கவிஞர் ஆசு கவிதைமண் புழுக்களின் வலியை
கலப்பை அறியும்
நிலம் அறியும்
நிலத்தில் வேர்க் கொண்ட
செடி கொடிகள் அறியும்
பூக்கள் கனிகள் அறியும்
ஒரு போதும் மீன்கொத்திகள்
மண்ணைக் கிளறி
மண் புழுக்களை கொத்திப் போவதில்லை
புற்றின் இருப்பிடம் கொண்ட
பாம்புகள் மண் புழுக்களைத் தின்பதில்லை
காற்றோ நீரோ மண் புழுக்களை
ஒன்றும் செய்வதில்லை
ஓர் உழுகுடியின் உறவு அது என
யாதுமே அறிந்திருக்கின்றன
எங்கிருந்தோ வரும்
பெருந்திண்ணியின் பார்வையில்,
இரையாக/ யாவரும் அனுமதிக்கப் போவதில்லை
எள்ளி காறி உமிழ்கிறது
ஒரு கண்ணீர்ப் பொருக்கு

ச்சீ என.