ஆழ்கடல் – நூல் அறிமுகம்
ஆழ் கடல் – சூழலும் வாழிடங்களும் நூலின் ஆசிரியர் நாராயணி சுப்பிரமணியன் கடல் சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இளம் விஞ்ஞானி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். தொடர்ந்து பல நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்
நிலப்பகுதிக்கு மேலே இயற்கையின் அதிசயங்களை நாம் ஓரளவு கண்டிருக்கிறோம் . ஆனால் பரந்து விரிந்த பெருங்கடலில் ஆழ்கடலில் பல அதிசயங்கள் நிறைந்திருக்கிறது. அவற்றையெல்லாம் நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அதை நூலின் ஆசிரியர் அழகாக நாம் முன் காட்சிப்படுத்துகிறார்.
கடல் மட்டத்திற்கு 200 கிலோமீட்டர் கீழே உள்ள பகுதி எல்லாம் ஆழ்கடல் என்கிறார்கள். கடலின் மிகவும் ஆழமான பகுதியான சேலஞ்சர் டீப் (Challenger Deep) 11, 000 மீட்டர் ஆழம் உள்ளது. இது எவரெஸ்டின் உயரத்தை( 8849 மீட்டர் ) விட அதிகமாகும்.
கடல் மட்டத்திற்கு கீழே செல்ல வெளிச்சம் குறைய ஆரம்பிக்கும் இருள் அதிகரிக்கும். தட்பவெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவு. கடல் மட்டத்திற்கு கீழே செல்ல செல்ல அழுத்தமும் அதிகரிக்கிறது 100 மடங்கு அதிகமான அழுத்தம் கடல் மட்டத்திற்கு கீழே நிலவுகிறது.
இந்த காரணங்கள் தான் கடல் கடலுக்கு அடியில் சென்று எளிதில் ஆராய்ச்சிகள் செய்ய முடிவதில்லை.
கடலுக்கடியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தால் கடல்வாழ் உயிரினங்களை பற்றி அதிகம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 1872 முதல் 1876 வரை ஹெச் எம் எஸ் சேலஞ்சர்ஸ் என்ற கப்பலில் சென்ற விஞ்ஞானிகள் உலகளாவிய கடல் ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். அந்த ஆராய்ச்சியில் தான் முதன் முதலில் கடல் மட்டத்திற்கு கீழே 5500 கிலோமீட்டர் ஆழத்தில் உயிரினங்கள் வாழ்வதை கண்டறிந்தார்கள்.
வெந்நீர் ஊற்றுகள் :
ஆழ்கடலில் வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன. அதன் வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ் . 100 டிகிரி செல்சியஸை தாண்டியதுமே நீர் ஆவியாக கூடும் ஆனால் கடலுக்கு அடியில் உள்ள அதிக அழுத்தத்தின் காரணமாக கொதிநிலை அதிகரித்தாலும் நீர் திரவ நிலையிலேயே இருக்கிறது . இந்த அதீத வெப்பத்திலும் உயிர்கள் வாழ்கின்றன என்பது இன்னும் ஆச்சரியம்.
குளிர்க் கசிவுகள் :
வெந்நீர் ஊற்றுகளோடு ஒப்பிடும் பொழுது குளிர் கசிவுகள் பகுதியில் நீரின் வெப்பநிலை குறைவு அதனால் இப்பெயர். வெந்நீர் ஊற்றுகளைப் போன்று இங்கேயும் உயிரினங்கள் வாழ்கின்றன.
பூமி பந்தின் சில இடங்களில் , தகடுகளின் எல்லைப் பகுதிகளில் சிறிய விரிசல்கள் இருக்கலாம். அந்த விரிசல்கள் வழியாக ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன் வாயுக்கள் கசியும்.
இங்கே வாழும் உயிரினங்கள் பெரும்பாலானவை வெந்நீர் ஊற்றுகளில் உள்ள உயிரினங்களின் குடும்பத்தைச் சார்ந்தவை . இங்கே இரண்டு வகையான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. ஒருவகை பாக்டீரியா குளிர் கசிவில் உள்ள சல்பைடு ஹைட்ரஜன் செலவிடாக மாற்றும் இன்னொரு வகை பாய் பாய் கொண்டு உணவு தயாரிக்கும் இந்த வழி பாக்டீரியாவில் தான் இங்கு உள்ள குழுக்களில் நடப்படுகிறது
பவள வாழிடங்கள் :
பவளத்திட்டுகள் பெரும்பாலும் வெளிச்சம் நிறைந்த கடலோரப் பகுதியில் காணப்படுகின்றன. ஆனால் வெளிச்சமே இல்லாத ஆழ்கடல் பகுதியிலும் சில பவள உயிரிகள் வாழ்கின்றன.
