

