நஜீப் தன் நண்பணின் மைத்துனன் உதவியில் கஃல்பிற்கு(Gulf) ரூ.30000/- பணத்தை ஒரு வகையாக தேற்றி அதன்மூலம் விசா பெற்றுக்கொண்டு ..தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட் ஹமீது என்ற இளைஞருடன் பம்பாயிலிருந்து விமானம் ஏறி பிரகாசமான எதிர்காலக்கனவுகளுடன் ரியாத் விமான நிலையத்தில் இறங்குகிறான்.
அவனின் கர்ப்பிணி மனைவி சைனுவும் பிறக்கப் போகும் தன் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு கணவனை நம்பிக்கையோடு அனுப்பி
வைக்கிறாள்.
கணவன் போய் சேர்ந்து வசதியாக வேலைப்பார்த்து நிறைய சம்பாதித்து மனைவிக்கு பணம் அனுப்பி சில ஆண்டுகளுக்குப்பின் சம்பாத்யத்துடன் திரும்பினான் என்று இருப்பின் அதற்கு ஒரு அவல நாவல் தேவையில்லையே!
ரியாத்தில் விமானம் ஒரு மணி நேரம் கால தாமதமாக இறங்குகிறது. இவர்களும் மகிழ்ச்சியோடு இறங்குகின்றனர். ஏஜெண்ட் வந்து அழைத்துச்செல்வார் என்று காத்திருக்கின்றனர்.
ஒரு மணிநேர காலதாமதத்தால் வந்துபார்த்துவிட்டு போய்விட்டனரோ என்று நினைத்துக்கொண்டு மலையாள மொழி தெரிந்த அதிகாரியிடம் முறையிட்டு உதவி கேட்கிறார்கள்.ஆனால் அவர் கேட்ட தகவல் எதுவும் நஜுபிடம் இல்லை..(எந்த ஏஜெண்ட்,என்ன கம்பெனி..தொலைபேசி எண்)
பொறுத்திருங்கள்…உங்கள்”அர்பாப்”வருவார் என்று மட்டும் கூறுகிறார். பொழுதும் இருட்ட
ஆரம்பித்துவிட்டது.
அப்பொழுது ஒருவர் அவர் எதிர்பார்த்த நபர்களைத் தேடி விமான நிலையத்தை சுற்றி சுற்றி வருகிறார்.இவர்களது மலையாளம் அவருக்கும்…அவரின் அரேபிய மொழி இவர்களுக்கும் புரியவில்லை. பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்க்கிறார்…இவர்தான் நமது “அர்பாப்”என்று இவர்கள் மகிழ்ந்து அவர் பின்னாலேயே தொடர்ந்து செல்கின்றனர்.
அவரது உடல்..உடை மேல் வித்யாசமான வாடை வீசுகிறது. அத்தர் செண்ட் வாசனையை இவர்கள் எதிர்பார்த்தனர்.சொகுசுக்காரில் பயணிக்கலாம் என்றிருந்தனர்.
ஆனால் புல் கட்டும்…தீவணமும் ஏற்றியிருந்த வண்டியில் மூட்டையோடு மூட்டையாக அடைந்து பயணம் ஆரம்பிக்கிறது..
உயரமான கட்டடங்கள் நிறைந்த நகரைத் தாண்டி வண்டி வெட்டவெளி பாலைவனத்தில் மணிக்கணக்கில் போய்க்கொண்டே இருக்கிறது!
பல மணிநேர பயணத்திற்குப்பின் ஹக்கீமை மட்டும் ஓரிடத்தில் இறக்கிவிட்டு….மீண்டும் பல மணிநேரம் சென்று இன்னோரு இடத்தில் நிற்கிறது. அந்த இடத்திற்கு”மஸாரா”என்று பெயரென பின்பு அறிகிறான். அதாவது ஆடுகள் அடைக்கப்படும் இடம்…
சாப்பிட்டானா…தண்ணி குடித்தானா…என்றுகூட கேட்கவில்லை..
அந்த இடத்தில் தலை எல்லாம் சடை வளர்ந்து கந்தை உடையில் புழுதி மனிதனாய் ஒருவன் புதிரான மிருகம் போல சகிக்க முடியாத வீச்சு நாற்றத்துடன் கட்டிலில் படுத்திருக்கிறான்.அவன் ஆடு மேய்ப்பன் என புரிந்து கொள்கிறான். ஆனால் மொழிச்சிக்கல்…இவன் இவனது மொழியிலும்…அவன் அவனது மொழியிலும் பேச…ஆனது ஒன்றுமில்லை.சைகை மொழியும் கை கொடுக்கவில்லை.
ஒவ்வொரு மஸாராவிலும் ஐம்பது நூறு ஆ்டுகள் வகை வகையாக இனம்பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன.