பவள உயிரிகள் சேர்ந்து வாழும் இடம் பவள மேடு , பவளத்தோப்பு என்று அழைக்கப்படுகிறது.
பிரிட்டனுக்கு அருகில் உள்ள டார்வின் பவளமேடு சுமார் 100 சதுர அடி பரப்பளவு கொண்டது.
ஒரு பவள மேடு வாழ்விடத்தை நம்பி மீன்களும் பிற கடல்வாழ் உயிர்களுமாக 1300 இனங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். டாஸ்மனுக்கு அருகில் உள்ள பவளத் திட்டில் ஓரே ஆய்வில் 299 விலங்கினங்கள் கிடைத்துள்ளன.
கடலுக்கு அடியில் உப்புக் குளங்களும் காணப்படுகிறது. கடல் நீரே உப்பு நீர் தான் ஆனால். இந்த குளங்களில் அதீத உப்பு காணப்படும். இந்த பகுதியில் ஆக்சிஜன் கிடையாது. அதிக உப்புத் தன்மை , ஆக்ஸிஜன் இல்லாத நிலையிலும் இந்த இடத்திலும் கடல் உயிரினங்கள் வாழ்கின்றன…
இன்னும் பல்வேறு அதிசயங்களை நிறைந்துள்ளது இந்த ஆழ்கடல் . கடலில் மலைகளும் பள்ளத்தாக்களும் உள்ளன என்று வாசிக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. கடலுக்கு அடியில் உள்ள பூமி தகடுகளில் ஏற்படும் உரசல்களினால் இந்த மலைகள் உருவாகின்றன இதுவரை 14500 கடலடி மலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மலையை சுற்றி தான் வணிக ரீதியாகப் பயன்படும் மீன்கள் அதிகம் காணப்படுகின்றன
நீண்ட தூரம் போகும் வலசைப் பயணங்கள் போது இந்த கடல் மலைகளைத் தான் திமிங்கிலங்கள் அடையாளமாக பயன்படுத்துகின்றனவாம்.
கடல்வாழ் உயிரினங்களுக்கு விருந்து என்பது திமிங்கலம் இறந்த உடல் தான் . ஒரு திமிங்கலத்தின் உடல் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர்களுக்கு உணவாக பயன்படுகிறது. ஒரு திமிங்கிலத்தின் உடல் 400 வகை உயிர்களுக்கு உணவளிக்கிறது என்று வாசிக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது . எல்லாம் போக மிச்சம் இருக்கும் எலும்பு கூடுகளும் பல்வேறு உயிர்களுக்கு உறைவிடமாகவும் அமைகிறது.
ஆழ்கடலின் அதிசயங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. ஆனால் மனிதர்களின் செயல்பாடுகளின் தாக்கம் ஆழ்கடலையும் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நெகிழி பயன்பாடு மிகப்பெரிய தாக்கத்தை ஆழ்கடலில் ஏற்படுத்துகிறது . இன்னும் கண்டறியப்பட வேண்டிய ஆழ்கடல் அதிசயங்கள் நிறைய இருக்கின்றன . ஆழ்கடலை பாதுகாக்கவும் , இன்னும் பல அதிசயங்களை கண்டறியவும் மனிதர்களிடம் செயல்பாடுகள் முக்கிய பங்கு வைக்கிறது.
இத்தகைய பல்வேறு அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஆழ்கடல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை . ஓவியர் தியனேஷ் அவர்களின் ஓவியம் ஆழ்கடலின் பல்வேறு பகுதிகளையும் நம் முன் காட்சிப்படுத்துகிறது…
நூலின் தகவல்கள்
நூல் : “ஆழ்கடல்”
(சூழலும் வாழ்விடங்களும்)
நூலாசிரியர்: முனைவர் நாராயணி சுப்பிரமணியன்
விலை : ரூபாய் 40/-
வெளியீடு : ஓங்கில் கூட்டம்
தொடர்பு எண் : 044 24332424
நூல் அறிமுகம் எழுதியவர் :
ஜனனிகுமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


200 கிலோமீட்டர் – 200 மீட்டர்
5000 கிலோமீட்டர் – 5000 மீட்டர்
என்று மாற்றி வாசிக்க வேண்டும்