எங்கள் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில், கோடை விடுமுறை வாசிப்புக்காக, ஆதி வள்ளியப்பன் எழுதிய ஐம்பூதம் என்னும் நூலை எடுத்துக் கொண்டேன். இதை ஒரே நாளில் வாசித்து விட்டேன். இந்த நூலை வாசிக்கும் போது, அதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. இதற்குக் காரணம், பின்னட்டை குறிப்புதான். “இந்த இயற்கை வளங்களை | முக்கியத்துவத்தை உண்மையிலேயே நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோமா?” என்று கேள்வி கேட்கப்படுகிறது.
இந்த நூல் பசுமை சிந்தனை குறுநூல் வரிசையில் ஒன்று. இயற்கைக் குறித்து பேசும் கட்டுரையின் நூல். பூமி, சூரியன், தண்ணீர், காற்று, வானம் என்னும் ஐந்து இயற்கை கொடைகளைப் பற்றிக் கூறும் நூல். இந்த ஐந்து தலைப்புகளும் பிரபஞ்ச அற்புதம், ஆற்றல் அமுதசுரபி, இயற்கை தந்த மாயப்பொருள், கண்ணுக்குத் தெரியாத காவலாளி, நீலநிறமாக இருப்பது ஏன்? என்ற ஒரு உட்தலைப்புகளுடன் எழுதப்பட்டுள்ளன.
பூமியின் வயது, குடும்ப வரிசை, அளவு, சூரியனிலிருந்து பூமியின் தொலைவு, பூமியின் சுற்றளவு, சூரியனின் பெரிய கதவு ஆகிய செய்திகளை, முதல் கட்டுரையான பூமியில் அறிந்து கொண்டேன்.
திரவம், திடம், வாயு என்ற மூன்று இயற்பியல் வடிவங்களிலும் இருப்பது தண்ணீர் என்பதைத் தண்ணீர் பகுதியில் புரிந்து கொண்டேன்.
உயிர் காற்று, ஆக்சன் தரும் ஆல்கா, காற்றின் பெயர்கள் இவற்றையெல்லாம் காற்று பகுதியில் தெரிந்து கொண்டேன்.
வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? எப்போது வேறு நிறம் மாறும்? என்பதை அறிந்து கொள்ள வானம் என்ற பகுதி உதவும்.
இந்தப் புத்தகத்தில், தண்ணீரின் கொதிநிலை குறித்த புதிய செய்தியை அறிந்து கொண்டேன். கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரமுள்ள ஒரு பகுதியில் தண்ணீரின் கொதிநிலை 94.9 டிகிரி செல்சியஸ் தான் என்பது எனக்குப் புதியது.
என்னைத் தண்ணீர் பகுதி பாதித்ததால், யார் கேட்டாலும் தண்ணீர் தர வேண்டும் என்பது என் முடிவு.
முடிந்தால் இந்த சிறிய நூலை எல்லோரும் படியுங்கள்;
நூலின் தகவல்கள் :
நூல் : ஐம்பூதம்
ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : காக்கை கூடு பதிப்பகம்
முதல் பதிப்பு : ஜனவரி 2020
விலை : ரூ. 20
நூல் அறிமுகம் எழுதியவர் :
பி.சிவானி,
ஒன்பதாம் வகுப்பு,
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,
கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பு
மகிழ்ச்சி
பாராட்டுகள்
எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களை நமது ஒவ்வொரு ஊருக்கும் அழைத்து பேச வைக்க வேண்டும்.
சூழலியல் தான் இனி அவசியம்!
அதுவே லாப வெறிக்கு எதிரான புதிய பொதுவுடமை!