கங்குவா (Kanguva) – ஒரு காவியமா?
இனி, கதை சொன்னால் தவறில்லை. ரோமானியப் பேரரசன், 25,000 வீரர்களோடு இந்தியப் பெருங்கண்டத்தை பிடிக்க வருகிறான். அதற்குஅவனது கப்பல்கள் கரையொதுங்கவும், வீரர்கள் பயிற்சி பெறவும் பாதுகாப்பான நிலம் வேண்டும். அதற்காக ஐந்தீவு பகுதியில் ஒரு தீவில் இருப்போரை கொன்றழித்துவிட்டு அந்த இடத்தில் தங்கலாம் என்று தங்கத்திற்கு ஆசைப்படும் ஐந்தீவு பகுதியைச் சேர்ந்த இருவர் காட்டிக் கொடுக்கிறார்கள்.
கப்பல் கட்ட வேண்டும் என்று ஏமாற்றி அழைத்துச் சென்று 100 பேரைக் கொன்று குவிக்கிறான் அந்ந ஆட்காட்டி. 100 கைகளைக் காட்டி 100 தங்கக்காசுகளைப் பெறுகிறான். 2-வது முறை ஆட்காட்டி அழைத்துச் செல்லும் போது கெடு நோக்கம் தெரிந்து அவனை உயிரோடு கட்டி வைத்து எரிக்கிறார்கள். அவனது மகனை கங்குவாவிடம் ஒப்படைத்து விட்டு ஆட்காட்டியின் மனைவியும் சிதை ஏறுகிறாள். தாய், தந்தையரை எரித்துக் கொண்டதால் உள்ளூரப் பகைவெறி கொண்ட பருவன் என்னும் அந்தச் சிறுவனை கங்குவா பாதுகாக்க முனைகிறான்.
கங்குவா அந்த பெரியாச்சி மண்ணின் குலத் தலைவர் மகன். ஒரு சண்டையில் சிறுவன் பருவன் வாளை கங்குவாவிடம் நீட்டுவது போல் நெஞ்சிலே பாய்ச்சிவிட, என் மண்ணைக் காக்கும் யுத்தம் முடிந்ததும் நீ என்னைக் கொன்று வஞ்சம் தீர்க்கலாம் என்று கங்குவா சிறுவன் பருவனுக்கு வாக்குத் தருகிறான்.
கங்குவா தன் மண்ணைக் காத்தானா; சிறுவன் தன் சினம் தீர்ந்தானா? என்பது கிபி 1070- ஆண்டுக் கதை. அதற்கு இணையாக நவீனக் கதை ஒன்று. ரஷ்யாவில் மூளையில் திறன் ஊட்டப்பட்ட அசாதாரன சிறுவன் ஒருவன் கோவா தப்பி வருகிறான். அங்கு அவன், போலீசுக்கு தில்லாலங்கடி கேங்ஸ்டர்களை பிடித்துத் தரும் பணியில் ஈடுபட்டிருக்கும் பிரான்சிஸை சந்திக்கிறான். சிறுவனுக்குள் பிரான்சிஸ் கங்குவா போல் தெரிகிறான்.
நீண்ட கிளைமேக்ஸ் காட்சி ஒரு புறம் சிறுவன் பருவனைக் காக்க 1070-ல் பாபி தியோலுடன் சூரியா கப்பலில் மோதும் காட்சியும், மறுபுறம் தற்போது 2024-இல் சிறுவனைக் காக்க ரஷ்யப் படைகளுடுன் நடக்கும் விமானத்தில் சண்டைக் காட்சிகளும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளன.
சரி, மேலே சொன்னது கங்குவா கதை. காவியத்தனமான இந்தக் கதை புதிது. அதைப் படமாக்கிய இடங்களும் அபாரம். பயர் சாங் என்னும் ஆதி நெருப்பே பாடல் அட்டகாசம். திரையில் காட்சிகளைக் காண்பதே ஒரு அற்புதமான அனுபவம்.
Ok, படத்துல பிரச்சினை என்ன?. காட்டுக் கத்தல். ஆமாய்யா… 1070 ம் வருசத்துல ஆதிவாசிகள் அப்புடித்தான் பேசிக்க முடியும். காட்டுக்குள்ள கன்னா பின்னானு கத்துறதால தானே சாரே, அதுக்குப் பேரு காட்டுக் கத்தல்?
அடுத்து, சி.ஜி. ஒர்க் நல்லா தான் இருக்கு. ஸ்டோரி லைன் நல்லாதா இருக்கு. நேற்று முன்னிரவுக் காட்சி ஹவுஸ்புல். நானே கடைசி டிக்கெட் புக் பண்ணித்தான் போனேன். தியேட்டர்ல பார்வையாளர்கள் படத்தை என்ஜாய் பண்ணிப் பார்த்தாங்க.
அப்புறம் என்ன தான் பிரச்சினை?. சங்கிகளும் சாதியவாதிகளும் அதாவது அக்கினிச்சட்டி, மரவெட்டி, மறவர் தேவர்னு ஆதிக்க ஜாதிக் கொம்பன்களுக்கு சூர்யான்னா புடிக்காது. ஏன், அவரு நீட் தேர்வை எதிர்த்தார். ஜோதிகா சங்கிகளை நேருக்கு நேராவே கோயிலுக்கு நன்கொடை தராம ஆசுப்பத்திரிக்கு ஸ்கூலுக்கு நன்கொடை தரச் சொன்னாங்க. அதனால படத்தை பார்த்தும் பார்க்காமலும் முழுமூச்சா எதிர்த்து படத்தை குப்பைங்குறான். அவனுக ஒண்ணே ஒண்ணு தான் சொல்லல கங்குவா படம் ஓடுற ஊருலயே குடியிருக்க முடியாதுனு மட்டும் தான் பேசல.
இந்த நேரத்துல நம்மாளுங்க எப்புடித் தெரியுமா?. சினிமா தானுங்க தோழர், கோடி கோடியா அவன் பணம் பண்ணப் போறான் தோழர். விமானத்துல தொங்கிட்டு சண்டை போட முடியுமா தோழர். ஹீரோ உடம்புல குண்டு பாயாதா தோழர்னு லாஜிக் மிஸ்டேக்ஸ் பேசிக்கிட்டு திரியுறான்.
அமித் ஷா தான் ஒருமுறை சொன்னான், நாங்க 30-லட்சம் பேரு இணையக் கூலிகள் வெச்சிருக்கோம். கருத்துப் பிரச்சாரத்தை நாங்க தான் முடிவு பண்ணுவோம்னு. தங்கலான், வாழை, கங்குவானு வரிசையா வந்து எதிர் புரமோசன் வேலையப் பார்க்குறானுக.
சூர்யாவும், ஞானவேலும் சொன்ன விசயத்துக்காக படத்தை டிரோல் பண்ணுறோம்னு ஒரு குரூப்பு. என்ன நடந்தாலும் வேடிக்கை பார்த்துக்கிட்டே ஒரு பெரும் குரூப்பு. நான் 200 ரூபாய் டிக்கெட்டிற்கு செலவழிக்க தயங்கி நிற்போர் அல்லது, சிறுநகர கிராமங்களில் இருப்போரை குறை சொல்லவில்லை புரிந்து கொள்க.
இறுதியா ஒண்ணு சொல்லி முடிக்கலாம். நம்ம கோவையைச் சேர்ந்த பெதிக தோழர் மனோஜ் தான், கங்குவா படத்தை ஒட்டி, ஒரு அருமையான வார்த்தை சொனௌனாரு, “சங்கிக சினிமாவ பொழுது போக்கா பார்க்காம அவன் எல்லாத்தையுமே அரசியலா பார்க்குறான்; எதையுமே பொழுது போக்கா பார்க்காம அரசியலா பார்க்க வேண்டிய நம்மாளு கங்குவா மாதிரி பல விசயங்களை பொழுதுபோக்கா மட்டும் பார்க்குறான்.
இப்புடி இருந்தா, ரஜினியோட இடத்தை அவனுக சிவ கார்த்திகேயனை வெச்சுத் தான் நிரப்புவானுக!
கங்குவா சினிமாவிலும் சிறு, சிறு குறைகள் அதாவது காட்டுக் கத்தல். அதை சில சீன்களில் குறைத்து இருக்கலாம். ஆதிநெருப்பே பாடல் போல இன்னொரு பாடல், எமோசனல் கனெக்டட் சீன்ஸ் மெனக்கெட்டு இருக்கலாம் தான்.
அதுக்காக குப்பை படம்னு கங்குவை சங்கிகள் போல் நாம் ஒதுக்கித் தள்ளக் கூடாது; கருத்து யுத்தத்திலும் நாம் தோற்றுப் போகக் கூடாது!. அதனால வாய்ப்புள்ளோர் பாருங்கள். கங்குவா ஒரு வெற்றிகரமான படம் தான்!
கட்டுரையாளர் :
சக்தி சூர்யா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.