அந்த ஆடுகளை மேய்த்தல் என்பது அடைந்தே கிடக்கும் அவற்றை காலாற நடக்க விடுவதே ஆகும். ஆனால் திக்குக்கு ஒன்றாக பிரிந்து ஓடும் அவற்றே கட்டுக்குள் வைத்து கொண்டுபோய்…பின் கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண வேலையில்லை..
அர்பாப்பின் இடுப்பு பெல்ட்டும்….சாட்டையும்..
எப்போதூ் அவனின் உடலை நார்…நாராய் கிழித்துத்தொங்கபோடும் எனத் தெரியாது.
அதே போல் ஒட்டகங்களுக்கும் மஸாரா இருந்தது. ஆனால் அவற்றை ஓட்டிச் சென்று மேய்க்க வேண்டியதில்லை. தானே கூட்டமாக சென்றுவிட்டு..நேரத்தில் திரும்பி வந்துவிடும். அவற்றுக்கும்…ஆடுகளுக்கும் தொட்டியில் நீர் ஊற்றுவது…தீவனத்தை கவனையில் அவ்வப்போது தொடர்ந்து அள்ளி வைப்பது என்பது அதிகாலை தொடங்கி இரவு பத்து மணிவரை தொடரும்.
ஆடுகளிடம் பால் கறக்கும் நுட்பத்தை அங்கிருந்தவனிடமகற்றுக் கொள்கிறான்..
பாலைக் கறந்து அர்பாப்புக்கு காலையில் குடிக்க கொடுத்து விட்டு…பின் தானும் குடித்து…பின் குட்டிகளுக்கு ஒரு பாத்திரத்தில் வைத்துக்குடிக்கச்செய்ய வேண்டும்.
ஆடு குட்டி போட்ட உடனேயே தாயிடமிருந்து பிரித்து அடைத்து வைத்து….பாத்திரம் மூலமே குடிக்க வைக்கப்படுகிறது.
ஆட்டுப்பால் தவிர குபூஸ் என்ற உணவும்…தண்ணீருமே..மேய்ப்பவனுக்கு உணவு… இது வரையிலும் கூட கொஞ்சம்
சரிதான்…எங்கே அவலம்?
தண்ணீர் செலவாகும் எந்த வேலையும் கூடாது..ஏனெனில் வெட்ட வெளியாக வெயிலும்..இரவில் குளிரும் வாட்டும் பாலைவனத்தில் அதற்கான உடை…தங்க வீடு…படுக்க பாதுகாப்பான இடம் கிடையாது.நீரும் தீவனமும் புல்லும் வெளியே வாகனங்கள் மூலமே வரும்..அவற்றை இறக்கி தொட்டியில் கொண்டு போய் சேர்ப்பதும் இவன் வேலைதான். வேலே சுணங்கினாலும்…முடியாமல் முணங்கினாலும்..அடி.உதை..அதட்டல்..
உருட்டல்… இவன் வருவதற்கு முன் ஆதிமனிதன் போல ஆட்டோடு ஆடாய் இருந்த அவன் எங்கே போனான்…என்ன ஆனான் என்பது நாவலின் இறுதியில் தான் வருகிறது.
அல்லாவிடம் முறையிடுவதும்….ஆடுகளுக்கு பெயர் வைத்து அவற்றோடு தன் துயரங்களை கூறுவதைக் தவிர இவனது குரலை செவி மடுக்க யாருமில்லா தனிமை.
வேலை செய்ய ஆள் உயிருடன் இருப்பதற்கு மட்டும் அவன் பால்.் குபூஸ்.. தண்ணீர் அருந்த அனுமதிக்கப்பட்டானே தவிர அவன் எதையும் எதிர்பார்க்கவே நேரம் இல்லாத அளவுக்கு வேலை…வேலை…வேலை!
நீர் செலவாகும் என்பதால்..
*பல் விளக்க கூடாது..ஏன்..வாய் கூட கொப்பளிக்க கூடாது.
*காலைக்கடன் போனால்…கல்லால் துடைத்துக் கொள்ள வேண்டியதுதான்..
*பின் எங்கே குளிப்பது? துணி துவைப்பது?
காலப்போக்கில் இவனும் ஆட்டோடு ஆடாகவே ஜுவிதம் செய்தான்..ஆடு குளிிக்கிறதா..பல் விளக்குதா..கால் கழுவுகிறதா..அதற்காவது குளிரை…வெயிலைத்தாங்க உடல் ரோம அமைப்புண்டு. இவன் உடம்பிலும்..தலையிலும்…முடியுள்ள இடங்களிலும் காற்றின் மண்புழுதியும்…ஈறும்..பேணும்..பூச்சிகளும் குடிவாழும் கிடங்காகிப் போயிற்று.
இவன் உருவத்தை இவனே பார்க்க முடியாது.
