தனிமைக்கால தவத்தில் புத்தகங்களே வரங்கள்

இன்றைய நூலின் பெயர்: திப்புவின் வாள்
நூல் ஆசிரியர் : பகவான் எஸ் கித்வானி
(தமிழில் வெ ஜீவானந்தம் )

திப்பு சுல்தான்..

இந்திய வரலாற்றில் அழுத்தமாக பதியபட வேண்டியவன் போகிறபோக்கில் வாசிக்க பட வேண்டிய மன்னராக உருவகப்படுத்தபட்டிருக்கிறார் இன்று. ஆங்கில கிழக்கிந்திய நிறுவன ஆட்சியை பல இந்திய சமஸ்தானங்கள் ஏற்றுக்கொள்ள, சில இந்திய சமஸ்தானங்கள் எதிர்க்க, அப்படி எதிர்த்தவர்களில் முன்னோடி திப்பு..

ஒட்டு மொத்த தென் இந்தியாவும் சரணாகதி அடைய திப்புவின் வாள் மட்டும் உயர்கிறது. அப்படி உயர்ந்த திப்புவின் வாளின் கதையை கூறுகிறது இந்த நூல். திப்புவின் இளமை பருவம் துவங்கி, கடைசி தோட்டா துளைக்கும்வரை விவரிக்கிறது இந்த நூல். 1782 முதல் 1799 வரை மைசூரின் அரசர் திப்பு. நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிகூடம்..

மத வேற்றுமை இல்லாத அரசு..

நவீன ராணுவ படை..

ஆட்சி முழுவதுமே ஆங்கிலேயருக்கு எதிரான போர்..

சந்தித்த துரோகங்கள்..

இப்படி போகிறது இந்த நூல்..

தன் மகன்களை ஆங்கிலேயர்களிடம் பணயம் வைத்து போர் நடத்தும் அத்தியாயங்கள் திப்புவின் மீது பழி சுமத்தும் மதவெறியர்களின் கண்களை திறக்க உதவும். இந்த நூல்தான் ” The sword of Tipu Sultan ” என்ன தொலைக்காட்சி தொடராக வந்து தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது..

வாசியுங்கள்..

ஒரு தேசபக்த போர்வீரனின் வாளின் சாகசங்கள் பிரம்மிக்க வைக்கும்..

பக்கம்: 326
விலை: ரூ 265
வெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *