“ஆழ்கடல்” – நூல் அறிமுகம்
“எல்லோருக்குமான பூமி”
இந்த பூமி எல்லோருக்கும் ஆனது. மனிதனுக்கு மட்டுமல்ல நிலங்களில் வாழும் உயிரினங்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் ஆழ்கடலில் வாழும் அதிசயப் பிராணிகளுக்கும் உரியதாகும்.
இந்த நூலை படிக்கும் போது ஒரு நீர்மூழ்கி கப்பலில் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் உணர்வு ஏற்படும்.
ஆழ்கடலுக்குள் செல்லும் இப்பயணத்தில் கடலுக்கு அடியில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள், வெந்நீர் ஊற்றுக்கள், குளிர் கசிவுகள், பவள வாழ்விடங்கள், உப்பு நீர் குளங்கள் என பல அதிசயங்களையும் ,ஆள் கடலின் ரகசியங்களையும் இந்த நூலினை படிக்கும் போது உணர்வோம் என்பதில் ஐயமில்லை.
ஆழ்கடல் என்பது 200 மீட்டருக்கு கீழே இருப்பது. மிக ஆழமான ஆழ் கடல் பதினோரு கிலோமீட்டர் ஆழம் கொண்டதாகக் கூட இருக்கும். நம் எவரெஸ்ட் சிகரத்தை விட ஆழமானது ஆழ்கடல்.
நாம் நேரடியாக நீந்தி இப்பகுதிக்கு செல்ல முடியாது. எனவே ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் சென்று ரோபாட் கருவிகள் மூலம் ஆய்வில் ஈடுபடுவார்கள்.

ஆழ்கடல் பகுதி சூரிய ஒளி இன்றி குளிர்ச்சியாகவே காணப்படும்.
பசுபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் ஒரு இடத்தில் மட்டும் வெப்பநிலை அதிகமாக இருந்து உள்ளது.
வெப்பம் இருந்தாலே உயிரினங்கள் வாழத் தகுதியான இடம் என்பதை நம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
1) ஆழ்கடலுக்குள் பயணிக்க போகிறோம்.
2) கடலுக்கு அடியில் வெந்நீர் ஊற்றுங்கள்.
3) குளிர் கசிவுகள்.
4) பவள வாழ்விடங்கள்.
5) உப்பு நீர் குளங்கள்.
6) மலைகளும் பள்ளத்தாக்குகளும்.
7) ஒரு திமிங்கிலத்தின் வீழ்ச்சி.
8) ஆழ்கடல் வாழ்விடங்களுக்குள் இருக்கும் அச்சுறுத்தல்கள்.
மேற்கண்ட தலைப்பில் எட்டு அத்தியாயங்களை கொண்டதாகும் இந்த நூல்.
கடல் வாழ் உயிரினங்கள் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி போன்றவற்றை மிக விரிவாக நமக்கு வழங்கி உள்ளார் நூலாசிரியர்.
நாம் எப்படி எல்லாம் மாசுபடுத்துகிறோம் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
எனவே சூழியல் ரீதியாக கடல் வளங்களை நாம் பாதுகாப்பது என்பது மிக மிக அவசியமாகும்.
இந்நூலை வாசிக்கும் போது நம் வாழ்விடங்களை சுற்றி எவ்வளவு பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்களை வீசி வருகிறோம். அதன் மூலம் நாம் எவ்வாறு மண் வளங்களை பாழாக்குகிறோம் என்பதை உணர முடியும்.
அது போன்று கடற்கரைப் பகுதிகளில் வீசிச் செல்லும் அனைத்து கழிவுகளும் ஆழ்கடல் பகுதிக்கு தான் செல்கிறது அங்குள்ள உயிரினங்கள் இதையெல்லாம் உண்ணும்போது அவை அழிவை நோக்கி செல்லும் என்பதை நாம் உணர வேண்டும்.
எனவே நாம் நம்மைச் சுற்றி உள்ள மண் வளங்களை பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும்.
இந்நூல் ஓங்கில் கூட்டம் அமைப்புடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ட்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்.
நூலின் தகவல்கள்
நூல் : “ஆழ்கடல்”
(சூழலும் வாழ்விடங்களும்)
நூலாசிரியர்: முனைவர் நாராயணி சுப்பிரமணியன்
விலை : ரூபாய் 40/-
வெளியீடு : புக் ஃபார் சில்ட்ரன்
தொடர்பு எண் : 044 24332424
நூல் அறிமுகம் எழுதியவர் :
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