உலகை விட்டுப் பிரிந்து, இரக்கமற்ற அர்பாப்பின் கொடுமைகளை சகித்துக்கொண்டு..ஊரில் உள்ள தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததா என்று தெரிந்து கொள்ள முடியாமல் வெளியுலகிலிருந்து துண்டிக்கப்பட்டு பாலைவன ஜந்துவாக உயிரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு..அல்லா ஒரு நாள் நிச்சயம் தன்னை இவ்விடத்தை விட்டு தப்பிக்க வைப்பான் என நம்பிக்கையோடு நாள்..கிழமை…தேதி..வருடம்..தெரியாமல்..
சூட்டில் வெந்து கொண்டும்…குளிரில் விறைத்தும் காலந்தள்ளினான்.
தன் மஸாராவிற்கு முன் இறக்கிவிடப்பட்ட
ஹக்கீமை நினைத்துப்பார்க்கக்கூட நேரம் இல்லை.
இப்படி மூன்று ஆண்டுகள் போயின என்பது பின்னர்தான் ஒரு நாள் தெரிய வரும் சூழல்
நாவலின் இறுதியில் வருகிறது.
ஹக்கீமை சந்தித்தானா?
திசை தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்தால்
கூட தப்பி விடலாம்..ஆனால் கண்ணுக்கு எட்டியவரை மணல் புயலாய் புழுதிக் காற்று வீசும் ,விஷ ஜந்துக்கள் நிறைந்த பாலைவனத்தில்…திசை தெரியாமல்…மொழிபுரியாமல்…தன்னை ஒவ்வொரு நொடியும் கண்காணித்துக்கொண்டே இருக்கும்
அர்பாப்பிடமிருந்து இவர்கள் எப்படி உயிரைப் பணயம் வைத்து தப்பித்து…..யாருடைய இரக்கத்தினால் ஊர்வந்து சேர்ந்தனர்….என்பதை..சோக அவலச்சுவையுடன்…மற்றவர்களுக்கு
எச்சரிக்கையூட்டும் விதத்தில்..
நம் மனம் பதை பதைத்து கழிவிரக்கபபடும் வண்ணம் தமிழ்படுத்தியிருக்கிறார் விலாசினி.
இந்தத்துயரங்களை அனுபவித்து மறு ஜென்மமாய் இன்றும் உள்ள நஜுப்பிடம் முழு சம்பவங்களையும் விவரமாகக்கேட்டு
கேரள சாகித்ய அகாடமி விருது பெறும் வண்ணம் நாவலாக்கி இருக்கிறார் பஹ்ரையினிலிருக்கும் மலையாள
எழுத்தாளர் பென்யாமின்.
குடும்பத்தைப்பிரிந்து அயல்நாடுகள் சென்று குடும்பவாரிசுகளின் எதிர்காலத்திற்காக விவரிக்க இயலா கொடுமைகள அனுபவிக்கும் உழைப்பாளிகளுக்கு அல்லா ஒருவரே நம்பிக்கை தருபவராக இருப்பதை நாவல் முழுவதும் பார்க்கிறோம்.
இவர்களை தப்பிக்க வைக்கும் இப்ராஹிம்கதிரியும்….மலையாளிகளுக்கு ரியாத்தில் உதவி கேரளத்திற்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பி வைக்கும்
குஞ்சிக்காவும்… ஐந்து நாள் இரவுபகலாக பாலைவன வெய்யில்..குளிரில்…திக்குத்தெரியாமல் தத்தளித்து தடுமாறிக்கிடக்கும் போது
காரில் வரும் ஒருநபர் நீர் கொடுத்து தக்க இடத்தில் இறக்கிவிடும் இவர்கள்….
ஆம்! இவர்கள் எல்லாருமே நஜுபிற்கு அல்லாதான்.. இறுதியில் நான் தேடுவது இவர்களை அல்ல என சிறையில் கடந்து செல்லும் பழைய
அர்பாப் கூட அல்லாதான்!
நீரின் அருமையை..
மொழி தெரிந்தவன் அருகில் உள்ளதன் அருமையை…
மனிதாபிமானத்தின் அருமையை…..
அறிந்துகொள்ள இதைவிடச்சிறந்த நாவலை இது வரை நான் படித்ததில்லை!
நீங்களும் படிக்கலாம்..நாம் எவ்வளவு வசதியோடு இருக்கிறோம் என பெருமூச்சு விடலாம்..இதைவிட இப்படி எங்காவது..யாராவது இருந்தால் நிச்சயம் உதவலாம்!
நூலின் தகவல்கள்
நூல் : “ஆடு ஜீவிதம்”
மலையாளத்தில் : பென்யாமின் 2009ல்
தமிழில் : விலாசினி-2020.
வெளியீடு : எதிர்
பக்கம் : 216
விலை : ரூ.250/-
எழுதியவர்
இரா.இயேசுதாஸ்
அறிவொளி வாசிப்பு இயக்கம், மன்னார்குடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.