ஆடி மாதம் – கவிதை
சுட்ட கருவாடும்
பட்ட சாராயமும்
பொரித்த முட்டையும்
மாட்டுக்கறி குழம்பும்
பச்சரிசி மாவு அடையும்
புகைந்து எரியும்
கருத்த சுருட்டும்
வட்ட வட்டமாய்
வளையமிட்டுப் பறக்கும் கணேஷ் பீடியும்
புதுத் துண்டொன்றும்
நாலு முழ வேட்டியும்
ஆடி மாத
எங்க சேரி
படைச்ச பாட்டனுக்கு
படையலாகிறது
நான்காவது வார
வெள்ளிக்கிழமை நாளொன்றில்
“கோவிந்தா
கோவிந்தா யென்று
உன் ஊர் தாண்டி கேட்கிறது
எம் ஜனங்கள் பாடும்
பாட்டொன்று நித்தம் நித்தம் நிமிடங்களெங்கும்
எழுதியவர் :
கவிஞர் ச.சக்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பான கவிதை.எளிய சொற்சித்திரம் .வாழ்த்துகள் சக்தி