இந்த நாவல் ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்று சொல்லப்படுகிறது ஆடு ஜீவிதம் என்ற பெயர் வைத்ததற்கு பதில் “நஜீப்பின் நரகம்“ என்று வைத்திருக்கலாம் இப்படித்தான் இதில் நரகத்திலிருந்து அந்த மனிதரைப் பற்றிய கதை என்று சொல்ல வேண்டும் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து விட்டு மீண்டும் நிகழ்கால வாழ்க்கையை கேட்க திரும்பிய மனிதரைக் கண்டு அவரின் நினைவுகளை கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கூட பார்க்க முடியாது அதுதான் நமக்கு நடக்கும் துக்கத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தாலே கண்களில் கண்ணீருக்கு போதா குறையத்தான் இருக்கும் ஆனால் இந்த மனிதரை எத்தனை நாட்கள் அவரின் துக்கத்தை நாம் படிக்கும் போதே நமக்கு அத்தனை வலிகள் நம்மில் வந்து நிற்கின்றன..
இதில் நான்கு பாகங்களாக வகைப்படுத்தி எழுதியுள்ளார்கள் சிறை பாலைவனம் விடுதலை அடைக்கலம் என்று இதில் சிறை சிறப்பாக அமைதியாக எந்த ஒரு பாதிப்பும் தெரியாமல் நகருகிறது சிறை தண்டனை தான் மிகக் கொடுமை என்பதை இந்த நாவலில் புறந்தள்ளி விடுகிறது சிறையை வாசிக்கும் போது ஏதோ ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்று நமக்கு அறிந்து கொள்ள முடிகிறது சிறையை விட இவர்களுக்கு அப்படி என்ன வேதனை இருக்கும் என்று நமக்குள்ளே யோசிக்க வைக்கிறது…
பாலைவனம் ஆரம்பம் இதுதான் இந்த நரகம் இதைவிட பெரிய நரகம் உலகில் இருக்குமா என்று யோசிக்க வைக்கும் நிகழ்வு இது என்று படித்து முடித்தவுடன் தெரிகிறது நரகத்தை விட கொடியது இந்த பாலைவனம் நரகமே மேல் என்று யோசிக்க வைக்கிறது நரகத்தை நாம் அறிந்ததில்லை சிறுவயதில் சொல்லும் கதைகளும் படித்த நிகழ்வுகளும் தான் ஆனால் அதைவிட மேல் உள்ள உலகில் ஒரு மனிதர் இருந்துவிட்டு இங்கு மீண்டும் அதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்கிறார் என்றால் இதை நாம் கேட்கும் போதே அதாவது வாசிக்கும் போதே நம்மை அறியாமல் நம்முள் கண்ணீருக்கு பஞ்சம் ஏற்படுகிறது..
விடுதலை அத்தியாயம் அதுவும் பாலைவனத்தை விட கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல முடியும் அவ்வளவுதான் இந்த விடுதலைக்காக அவர்கள் கொடுக்கும் விலை இரண்டு உயிர்கள் இறந்து விடுவதே மேல் இந்த உலகில் வாழ்வது என்பதுதான் எல்லோருக்கும் தோன்றும் ஆனால் அதை எல்லாவற்றையும் மனிதன் தாண்டி வந்து நிற்கும் போது தான் அதனின் வலிகள் வெளியில் தெரிய வருகிறது இத்தனை வலிகளுடன் ஒருவன் வந்து நிற்கிறான் என்றால் அவனை அந்த அல்லா தான் காப்பாற்றிக் கொண்டு வந்து இதை வெளி உலகத்திற்கு தெரிய வைக்கிறார் என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்..
அடைக்கலம் இதுதான் மிகப்பெரிய ஆறுதல் இந்த அடைக்கலத்திற்கான எதிர்பார்ப்பு எப்போது என்று ஏங்க வைத்து விடுகிறது ஒவ்வொரு பக்கங்களிலும் இது எப்போது நடக்கும் இது நடக்குமா இல்லை இரண்டு உயிர்கள் போனது போல் இதுவும் நடந்துவிடுமா என்று ஏங்க வைத்து விடுகிறது கிடைக்கும் வரை..
இந்த நாவலின் கதையை சொல்ல வேண்டாம் என்று எனக்குத் தோன்றுகிறது காரணம் அதனின் வலிகளை வாசிக்கும் போது அதை அனைவரும் அறிய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது அதனால் கதையை தவிர்த்து இந்த நாவலில் என் மனதில் உதித்த எண்ணங்களை மட்டும் தெரியப்படுத்த விரும்புகிறேன்..
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறவர்கள் அங்கிருந்து வரும்போது நான் நினைப்பது வேறு ஆனால் அங்கு அவர்களின் வாழ்க்கை வேறு என்று நாம் அறிந்திருந்தாலும் இந்த வாழ்க்கை நம் கண் முன் வந்து நிற்பது படு பயங்கரம் இப்படி இருக்கும் உலகில் இன்றும் எத்தனை பேர்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று ஏங்க வைக்கிறது மனம்..
ஒரு மனிதனின் தோற்றங்கள் பழக்கவழக்கங்கள் என்று எல்லாமே மாறிவிடும் தருணமாக அதை உணர முடிகிறது ஒருவரின் வேதனையை அறிந்து அவனுக்குவலி கிடைக்குமா என்று ஏங்க வைக்கிறது இந்த எழுத்துக்கள்..
