அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்
இந்த நூலை படிப்பது ஒரு நாவல் படிப்பது போலவே இருந்தது இதன் ஆசிரியர் கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சரின் முதல்வர் அக்கு ஹீலர் உமர் பாருக் அவர்கள் எண்ணற்ற இயற்கை மற்றும் அக்குபங்சர் மருத்துவ நூல்கள் தமிழ் கவிதை கட்டுரை நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார் இந்தப் புத்தகமும் எளிய நடையில் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது, அக்குபங்சர் மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் படிக்க வேண்டிய நூல், அக்குபங்சரை வலி நீக்கும் மருத்துவமாகவும் ஒரு துணை மருத்துவமாகவும் மட்டுமே அறியப்பட்ட நிலையில் இது எவ்வாறு முழுமையான மருந்தில்லா தொன்மை மருத்துவம் என்று எளிமையாக புரிந்துகொள்ளும் வழியில் வரலாற்று அறிவியல் தகவல்களுடன் விளக்குகிறது, அக்குபங்சர் மட்டுமல்லாது அனைத்து மரபு வழி மருத்துவங்களின் தோற்றம் வரலாறு பற்றிய குறிப்புகளையும் காண முடிகிறது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மந்திரச் சொல் உபகடனம் தாயத்து அணிதல் செம்மண் பூச்சு மூலிகைசாறு ஆவிபிடித்தல் போன்ற உளவியல் கலந்த உத்திகள் பல்வேறு மருத்துவ முறைகளை காண முடிகிறது, தொன்மை மருத்துவங்களில் அகல்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மண்டை ஓடுகளில் துளைகள் இருந்ததையும் காண இதுவும் ஒரு நம்பிக்கை சிகிச்சையாக இருக்கலாம் என்ற தகவல்கள் பிரமிக்க வைக்கிறது மனதின் நம்பிக்கை எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்று அறிய முடிகிறது, உலகின் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது பெரிய மருத்துவமாக அக்குபங்சர் விளங்குகிறது என்ற செய்தியை விளக்குகிறது எத்தனையோ அங்கீகரிக்கப்பட்ட சித்தா ஆயுர்வேதா யுனானி இயற்கை மருத்துவ முறைகள் இருந்தபோதிலும் அக்குபங்சர் எவ்வளவு உலகலாக பரவியுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது, அந்தந்த நிலப்பரப்புகளின் தன்மை கேற்ப மருத்துவங்கள் தோன்றின என்று அறிய முடிகிறது உஷ்ண பகுதியான தமிழ்நாட்டில் மூலிகைகளை வெயிலில் உலர்த்தி சூரணமாக கொடுக்கும் சித்த மருத்துவமும் குளிர் பகுதியான வட இந்தியாவில் மூலிகைகளைப் பிழிந்து சாறு எடுத்து அரிஷ்டம் என்ற திரவ வடிவிலும் பாலை வனப்பகுதியில் மூலிகையைப் பிழிந்து இனிப்பு சேர்த்து யுனானியும் தொன்மையான மருத்துவங்களாக இருந்தது என்று அறிய முடிகிறது ஒவ்வொரு மருத்துவத்திற்கும் நோயறிதல் மற்றும் சிகிச்சை முறை என்ற பிற மருத்துவ கலப்பில்லாமல் இருந்ததை அறிய முடிகிறது, அக்குபங்சர் வரலாறு நூல் மிகவும் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது, வரலாற்றின் தேவையை வலியுறுத்தல் எல்லா உபிரினங்களுக்கும் வரலாறு உள்ளது, வரலாற்றுப் பின்னணியை அறியாமலேயே அநேக கலைகளை மருத்துவங்களை பொருட்களை பயன்படுத்துகிறோம் உதாரணமாக காகிதத்தை கண்டுபிடித்த சீனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சாய்லூன் அவர்களின் பெயர் சீன நூல்களில் இல்லை என்று குறிப்பிடுகிறார், அதேபோல சைனீஸ் அக்குபஞ்சர் புத்தகத்தை எழுதிய சீனாவின் மாஸ்டர் ஆப் அக்குபஞ்சர் உ வே பிங் பற்றிய தகவல்களும் அறிய மிகவும் கடினமாக இருந்தது என்று காண முடிகிறது அதேபோல எல்லோ எம்பரர் ஹுவாங்டி என்று சீனா அக்குபங்சர் தந்தை மன்னரின் பெயரை குறிப்பிடுகிறோம் ஆனால் ஹூவாங்டி என்பதன் தமிழ் சொல் மஞ்சள் பேரரசு என்பதாகும் ,அக்குபங்சர் தோன்றிய விதம் அதன் பெயர் காரணம் தொன்மை சீனாவில் இருந்து ஐரோப்பிய அமெரிக்கா இலங்கை வழியாக தமிழகத்தை வந்து அடைந்த விதம் எல்லாவற்றையும் அழகாக விவரிக்கிறது.
அக்குபங்சர் என்ற சொல்லுக்கு மிகச் சரியான தூண்டுதல் என்ற பொருளாகும், அக்குபங்சர் தமிழகத்தில் தோன்றியது என்றும் சித்தாவோடு வர்ம முறைகளை பயன்படுத்தியதை அக்குபங்சர் புள்ளிகளில் பயன்படுத்தியதாகவும் தமிழக சித்தர்களில் ஒருவரான போகரோ பௌத்த சமய குரு போதிதர்மரோ இந்தியாவிலிருந்து சீனத்திற்கு அக்குபங்சரை பரப்பி இருக்கலாம் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது ஆனால் சீனாவில் எட்டாயிரம் வருடத்திற்கு முன்பே வாழ்ந்த மன்னர் பூ சி காலத்து தத்துவம் இன் யாங் பற்றி ஐ சிங் என்ற நூலிலும் 4700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர் ஹுவாங்டி காலத்தில் வந்த அக்குபங்சர் மூலநூல் நெய்சிங்கிலும் இந்த தத்துவப்படி அக்குபங்சரின் அடிப்படைக் கேள்விகள் மற்றும் விரிவான விளக்கங்கள் இரண்டு பாகங்களாக உள்ளதை பார்க்கும் பொழுது சீனா தான் அக்குபங்சர் மருத்துவத்தின் பூர்வீகம் என்று ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது.
கற்காலத்தில் அக்குபங்சரை கல் கத்திகளை கொண்டும் பின்பு கூர் தீட்டப்பட்ட சிறு கற்களை கொண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டதை காண முடிகிறது சீனாவில் உள்ள பழைய பாதி மனிதன் பாதி பறவை சிலையில் ஊசி போன்ற பொருளை வைத்து அக்குபஞ்சர் நினைவு சின்னமாக இருந்திருக்கலாம், எகிப்து மக்கள் கூட அக்குபங்சரை தங்களுடைய பூர்வீகம் என்று கூறுகிறார்கள் பழங்கால மம்மியில் இருந்து எடுக்கப்பட்ட பாப்பிரஸ் பிரதிகளில் அக்குபங்சர் தகவல்கள் கிடைத்தாலும் வேறு ஆதாரங்கள் அங்கு இல்லை சீனாவில் கிமு ஆயிரம் வருடத்திலிருந்து தாமிர ஊசிகள் அதற்குப் பிறகு வெள்ளி தங்க ஊசிகள் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மற்றும் நான் சிங் நூல் அக்குபங்சரின் பரிசோதனை முறைகள் பஞ்சபூத தத்துவங்கள் சக்தி நாளங்கள் பற்றிய முக்கிய நூலாக கருதப்படுகிறது அதற்குப் பிறகு வெளிவந்த அக்குபஞ்சர் மற்றும் மாக்ஸிபூஷன் சிகிச்சை நூல்கள் அவசர காலத்தில் ஆயிரம் குறிப்புகள் மற்றும் அக்குபஞ்சர் புள்ளிகள் கையேடு போன்ற சீன நூல்களைப் பற்றியும் அவற்றை எழுதிய மன்னர்களின் வரலாற்றையும் அறிய முடிகிறது சீனாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு அக்குபங்சர் பரவிய தகவல்கள் மற்றும் உலக நாடுகளுக்குள் நுழைந்த விதங்களை விவரிக்கிறது,சீனாவில் அக்குபங்சர் முழுமையான மருத்துவமாக பழங்காலத்தில் இருந்த போதிலும் பிற்காலத்தில் மூலிகை மருந்துகளுடனும் அலோபதியுடனும் இணைக்கப்பட்டு சீனா சோசியலிச நாடான பிறகு அக்குபங்சர் வேகமாக அண்டை நாடுகளுக்கும் பரவத் தொடங்கியதை அறிய முடிகிறது, முழுமையான மருத்துவமாக அல்ல துணை மருத்துவமாக வலி நிக்கும் மருத்துவமாகவே, வெறும் கால் பயிற்சி மருத்துவத்தின் மூலம் 1950களில் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் மூலம் உலக நாடுகளில் அக்குபஞ்சர் வேகமாக பரவியதை காண முடிகிறது இந்தியாவிற்குள் அக்குபங்சர் வந்த வரலாறு மிகவும் சுவாரசியமாக இருந்தது இரண்டாம் உலகப் போரின் போது டாக்டர் கோட்சில் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு உதவ சென்று சீன மருத்துவத்துவமும் கற்று அங்கேயே தங்கி விட்டார், அவரை பின்பற்றி