அகதிகள் (Agathigal) – நூல் அறிமுகம்
அகதிகள் என்ற தலைப்பை பார்க்கும்போது என் மனதில் தோன்றியது, இலங்கை அகதிகள் குறித்த புத்தகமாக இருக்குமோ? என்ற ஆர்வத்தில் பார்த்தேன். ஆனால் இது மேற்கு வங்கத்தின் எல்லையோரம் வாழும் புலம்பெயர்ந்த மக்களின் அடையாளங்களை மையமாகக் கொண்டு புத்தகத்தில் கதையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.
” எழுத்தாளரின் எழுத்தாளர்” என்று வங்க இலக்கிய மொழியில் பேசப்படும் முக்கியான எழுத்தாளர். தேபேஷ் ராய் அவர்கள் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். நாவல், சிறுகதை, கட்டுரைகள் எழுதி சாகித்த அகாதெமி விருதையும் பெற்றுள்ளார். எழுத்தாளர் வங்கமொழியில் எழுதிய” உத்பாஸ்து” என்னும் பெயரில் தமிழ் மொழிபெயர்ப்பில் மிகவும் சவாலாக இருந்ததாகவும் எழுத்தாளர்.சத்தீஸ்வரன் கூறுகிறார்.
அகதிகளில் அப்படி என்ன தான் சொல்லுது?
அப்படி எழுத்தாளர் என்ன தான் சொல்கிறார்? என்று யோசித்துக் கொண்டே வாசிக்க ஆரம்பித்தேன். இந்த உலகம் என்பது பரந்து விரிந்து கிடக்கிறது. இங்கு நிலம், நீர், காற்று, உயிரினங்கள் என்று உலகம் முழுவதும் நிறைந்து இருக்கிறது. இங்கு வாழும் மக்கள் யார் வேண்டும் என்றாலும் எங்கும் பயணிக்கலாம். ஆனால் இங்கு சில மனிதர்கள் சில கட்டுப்பாட்டுகளை வைத்து மதவாதத்தையும், மக்களிடம் பிரிவினையும் விதைத்துவிட்டுச் செல்கிறார்கள். இதை எதிர்த்து பேசும் குரலாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
படுக்கறையில் இருந்தபடி தேநீர் அருந்துவது முழுநாள் பணிக்குச் செல்வது முதல் ஆரம்பாக தொடங்கிறது. ” தேநீர் தயாராகிடுச்சு, குடிச்சிட்டுப் போ, இல்லைனா ஆறிப்போகும்” என்றாள் மனைவி அணிமா. இப்படி தான் தொடங்கியது சத்யப்ரன் அன்றையத் தினம் வாழ்க்கையும் தொடங்கியது.
விடியற்காலையில் இரண்டு பேர் வந்து சத்யப்ரன் ” இன்னைக்கோ, நாளைக்கோ ஸ்டேசன் வந்து இன்ஸ்பெக்டர் பார்க்கனும்” என்று சொல்லிச் சென்றுவிட்டார்கள். பின்பு சத்யப்ரதன் என்ன நடந்தது? எதற்காக அழைத்தார்கள்? என்பது தான் மொத்த புத்தகத்தில் இருக்கும் கதையாகும்.
” நான்தான் நான் என்பதை நிரூபிக்க” என்று சத்யப்ரதன் முதலாளியிடம் கூறிவிட்டு செல்கிறான். இந்த சமூகத்தில் நான் யார் என்று கேள்வி கேட்கும்போது, தன்னை அறியாமல் ஒரு கோபம் மனதில் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும், காரணம் தன் அடையாளத்தை யாரோ ஒருவர் சிதைப்பதாக நினைப்பார்கள். இந்தக் கதையிலும் சத்யப்ரதன், அணிமாவிற்கும் நான் யார் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது.
ஒரு நாட்டில் இருக்கும் மக்களைச் சமமாக நடத்துவது தான் ஜனநாயகமாக இருக்கும். ஆனால் மக்களின் நாடு, இனம், மொழி பார்ப்பதில் சிக்கல் இருப்பதாகவும், ” அசல் நபருக்கான தேடல்” என்ற முறையில் ஐக்கிய நாடுகளின் முடிவின் அடிப்படையில் நடப்பதாக இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. இப்படி பொதுமக்கள் கவனத்திற்கு என்று கூறி அனைவருக்கும் கடிதமும் வழங்கப்படுகிறது.