நம்முடைய வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் ஆனால் அந்த வாழ்க்கையை நமக்கு தொடருமா என்றால் இல்லை கஷ்டம் ஒருநாள் ஓடிவிடும் அதுவரை நம் பொறுத்துக் கொண்டு இரு அதுவே உனக்கான தீர்வு என்று நமக்கு எல்லோருக்கும் கதையின் மூலம் நாம் அறிய முடிகிறது..
நமக்கான வழியை என்றாவது இறைவன் கொடுப்பான் என்று காத்திருந்து அதையும் தனக்கான வழி இதுதான் என்று அறிந்து செயல்பட காலதாமதம் ஆகலாம். அது கூட ஒரு விளையாட்டு என்று மனதிற்குள்ளே நஜீப் நினைத்துக் கொண்டும் நகர்த்தும் வாழ்க்கை இறைவன் மீது அத்தனை நம்பிக்கை என்று கேட்க வைக்கிறது மனம் இதற்கு மேலும் இவன் இறைவனை வணங்க அவரிடம் என்ன இருக்கிறது என்று தோன்றினாலும் இறைவனின் மீது நம்பிக்கை என்றும் நிலையாக அவர் வைத்திருப்பது தான் அவருக்கான வழியாக அறிய முடிந்தது..
துன்பங்களிலிருந்து ஒருநாளும் துவண்டு போகாமல் இதுதான் வாழ்க்கை இதை வெற்றியுடன் நம் நகர்த்தி விட்டால் நமக்கான ஒரு பொது வாழ்க்கை ஒன்று இருக்கிறது என்று நம்பிக்கைதான் நஜிப்பை நம் கண் முன் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கிறது..
இதில் வரும் கதாபாத்திரங்கள் குறைந்தது பத்துக்குள் தான் இருக்கும் ஆனால் ஆடுடன் வாழும் வாழ்க்கை தான் அஜித்திற்கு என்று உணர முடிகிறது தான் தப்பித்துப் போகும் தருணத்தில் கூட ஆட்டை பற்றி வரும் மனிதன் என்று யோசிக்க கூடதான் தப்பித்துப் போகும் தருணத்தில் கூட ஆட்டை பற்றி வரும் மனிதன் என்று யோசிக்க கூட முடியவில்லை. ஆட்டிற்கு ஒவ்வொருவரின் ஞாபகமாக ஒரு ஒரு பெயர் இது எல்லாம் தனியாக இருக்கும் யாரும்
இல்லாத உலகிலும் சரி ஒரே மனிதனாக போராடும் இடத்தில் தான் இது சாத்தியப்படும் என்று நம்முள் உணர முடிகிறது..
இந்த கதையில் வரும் இப்ராஹிம் என்று மனிதனுடன் அவர்கள் செய்யும் பயணம்தான் மிகச்சிறந்த பயணமாக அறிய முடிகிறது நிறைய இடங்களை இது போல் இவன் கடந்து வந்துள்ளான் என்று அறிய முடிகிறது தண்ணீருக்காக வாடும் இடங்களை அதையெல்லாம் வாசிக்கும் போது நீர் அருமை அறிய முடிகிறது வீணாக செலவழிக்கும் நீரின் அளவை நம்மை அறியாமல் தடுக்கத்தான் மனம் வரும் எத்தனையோ நாவல்களில் வாசித்து இருந்தாலும் இது போல் நாவல்களை வாசிக்கும் போது நமக்குள் பல மாற்றங்கள் உருவாகிவிடும் அது இதை வாசிக்கும் போது நம்மை அறியாமல் நிறைய மாற்றங்கள் தோன்றியது மனதிற்குள்..
நீரின் சிக்கனம் அறிய முடிந்தது
தண்ணீரின் தேவை எந்த அளவு என்று உணர முடிந்தது
தன்னம்பிக்கை வாழ்க்கை எது
வெற்றி என்பது எது
உனக்கான பொறுமை எந்த அளவு
கடவுளின் மீது நம்பிக்கை எந்த அளவு
எந்த உருவத்தில் உதவி வரும் உனக்கு
போராடும் குணம் எந்த அளவு உனக்குள் உண்டு
சாவை விட வாழ்வதுதான் கடினம்
எதிர்பார்த்த வாழ்வை விட கிடைக்கும் வாழ்க்கை எது
பல கேள்விகள் பல நினைவுகள்
மனதில் வந்து நிற்கிறது இதை திரைப்படமாக பார்க்கும் தருணத்தை விட இதனின் வாசிப்பு பல கேள்விகளை தந்து பல இடங்களில் கண்ணீர் தந்தது இந்த அளவு உணர்வு திரையில் வருமா என்பதுதான் சந்தேகம்வலிகள் நிறைந்த நரக வாழ்க்கையை வென்ற மனிதரின் சுயசரிதை இது..
வாழ்வில் சில சமயங்களில் கஷ்டங்கள் ஏற்படும். ஆனால் இந்த நாவலை வாசித்தவுடன் அந்த கஷ்டங்கள் நமக்கு ஒரு பெரிய விசயமாக தெரியாது..
இந்த வாக்கியங்களையே இந்த நாவலுக்கான வாக்கியங்களாக உணரமுடிகிறது
நூலின் தகவல்கள்
நூல் : ஆடு ஜீவிதம்
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை : ₹285
ஆசிரியர் : பென்யாமின்
தமிழ் : விலாசினி
ISBN: 9788194734055
முதல் பாதிப்பு : 2020
எழுதியவர்
நடராஜன் செல்லம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.