கவிதை: அடுப்பங்கரைக் காவியம்
************************************
அதிகாலைத் தேநீர்
அதன்பிறகு சிற்றுண்டி
இடைவேளைத் தேநீர்
இரண்டுமணிச் சோறும் குழம்பும்
மண்டைக்குள் எல்லாம்
மசாலாவின் ஞாபகமும்
மாவாட்டும் அரிசியும்
மறந்துவிட்ட பால் தூக்கும்
நாலைந்து மணிக்கெல்லாம்
நறுமணக்கும் தேநீரும்
ஏழெட்டு மணிக்கெல்லாம்
இரவிற்காய்ச் சிற்றுண்டி
பாதித்துயிலில் வந்து
பயறை ஊறவைத்து
இப்படியே இயங்குகின்ற என் அடுப்படியின் ராஜ்ஜியங்கள்
இடை இடையே இங்கே
பல இடைவேளைக் (இடைவேலைக்) காவியங்கள்
கூட்டல் பெருக்கல் கழுவுதல் துவைத்தல்
ஏணி கிடைத்தால்
ஏறிவிட நினைப்பதுண்டு
கொஞ்சம் இருங்கள்…..
என் காவியக்கூடத்தில்
ஏதோ கறிந்த வாசம் வருகிறது
எழுதியவர் :
✍️ அ.அனீஸ் பாத்திமா,
உத்தமபாளையம்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
