யூமா வாசுகி (Writer Yuma Vasuki) மொழிபெயர்ப்பு செய்த ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்? - நூல் அறிமுகம் - Aanpillai Yaar Penpillai Yaar - https://bookday.in/

ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்? – நூல் அறிமுகம்

ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்? – நூல் அறிமுகம்

 

பெண்ணிற்கும் ஆணிற்குமிடையில் சமத்துவத்தை வளர்க்க முயற்சிப்போம்…

யார் பெண் பிள்ளை?
யார் ஆண் பிள்ளை?

இப்படிப்பட்ட கேள்வியோடு தொடங்குகிறது இந்த நூல்.

நீண்ட தலை முடி உள்ளவர்கள், கம்மலும், சங்கிலியும் அணிபவர்கள், சமையல் அறையில் அம்மாவுக்கு உதவி செய்பவர்கள், பார்ப்பதற்கு அழகாகவும் அன்புடன் இருப்பவர்கள் பெண் பிள்ளைகள்.

காற்சட்டை அணிபவர்கள், மரத்தின் மீது ஏறுபவர்கள், மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், நிறைய பாரம் சுமப்பவர்கள், வயலில் இறங்கி வேலை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், பொறுப்பான வேலை செய்பவர்கள் ஆண்பிள்ளைகள்…

இப்படியான ஒரு கற்பிதம் நம்மிடையே திணிக்கப்பட்டுள்ளது.

ஆண் குறியுடன் பிறப்பது ஆண் பிள்ளை.
பெண் குறியுடன் பிறப்பது பெண் பிள்ளை.
அவ்வளவு தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.

உடல் ரீதியான வேறுபாட்டைத் தவிர ஆண் பெண் குழந்தைகள் இடையில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

உடலின் பால் வேறுபாடு காரணமாக ஆண் பிள்ளை ஆணாகவும், பெண் பிள்ளை பெண்ணாகவும் வளர்கின்றன. பிறப்பில் உள்ள இந்தப் பால் வேறுபாடு இயற்கை நிச்சயிப்பதாகும்.

இது எல்லா நாடுகளிலும் எல்லா சமூகங்களிலும் எல்லா குடும்பங்களும் இது போன்ற வித்தியாசங்கள் மட்டும் உள்ளதை காண முடியும்.

உடை அணிவதிலும், கல்வி பயில்வதில் வித்தியாசம் உள்ளது இயற்கையால் நிகழ்ந்தது அல்ல.

பெண் பலகீனமானவர்கள், திறமை இல்லாதவர்கள் என்றும் பெண்ணின் உழைப்பிற்கு மதிப்பு ஒன்றும் இல்லை என்றும் சொல்லுகிறது இந்த சமூகம்.

இந்தச் சமூகம் தான் அவர்களுக்கு இடையில் வேறுபாடுகளை வளர்த்து அவர்களை பிரித்து கொண்டுள்ளது.

இந்தச் சமூகம் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சமத்துவம் இல்லாமல் செய்வதை நாம் அறிய முடியும் .

இருவருக்கும் இடையில் சமத்துவத்தை வளர்க்க முயற்சி செய்வதற்கு பதிலாக இச்சமூகம் அவர்கள் இடையான வேறுபாட்டை வளர்ப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது

இதனால் இருவருக்கும் இடையேயான முரண்பாடுகள், வெறுப்பு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதை நாம் அறிய முடியும்.

சில பள்ளிகளில் கூட ஆண் பெண் குழந்தைகள் நேரடியாக பேசக்கூடாது பழகக் கூடாது என்ற சூழல் உள்ளதை காண முடியும்.

சமூக பால் பேதம் பெண்களுக்கு எதிராக செயல்படுகின்ற பல நாடுகளில் பெண் பிள்ளைகளும் பெண்களும் பலவிதமான தடைகளை எதிர்கொள்கிறார்கள்.

இதனால் ஆண் பிள்ளைகளைப் போல் பெண் பிள்ளைகள் முன்னேற முடியாத சூழல் உள்ளது. அவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மையை, ஆளுமையை வளர்ப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

ஏன் ஒரே வீட்டில் வளர்ந்து வரும் ஆண்பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் இதே பாகுபாடூடன் கூடிய நிலைதான் உள்ளது.

ஒவ்வொருவரும் வாழுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப தான் ஆண் பிள்ளையிடமும் பெண் பிள்ளையிடமும் இது போன்ற குணநலன்கள் உருவாகும்.

எனவே ஒவ்வொரு குடும்பத்திலும், பெண் பிள்ளைகளை அவர்களுக்கு விருப்பமான வகையில் உடை அணிந்து, அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை விளையாட அனுமதித்து, அவர்கள் விரும்பியவற்றை படிக்கவும் வழிவகை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

அவர்கள் எப்படி எல்லாம் ஆக வேண்டும் விரும்புகிறார்களோ? அப்படி ஆவதற்கு அவர்கள் கடின உழைப்பு செலுத்த நாம் அனுமதிக்க வேண்டும்.

பெண் பிள்ளையாக பிறந்த காரணத்தினால் வீட்டு வேலைகள் எல்லாம் செய்து, வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் பணிவிடை செய்து வாழ வேண்டும் என்று சொல்லுவது மிகப்பெரிய தவறு. அதிலிருந்து அவர்களை விடுவித்து, இயற்கையாக வாழ அனுமதிப்பதே மிகச்சிறந்த வழி ஆகும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜாதி, நிற, வர்க்க வேறுபாடுகள் இன்றி நம் குழந்தைகளை பழக்கினால் அனைவரும் தனித்தன்மையுடன் வாழ்வதற்கும் புதிய உலகத்தை இதன் மூலம் உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

இந்த நூலை ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களும் வாசிக்க வேண்டும். புதிய சிந்தனையை நம் குழந்தைகள் மத்தியில் கொண்டு சென்று ஆண் பெண் பேதம் இன்றி நம் குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபடுவது மிக அவசியமாகும்.

மலையாள மொழியில் வெளியான இந்த சிறந்த நூலைப் படைத்தவர் கமலா பாசின் ஆவார்.

தமிழ் மொழியில் மொழிபெயர்த்த எழுத்தாளர் யூமாவாசுசிக்கு பேரன்பு நன்றிகள்.

நூலின் தகவல்கள் : 

நூல் : ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்?
விலை: ரூபாய் 40/ –
வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன்
சென்னை 600018
தொடர்பு எண்: 044 24332924.
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/aanpillai-yaar-penpillai-yaar/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

MJ. பிரபாகர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *