2016ல் வெளிவந்த பிரபலமான இந்தி திரைப்படம், “ பிக்கு (Piku)”. வெறும் கவர்ச்சி பதுமையாக அறியப்பட்ட தீபிகா படகோனின் நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்த சில படங்களில் Piku குறிப்பிட வேண்டியபடம். டெல்லிவாழ், நாகரீக, கட்டிட கலைஞரான தீபிகா படகோனுக்கு, விசித்திரமான, அடாவடி குணாதிசியம் கொண்ட. தந்தையாக அமித்தாப் நடித்திருப்பார். மலச்சிக்கலால் அவதிப்படும் அமித்தாப், படம் முழுக்க அதை வைத்தே நடிப்பில் ரணக்களபடுத்தி இருப்பார்.

இவர்களுக்கிடையில் தவிர்க்க முடியாமல் டெல்லியிலிருந்து, கொல்கத்தா வரையிலான பயணத்தில் கார் ஓட்டுனராக (டிராவல்ஸ் ஓனரான) இர்பான் வருவார். அமித்தாப்பின் அழிச்சாட்டியங்களுக்கு நிதானமான, அதே நேரத்தில் நக்கலுடன் கூடிய, நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்திருப்பார். மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும், நினைத்ததை சாதிக்கும் பிடிவாத கிழவரான அமித்தாப், மலசிக்கலில் அவதிபடும் பொழுது இர்பான் சொல்லும் நிவாரண உத்திகளை நம்புவதா, வேண்டாமா என்று குழம்பும் அமித்தாப்பை, தனது நய்யாண்டி நடிப்பால் அமித்தாப்பையும் தாண்டி நம்மை கவர்வார்.

Aarushi case: Deconstructing 'Talvar', a film that has reopened ...

பாலிவுட்டின் வழக்கமான கமர்ஷியல், மசாலா மற்றும் ஆக்சன் ஹீரோக்களுக்கிடையில் தனக்கென்ற தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்ட நாயகன். தொலைக்காட்சி தொடர்கள், எண்ணற்ற திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும்…”தல்வார்( Talvar), த லன்ச் பாக்ஸ் (The Lunch box) இந்தி மீடியம் (Hindi medium)”,போன்ற படங்கள் அவரின் அசாத்திய நடிப்பு திறமைக்கு சில உதாரணங்கள்.

சிறந்த வில்லன், குணச்சித்தர நடிகர் மற்றும் சிறந்த நடிகர் என பல விருதுகளுக்கு சொந்தகாரர்.
இந்தியாவை மையமாக வைத்து எடுக்க படும் ஆங்கில படமென்றால் உடனே ” கூப்பிடுய்யா அந்த இர்பானை!!”, என்னும் அளவிற்கு பிரிட்டிஷ், ஹாலிவுட் திரைத்துறையில் இந்திய முகங்களின் அடையாளமாய் கருதபட்டவர். ” The namesake”, “Slum dog millionaire”, “ Life of pie”, ஆகிய படங்கள் இதற்கு உதாரணம். அவரின் ஸ்டைலிஷான நடிப்பில் “ The amazing spider man” மற்றும் “The Jurassic world” குழந்தைகளிடம் மிக பிரபலம். அதிலும் ” The amazing spider man”ல் அலட்டிக் கொள்ளாத வில்லாதி வில்லன் இவர்தான்.

Irrfan Khan dead: Bollywood legend dies aged 53 after colon ...

கலைத்துறையில் தொடர்ந்து வெற்றிக் கண்ட இர்பானால், இரண்டு வருடங்களாக புற்றுநோயிக்கெதிரான போராட்டத்தில் வெற்றிப்பெற முடியவில்லை. 53 வயதில் அவருடைய இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது, ஈடுசெய்ய முடியாதது என்று கூறுவது வெறும் வார்த்தைக்கு( the namesake) சொல்வதல்ல…..

இர்பானை பற்றிய கூடுதல் தகவல்: மார்க்சிய எழுத்தாளரும், உருது புலவருமான மக்தூம் மொய்தீனாக ஒரு டிவி தொடரில் இர்பான் நடித்திருப்பார் அதன் வீடியோ கீழே இணைக்க பட்டுள்ளது…

#Youarethebest
#GoodbyeIrrfhan
#Wemissyou…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *