Aaruthal ShortStory by Era Kalaiyarasi. ஆறுதல் குறுங்கதை - இரா.கலையரசி

ஆறுதல் குறுங்கதை – இரா.கலையரசி




அம்மா அவசரமாய் சமையலறையில் இருந்தாள். சட்டி பானைகள் உருண்டு கொண்டு இருந்தன

ஏன்? நான் சொன்ன வேலைய செய்ய முடியாதோ? அவ்வளவு பெரிய ஆளாகிட்டீங்க? சல்லிகரண்டியின் துளைகளாக தெறித்து விழுந்தன வார்த்தைகள்.

நான் எத்தனை வருசமா மாடா உழைக்கிறேன்., ஒரு நல்ல வார்த்தை கேட்டு இருக்கேனா?

இழுத்து ஊத்திய தோசை சொய்ங் என்ற சத்தத்துடன் ஆமோதித்து சரி சொன்னது.

கரகரவென அரைபட்ட தேங்காயை எடுத்து “டொக்”கென கொட்டி, இது கூட வர மாட்டேங்குதுனு சலித்துக் கொண்டார்.

அம்மா! என்ற சத்தம் வந்த திசையை பார்த்து முறைத்தாள்.மகனின் கையில் பெரிய போட்டோ இருந்தது.

பார்த்த நொடியில் கண்கள் குளமாகியது.காதலித்து மணந்த கணவன் இறந்து ஒரு மாதமே ஆகி இருந்தது.

அம்மா, அப்பாவுடன் சிரித்து பேசும் படத்தை மகன் கொடுக்க மனதின்”விரக்தி கண்ணீரில் கரைந்தது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *