கவிதை: ஆவணப் படுத்துங்கள் – சாந்தி சரவணன்

கவிதை: ஆவணப் படுத்துங்கள் – சாந்தி சரவணன்

 

 

 

 

வாழ்வியலையும் வரலாற்றையும்
அகழாய்வு செய்து
கண்டுபிடித்து விடுவார்கள்
வருங்கால சந்ததியினர்!
ஆனால் உணர முடியாத
ஒரு பொக்கிஷம் நம்
ஒவ்வொருவரிடமும் ஒளிந்துள்ளது!
மண்ணில் புதைந்து
காற்றில் கரைந்து கலந்து போகும்
மனித சிந்தனைகளை
அகண்டு
ஆழ்ந்து
அகழ்வாய்வு
செய்தாலும் உணர இயலாது!
ஆகவே ஆவணப் படுத்துங்கள்!
உங்கள் நற்சிந்தனைகளை
எழுத்துகளாக்குங்கள்!
அந்த பொக்கிஷங்களை
கடத்தி விட்டு செலுங்கள்
உங்கள் சந்ததியினருக்கு!

நன்றி

திருமதி சாந்தி சரவணன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *