“ஆகோள் “
நூல் ஆசிரியர்: கபிலன் வைரமுத்து
184 பக்கங்கள். விலை ரூ220/- 41 அத்தியாயங்கள்.
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு -நவம்பர் 2022
ஆகோள் என்றால் ” ஆதிரை கவர்தல்”என்று பொருள்.சங்க காலத்தில் சிற்றரசர்கள் இடையே நிகழும் போர்களின் போது எதிரியின் ஆடு,மாடுகளை கவர்ந்து வருவதை குறிக்கிறது. 41 அத்தியாயங்களில் எந்த அத்தியாயத்தை தனியே படித்தாலும் தனிக்கதையாக புரியும்.
Flashback என்ற முறையில் நவீன காலத்தில் தனிமனிதனின் கை ரேகைகள், விழித்திரை ஆகியவற்றை ஆதார் அட்டை என்ற பெயரில் 130 கோடிக்கும் மேற்பட்ட தனிமனித விபரங்கள் அரசால் சேகரித்து வைக்கப்படுவது தனியாருடன் பகிர்ந்து கொள்ள நேரும் அபாயத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது 2017ல் “right to privacy is fundamental right” என்று கூறப்பட்தையும்….அன்று 1919-20 ஆண்டுகளில் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்கீழ் ஆங்கிலேயர் கைரேகை பதிய வற்புறுத்தியபோது அதை எதிர்த்த உரிமைப் போராட்டத்தில் 16 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிர் தியாகம் செய்தது ஒப்பிடப்படுவது அற்புதமான யுக்தி!!!…
2022 நவீன கால நடப்புகளும்…நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1919-20 சமூக நிகழ்வுகளும் ஒரே நேரத்திலும்…மாறி…மாறியும் பதிவு செய்யப்படுவது வாசகனுக்கு புதிய அநுபவம்! அதை நேரடியாக படித்தால் மட்டுமே உணரமுடியும்..சில மணி நேரத்திற்குள்!..
நித்திலன்-செங்காந்தள் இணை …நட்பு இணையாக இருப்பினும் இருவரிடையே உரையாடல் சர்வசாதாரணமாக ரசனையூட்டுகின்றன,.அதையும் வாசகர் படித்தே அநுபவியுங்கள்,. வைரமுத்து அவர்களின் நாவல்களில் கவித்துவமும் …தகவல்களும் …ததும்பி வழியும்… கபிலனின் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே ஓராயிரம் செய்திகளை கவிநயத்தோடு…தற்கால அரசியல் நெடியுடன் நேரடியாக உணர்த்துகிறது..
பிரதமர்…உள்துறை அமைச்சர்…முப்படை முதன்மைத் தளபதி… பாதுகாப்பு துறை அமைச்சர்…என கதாபாத்திரங்கள், 130 கோடி மக்களின் தனிநபர் தகவல்களை( Data) ,எதிரிகள் சிதைத்து திருடிவிடாமல் (Hacking and corrupting) பாதுகாக்க கால ரயில் மூலம் நூறாண்டுகளுக்கு முன்புள்ள காலத்துக்கு பயணித்து கொண்டுபோய் புதைக்க “வீர் ஜடாயூ”வில் பயணிக்கின்றனர் நித்திலன்,நிஷா பைலட், ஜெய்சங்கர்,கோவர்த்தனன் ஆகியோர்..இந்த கால எந்திரத்தை யோக மந்திரம் முழங்கி இயக்குகிறது ஒரு வேதக்குழு..
திட்டமிட்ட முந்தைய வருடத்திற்கு வெற்றிகரமாக கால ரயில் சென்றதா?
சென்றடைந்த ஊரின் மக்களுடன் இவர்கள் எப்படி பழகி தொடர்பு கொண்டனர்?
1920லிருந்து 2022டன் எப்படி தகவல் தொடர்பு கொண்டனர்?…..என்று ஏராளமான நிகழ்வுகள் அறிவியல் புனைகதை என்பதையும் தாண்டி வரலாற்று அறிவியலாய்
சுவைபட விரிகிறது அபூத புனைவு!.. திரைப்படம் பார்க்க செல்பவரிடம் முழுக்கதையை முன்பே விரிப்பது தவறு… எனவே கதை வேண்டாம்…
குடிநிலை என்பது எப்படி சாதி நிலையாக மாறியது?
3,4 வயது குழந்தைகள் ஐபேடு… செல்போன்களில் நிபுணத்துவம் பெற்று 10-13 வயதுகளில் நவீன குற்றவாளிகளாக மாறி எப்படி இன்றைய உலகிற்கு சவாலாகிக்கொண்டு வருவதையும்…இதை நாம் அவர்கள் “குழந்தைகள்தானே”என அறியாமல் …விபரம் புரியாமல் இருப்பதையும் கடைசி அத்தியாயம் காட்டமாகவே சுட்டுகிறது. இன்றைய நவீன இணைய உலகம் ஒவ்வொரு மைக்ரோ…நாணோ செகண்டும் எதிர்கொள்ளும் எதார்த்தமான சவால்களை நமக்கு புரிய வைக்கிறது நாவல்..
இது ஓர் அறிவியல் -அரசியல்-வரலாற்று-நவீன டெக்னிக்கல் நாவல்.. ஒரே நேரத்தில் இருவேறு இனிய…..சீரியசான….திகில் பயணம்… உடனே பயணிக்க தயாராகுங்கள் அன்பர்களே.. ஒவ்வொரு வார்த்தையும் அணுகுண்டாய்.,சிலிர்ப்பூட்டும்.,.
ஆகோள் என்றால் ஆநிரை கவர்தல்