பல்லவூர் காவல் நிலையத்தில் கிடைக்கப்பெறும் தகவல்கள் வைத்து சத்யப்ரத லாகிரியை ஒன்று, இரண்டு கருத்துகளைக் மையமாக வைத்து காவல் நிலையத்தில் சொல்லப்படுகிறது. விசாரணையின் முடிவுகளில் சத்யப்ரத லாகிரின் பெயரில் அவர்தான் என்ற உண்மைதான் மீண்டும் நிருபிக்க காவல்நிலையத்தில் செல்ல வேண்டியது என்று புத்தகத்தில் இருக்கிறது.
” அசல் நபருக்கான தேடல்” அடுத்ததாக இருப்பது அணிமா, சத்யப்ரத லாகிரியின் மனைவியும் இருக்கிறார். அணிமாவின் பின்னும் முதல் கருத்து, இராண்டாவது கருத்து என்று கதைகள் தொடர்ந்து கொண்டே பயணிக்கிறது. சத்யப்ரதன் மற்றும் அணிமாவின் திருமண வாழ்க்கையே கேள்விக்குறியாக வைத்துக் கருத்துகளும் பேசப்படுகிறது.
கடைசியாக அனைத்து கருத்துகளையும் ஆலோசித்து பார்க்கும்போது,
அணிமா எனாமுல் காதலித்தாளா?
அணிமா எனாமல் சுயவிருப்பத்தோடு திருமணம் செய்தாரா?
அணிமா சத்யப்ரதன் திருமணம் சரிதானா?
அஞ்சனா யாருடைய மகள்?
என்ற கேள்விகளோடு நேரடியாக அவர்களுக்கும் செல்லும் வகையில் இருக்கிறது. இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காத வரையில் உங்கள் மனைவி நீங்கள் அறிந்தரவாக இல்லை, உங்கள் குழந்தை அஞ்சனா உங்கள் குழந்தை இல்லை என்று இருக்கிறது.
சத்யப்ரதன் காவல்நிலையத்தில் இருந்து வந்தபோது இருள் நிறைந்த முகத்தில் இருப்பதை காண முடிந்தது. அணிமாவும் அடிமனதில் சத்யப்ரதன், சத்யப்ரதன் தானே என்று நிலவின் ஒளியில் நம்பிக்கை என்னும் வெளிச்சத்தில் போய் நின்றாள் என்று முடிகிறது.
இந்தப் புத்தகத்தில் இந்தியா- பாகிஸ்தான், வட வியட்நாம்- தென் வியட்நாம், வட கொரியா – தென் கொரியா, கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் அசல் நபருக்கானத் தேடல் இருந்ததைப் புத்தகத்தில் அறிய முடிகிறது. ஒரு தனி மனிதனின் சுயப்பரிசோதனையை செய்வதுபோல் இருப்பதாக நான் புத்தகத்தின் மூலம் உணர்கிறேன். இந்தக் கதை அரைநூற்றாண்டுகள் முன்பு நடந்ததாக எழுத்தாளர். தேபேஷ் ராய் கூறுகிறார். மீண்டும் இப்போதும் குடியுரிமைச்சட்டம் என்ற பெயரில் இந்தியாவில் நுழைவதாகவும் கூறுகிறார். மனிதனின் தனியுரிமையின் மீதான நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், அது அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தொடர்ந்து எளிய மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று தெளிவாக, இந்தப் புத்தகம் புரிய வைக்கிறது.
மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசும் புத்தகமாக இருக்கிறது. எழுத்தாளர்.தேபேஷ் ராய் அவர்கள் சொந்த மக்களே அகதிகளாக இருக்கும் அச்சம் குறித்தும், அவர்களின் வேதனைகள் குறித்தும் அரையாண்டு நூற்றாண்டிற்கு முன்பே கூறியுள்ளது எழுத்தாளரின் பாராட்டிய வேண்டியதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய எழுத்தாளர்.சத்தீஸ்வரனுக்கு நன்றி.
அகதிகள் என்று யாருமில்லை, அனைவரும் மனிதர்களாக ஒன்றிணைவோம்.
நூலின் தகவல்கள் :
நூல் : அகதிகள் (Agathigal)
ஆசிரியர் : தேபேஷ் ராய்
தமிழில் – ஞா.சத்தீஸ்வரன்
பக்கம் : 30 பக்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/agathigal/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.