மேற்கு வங்க டாக்டர் பி கே பாசு எவ்வாறு சீனா சென்று அக்குபஞ்சர் பயின்று பஞ்சாபில் டாக்டர் கோட்சில் நினைவாக முதல் அக்குபங்சர் மருத்துவமனை பிறகு டாக்டர் பி கே பாசுவின் பெயரால் மேற்கு வங்கத்தில் அக்குபங்சர் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தரவுகளை காண முடிகிறது மேலும் அண்டை நாடான இலங்கையிலிருந்து டாக்டர் ஆன்டன் ஜெயசூர்யா சென்னை வந்து ஆங்கில மருத்துவர்களுக்கு அக்குபங்சரை பயிற்சி அளித்து இப்படி டாக்டர் பி கே பாசு மூலமாகவும் டாக்டர் ஆன்டன் ஜெயசூர்யா மூலமாகவும் அக்குபங்சர் இந்தியாவில் பரவ ஆரம்பித்ததை விளக்குகிறது அதேபோல அமெரிக்காவிலும் சீனாவைச் சேர்ந்த மரியம் லீ மற்றும் நியூயார்க் டைம் பத்திரிகை ஆசிரியர் ஜேம்ஸ் ரெஸ்டன் மூலம் அக்குபங்சர் பரவிய விதத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பாரம்பரிய அக்குபங்சர் சிகிச்சை முறை வந்த விதம் மிகவும் அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது 1979இல் அலோபதி மருத்துவரான டாக்டர் பஸ்லூர் ரஹ்மான் மற்றும் டாக்டர் சித்திக் ஜமால் அலோபதி மருத்துவத்தின் முரண்பாடுகளால் அதனை கைவிட்டு முதலில் ஹோமியோபதியையும் பின்னர் மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சரை இந்த தமிழகத்திற்கும் உலகத்திற்கும் அறிமுகப்படுத்திய விதம் மிகவும் அருமை டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அக்குபங்சரின் பல புள்ளி சிகிச்சையில் நிறைவடையாமல் அதன் தத்துவத்தை தேடி ஆராய்ந்து உ வே பிங் எழுதிய சைனீஸ் அக்குபஞ்சர் புத்தகத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு ஒரே ஒரு ஊசியை கொண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களைக் களையலாம் என்ற பழமொழியை படித்து அக்குபங்சரின் ஆணிவேரான தத்துவங்களைப் புரிந்து கொண்டு நாடிப் பரிசோதனையின் மூலம் ஒற்றை புள்ளி சிகிச்சையை உணர்வுபூர்வமாக கண்டறிந்தார் அதனை லட்சக்கணக்கான மக்களுக்கு ஊசி மூலமாகவும் பிறகு தொடு சிகிச்சை மூலமாகவும் ஒரு புள்ளியில் சிகிச்சை அளித்து குணமாக்கி வரலாறு படைத்த அனுபவங்களை அழகாக விளக்கிக் காண முடிகிறது சீனாவிலும் சில ஆண்டுகளுக்கு முன்பே குறைந்த புள்ளியில் சிகிச்சை அளிக்கும் மூன்று புள்ளி அக்குபங்சர் சிகிச்சை பற்றிய தரவுகளை ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது இன்றும் சீனாவில் பழங்கால மரபு முறையிலான ஒற்றை புள்ளி அக்குபங்சர் செய்யும் மருத்துவர்களும் இருக்கக்கூடும் என்று விளக்குகிறது இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடங்கி மற்ற அனைத்து நாடுகளுக்கும் வேகமாக பரவி வரும் இந்த மருந்தில்லா மருத்துவமான ஒற்றை புள்ளி அக்குபங்சர் சிகிச்சை அவை குணமளிக்கும் விதங்கள் இந்தப் புத்தகத்தை படிப்போருக்கு மிகவும் சுவாரசியம் தருவதாகவும் நோயின்றி வாழ வழி வகுப்பதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை நன்றி.
நூலின் தகவல்கள் :
அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை
ஆசிரியர். அஉமர் பாரூக்
வெளியீடு. நம் பதிப்பகம்
பக்கங்கள். 88
நூல் அறிமுகம் எழுதியவர் :
அரு.பாரதி
[email protected]
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.